என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி
ரேசன் கார்டு குறைதீர் கூட்டம்
- வேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்தது
- போட்டோ மாற்றம், செல்போன் எண் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் நடந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேசன் கார்டு சிறப்பு முகாம் இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு அணைக்கட்டு, உள்ளிட்ட 6 தாலுகா அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் ரேசன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், குடும்ப தலைவரின் போட்டோ மாற்றம், மற்றும் செல்போன் எண் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்களின் தரம் குறித்தும் புகார்கள் பெறப்பட்டது. வேலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.






