என் மலர்
வேலூர்
- கணவன்- மனைவி சண்டையால் விரக்தி
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்து பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி லட்சுமி ( வயது 46 ). இருவரும் கூலி தொழிலாளர்கள் . இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது
இதில் மனமுடைந்த லட்சுமி நிலத்தில் இருந்த ஒட்டன் தழையை ( விஷம் ) அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார் . உடனடியாக அவரை , அவரது கணவர் சுந்தரேசன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார் . ஆனால் சிகிச்சை பலன் இன்றி லட்சுமி நேற்று இறந்து விட்டார் .
இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர் .
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது
- ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
குழந்தைகள் தினத்தையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் சத்துவாச்சாரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் ஒவ்வொரு மாணவர்களிடம் தாங்கள் எதுவாக விருப்பம் உள்ளது என கேட்டார். மாணவர்கள் டாக்டர் கலெக்டர் போலீசாக விருப்பம் தெரிவித்தனர்.
கலெக்டராக விருப்பம் தெரிவித்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து, கலெக்டராக எப்படி படிக்க வேண்டும் என்னென்ன படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவிக்கு எடுத்து ரைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்:-
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை 20 ஆண்டுகள் விடுதியில் தங்கி படித்தேன்.
அப்போதெல்லாம் விவசாயம் தேவை இல்லாத தொழில் என ஒதுக்கி வைத்த காலம். நானும் 6 ஆண்டு காலம் விவசாயம் செய்து வந்தேன். அப்போது என்னுடைய பெற்றோர் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து குரூப் ஒன், யு பி எஸ் சி தேர்வு எழுதி வெற்றி பெற்று உதவி கலெக்டராக வேலை செய்து வந்தேன். தற்போது கலெக்டராக உள்ளேன். மாணவர்கள் சிறு வயதிலேயே தாங்கள் என்னவாக வரவேண்டும் என ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கூர்மையாக கவனித்து மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் தின விழாவையொட்டி நடந்தது
- ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
குழந்தைகள் தினத்தையொட்டி வேலூர் சைதாப்பேட்டை பெருமாள் கவுண்டர் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சைதாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அறிவு தமிழ்ச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்றுனர் சுதா ஆகியோர் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியை முல்லைக்கொடி உதவி தலைமை ஆசிரியை கீதா பத்மினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் சக மாணவர்கள் மதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வேலூரில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பேச்சு
- போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்
வேலூர்:
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக ளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவேலூரில் உள்ள ஜே.பி. எம்.மகாலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவரு மான ஜி.வி.சம்பத் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்ரீதரன் சங் கத்தின் ஆண்டு விழா அறிக் கையை வாசித்தார்.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் தலைமை செயல் அலுவலர் கே.எஸ்.விஸ்வநா தன் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் பி.அசோக் சிகாமணி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், சுழற்கோப்பைகள் வழங்கினார். அப்வேபோது அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நல்ல முறையில் இயங்கி வரு வதை காண முடிகிறது. தமிழ கத்தின் அனைத்து மாவட் டங்களிலும் உள்ள கிரிக்கெட் அணிகள் விளையாடுவதற் கான மைதானம் உள்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்ப டுத்தி தரவேண்டும்.
இதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து வகையிலும் உதவி செய்ய தயாராக உள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஏரா ளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி சிறந்த கிரிக் கெட் வீரர்களாக உருவாக வேண்டும் என்றார்.
இதில், தமிழ்நாடு கிரிக் கெட் சங்க துணைசெயலா ளர் டாக்டர் ஆர்.என்.பாபா, வேலூர் மாவட்ட சங்க நிர் வாகிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார், தினேஷ்கு மார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சங்க இணைசெயலாளர் ஜி.நாகராஜன் நன்றி கூறினார்.
- திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது அதிகபட்சமாக நாட்றம்பள்ளி ஆலங்காயத்தில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- திருப்பத்தூர் நகர பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பனப்பாக்கத்தில் 54.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 வீடுகள் முழுவதுமாக இடிந்தது. 5 வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு மாடு பலியானது.
பாலாறு மற்றும் பொன்னை ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 136 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும் 4 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்ற ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது அதிகபட்சமாக நாட்றம்பள்ளி ஆலங்காயத்தில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருப்பத்தூர் நகர பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வந்தவாசி ஜமுனாமரத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன.
