என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்"

    • குழந்தைகள் தின விழாவையொட்டி நடந்தது
    • ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    குழந்தைகள் தினத்தையொட்டி வேலூர் சைதாப்பேட்டை பெருமாள் கவுண்டர் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சைதாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அறிவு தமிழ்ச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்றுனர் சுதா ஆகியோர் தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியை முல்லைக்கொடி உதவி தலைமை ஆசிரியை கீதா பத்மினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் சக மாணவர்கள் மதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×