சாத்தனூர் அணையில் இருந்து 3500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகர பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குடியாத்தம், திருவலம், பொன்னை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக வேலூர் காட்பாடியில் தெரு சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
தொடர்மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் பெருக்கெடுத்து வரலாம் என்பதால் பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை-26.4, ஆரணி-34, செய்யாறு-37, செங்கம்-32.2, ஜமுனாரமரத்தூர்-65, வந்தவாசி-47.2, போளூர்-26, தண்டராம்பட்டு-8.5, கலசப்பாக்கம்-61.4, சேத்துப்பட்டு-25.7, கீழ்பென்னாத்தூர்-63.6, வெம்பாக்கம்-24.5, திருப்பத்தூர்-78, ஆம்பூர்-27.1, ஆலங்காயம்-96, வாணியம்பாடி-60, நாட்டறம்பள்ளி-96.2, ஆம்பூர் சர்க்கரை ஆலை-68, வேலூர்-17.1, குடியாத்தம்-8.6, மேல்ஆலத்தூர்-13.2, காட்பாடி-5.4, திருவலம்-10.2, பொன்னை-20.2, ராணிப்பேட்டை-28.6, அரக்கோணம்-34.1, மின்னல்-38.6, ஆற்காடு-39.4, காவேரிபாக்கம்-37, பனப்பாக்கம்-54.4, வாலாஜா-19, அம்மூர்-33.2, சோளிங்கர்-23.3, கலவை-25.4.
- உறவினர் வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி மீனூர் மலையில் திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதியினர் எர்த்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த 6-ந் தேதி புதுப்பெண் பரதராமி பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவரை அழைத்து வர சென்றபோது அங்கு அவர் இல்லை.
பிரியாவின் செல்போன் சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது . இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
- இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் தீனதயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சி குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 265 இளைஞர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் 68 பேர் இளைஞர் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு 3 மாதம் பயிற்சி வழங் கப்பட்டு தொடர்ந்து அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் என். செந்தில்குமரன் தலைமை தாங்கினார் .
உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன் வரவேற்றார் . சிறப்பு அழைப்பா ளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. , குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் . சவுந்தரராசன் , குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ந் தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம் . கார்த்திகேயன் , உதவிதிட்ட அலுவலர் மோகன் குமார் உள்பட கலர் கலந்து கொண் டனர் . முடிவில் குடியாத்தம் வட்டார மேலாளர் திவ்யா நன்றி கூறினார் .
- விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் வாரத்தில் 1 நாள் ரொட்டி, பிஸ்கட், பால், முட்டை சுண்டல் வழங்கி அவர்களின் ஆரோக்கியத்தை பேணிகாக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி வேலூர் சேண்பாக்கம் சோளாபுரியம்மன் கோவில் தெருவில் திட்டத் தொடக்க விழா இன்று நடந்தது.
விழாவிற்கு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமை இளைஞரணி மாவட்டத் தலைவர் ஏ. நவீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாரங்கன் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 50 பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால், முட்டை சுண்டல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வெங்கட், நகர தலைவர் ரியாஸ் ஒன்றிய தலைவர் நவீன், நிர்வாகி அம்மு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
- எத்தனை வசதிகள் இருந்தாலும் போட்டோ சரியாக தெரியவில்லை என குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் நீக்கம் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர் அணில் மிஸ்ராம் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தேர்தல் தாசில்தார் ஸ்ரீராம், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது திருத்தம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் 18 வயது தொடங்கியவர்கள் பெயரை சேர்க்கலாமா அப்படி சேர்த்தால் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறுமா.
கடந்த மாநகராட்சி தேர்தலில் போது நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் தனது அடையாள அட்டை மூலம் வாக்களித்தார்.
மேலும் இறந்தவர்கள் பெயரை முழுமையாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவில்லை. இறந்தவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் இறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அனைவருமே இறப்பு சான்றிதழுடன் சென்று பெயரை நீக்க முடியாது.
எனவே இதனை தேர்தல் ஆணையமே கையில் எடுத்துக் கொண்டு இறந்தவர்கள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாநகராட்சி நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் இறப்புச் சான்று வழங்கப்படுகிறது. அப்படி இறப்பு சான்றிதழ் வழங்கும் போது அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் முறையை அமல்படுத்த அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர் பட்டியலில் எத்தனை முறை திருத்தம் செய்தாலும் பெயர் முழுமையாக திருத்தப்படாமல் வருகிறது. அதே போல அடையாள அட்டைகளில் போட்டோ மாறி மாறி வருகிறது. மேலும் பல நவீன வசதிகள் வந்த பிறகும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோ தெளிவாக தெரிவதில்லை.
இது போன்ற தவறுகளை களைய வேண்டும். மாணவ மாணவிகள் எளிதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வலியுறுத்தினர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசிய தாவது
வேலூர் மாவட்டத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் திருத்தம் செய்வது தொடர்பாக முகாம்கள் நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திருத்தம் செய்யப்பட்ட பட்டியல் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட்டு பொதுமக்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தவறு இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம்.
18 வயதானவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தாலும். அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு 18 வயது நிரம்பிய பிறகு பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
தற்போது வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கு வாக்குச்சாவடி முகவர்கள் உதவி செய்ய வேண்டும். ஓட்டு போடும் சமயத்தில் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் 90 சதவீதம் வாக்களிக்க விட மாட்டார்கள்.
தேர்தலுக்கு முன்பாக அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை சரி பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் ஏற்கனவே வாக்குச்சாவடிகள் இயங்கி வருகிறது. அதன் மூலம் மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தில் தாசில்தார் ஸ்ரீராம் கூறுகையில்:-
தற்போது தேர்தல் ஆணையம் voter helpline என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் பதிவேற்றம் செய்து அதில் கேட்கப்படும் பட்டியலை நிரப்பி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை தற்போது எந்த தொகுதியில் எந்த வரிசையில் உள்ளது என்ற விவரம் உங்களுக்கு தெரியும்.மேலும் அதனை நீக்கம் செய்தால் உடனடியாக உங்களுக்கு தெரிந்து விடும் அதன் மூலம் நீங்கள் பட்டியலில் நீக்கப்படுவதை தவிர்க்கலாம் என்றார்.
- நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த போலீசார் அறிவுரை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வ. உ. சி நகரை சேர்ந்தவர் சரவணன் என்பவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 17) டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஆர்டிஓ அலுவலக சாலையில் இருந்து கெங்கை அம்மன் கோவில் பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது.இதில் லாரி டயருக்குள் விக்னேஷ் சிக்கினார்.அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ.அலுவலக ரோடு மற்றும் கெங்கை அம்மன் கோவில் இடையே சாலையை கடக்க சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
+2
- என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
- தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்.
வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார். அங்கிருந்து காரில் ஆண்கள் ஜெயிலுக்கு காரில் வந்தார். பின்னர் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகன், சாந்தன் இருவரும் வெளியே வந்தனர். முருகன் கையை பிடித்து நளினி கண்ணீர் மல்க வரவேற்றார்.
முருகன், சாந்தன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் திருச்சியில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். உடன் அவரது தாய் மற்றும் சகோதரர் தங்கி உள்ளனர்.
பின்னர் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியான ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன், நாங்கள் அதை நினைத்து பல வருடங்கள் வருத்தப்பட்டோம்.
ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் என்னைப் பார்க்க வேண்டிய நேரம் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.
அவர்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துவிட்டனர். அந்த சோகத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
பிரியங்கா காந்தி என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் பத்திரமாக செல்ல வேண்டும் என நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.
நரகம், சாக்கடை, புதைக்குழி, சுடுகாடு அப்படித்தான் சிறை வாழ்க்கையை நினைத்தேன். ஆனால் ஜெயில் ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நிறைய கற்றுக்கொண்டேன்.
சிறையில் இருந்த போது முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். வழக்கு நடந்த போதும் சிறையில் இருந்த போதும் இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள்.
என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
ஜெயிலில் இருந்த போது ஆன்மீகம், யோகா போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினேன். இந்த விடுதலையை ஒரு மிராக்கிளாகவே எனது கணவர் பார்க்கிறார்.
இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்திக்கொண்டே இருந்தோம். பேரறிவாளன் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து அறிந்து வந்தேன்.
7 பேர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் மட்டும் விடுதலையான தகவல் வந்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.
கெங்கையம்மன் கோவிலுக்கு போக வேண்டும். தீமிதிக்க வேண்டும் எனது மகளுக்கு துலாபாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
நீ என் மகாராணி நீ யாரிடமும் கையேந்த கூடாது நான் உன்னை பார்த்து கொள்வேன் என்று எனது கணவர் கூறியுள்ளார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
- உத்தரவு நகல் கிடைத்த நிலையில் நளினி இன்று விடுதலை ஆனார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது. இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.
பரோலில் உள்ள நளினிக்கு விடுதலை தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தது. பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலைக்கான நடைமுறைகளை செயல்படுத்தியது சிறைத்துறை.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி விடுதலை ஆனார். 31 ஆண்டுகள் கழித்து என் மகள் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நளினியின் தாயார் பத்மா தெரிவித்தார்.
நளினியைத் தொடர்ந்து முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.






