என் மலர்
வேலூர்
- நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- 100 சதவீத வருவாய் இலக்கினை அடைய பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது-
குடியாத்தம் நகராட்சியில் தீவிர வரி வசூல் நடைபெற்று வருகிறது. குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 10 கோடியே 17 லட்சத்தி 99 ஆயிரம் நிலுவையாக உள்ளது.
சொத்து வரி 3கோடியே 22 லட்சத்து 93 ஆயிரம், குடிநீர் கட்டணம் 2 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரம், குத்தகை இனங்களின் பாக்கி 2 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரம், தொழில் வரி 70 லட்சத்து 59 ஆயிரமும், இதர வரி இனங்களாக 90 லட்சமும் நிலுவையில் உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள சிரமமாக உள்ளதால் நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் அல்லது வலைதளம் வாயிலாகவோ செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை கள் எடுக்கப்படும் எனவும் கடை வாடகை நிலுவை வைத்துள்ள நிலுவை தாரர்கள் உடனடியாக 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகையை அபரா தத்துடன் செலுத்தா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மேலும் அதிக வரி பாக்கி நிலுவை வைத்துள்ள நபர்களின் பெயர் பட்டியல் நகரின் முக்கிய பகுதியில் விளம்பரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் நலன் கருதி விடுமுறை தினங்களில் நகராட்சி அலுவலக வரி வசூல் மையம் செயல்படுகிறது எனவும் குடியாத்தம் நகராட்சி 100 சதவீதம் வருவாய் இலக்கினை அடைய பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
- வருவாய்த்துறையினருக்கு வந்த புகார் அடிப்படையில் நடவடிக்கை
- பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணசாமி நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரசு இடத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் குடிசை வீடுகளை இடித்து அகற்றினர்.
இதில் வருவாய்துறை அதிகாரிஅசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 250 கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பறிய உதவியது
- கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய் பிரிவில் லூசி, ஷிம்பா, அக்னி, சாரா, ரீட்டா ஆகிய மோப்பநாய்கள் உள்ளன. இதில் லூசி, சிம்பா ஆகியவை ஓய்வு பெற்றுள்ளன.
தொடர்ந்து இந்த நாய்கள் மோப்பநாய் பிரிவில் பராமரிக்கப்படுகிறது.இந்த நிலையில் மோப்பநாய் ஷிம்பாவிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதற்கு வேலூர் கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
அப்போது ஷிம்பாவுக்கு கேன்சர் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷிம்பா இன்று காலை பரிதாபமாக இறந்தது.
இதனை போலீஸ் மரியாதை உடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
மோப்பநாய் ஷிம்பா கடந்த 2013-ம் ஆண்டு 3 மாத குட்டியாக மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டது. 250 கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் துப்பறிய பயன்படுத்தியுள்ளனர்.
ஏலகிரி மலையில் நடந்த கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் ஷிம்பா முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- வெள்ள அபாய எச்சரிக்கை
- பொதுமக்கள் ஆறுகளை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை பரவலான கன மழை பெய்தது. வரும் நாட்களிலும் மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக -ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 37.72 அடி உயரம் கொண்டது. அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கான நீர்வரத்து முழுவதும் உபரி நீராக ஆற்றில் கலந்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.64 அடி உயரம் கொண்டது.
அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர் மழையால் அணைக்கு வரும் 43.79 கன அடி நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 12 முழுமையாக நிரம்பியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 137 ஏரிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 519 ஏரிகளில் 180 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து 415 கன அடிக்கும், மண்ணாற்றில் இருந்து 100, கல்லாற்றில் இருந்து 50, மலட்டாற்றில் இருந்து 250, அகரம் ஆற்றில் இருந்து 340, மோர்தானாவில் இருந்து 250, பேயாற்றில் இருந்து 40, வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து 20 என பாலாற்றில் 1,460 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
''மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாலாறு, கொட்டாறு, பொன்னையாறு, பேயாற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் ஆறுகளை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ மற்றும் குழந்தைகள் ஆற்றுப்படுகைகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.
- ரூ.82 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் புதிய கட்டிடத்தில் மாற்றப்பட்டுள்ளது.
அதற்கான அலுமினிய தடுப்பறைகள் அமைக்கும் பணிக்கான செலவுகளை குடியாத்தம் கேஎம்ஜி கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, ரோட்டரி உறுப்பினர் டி.பிரபாகரன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அலுமினிய தடுப்பறை பணிகளை கே.எம்.ஜி.ராஜேந்திரன், ஜே.கே.என். பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.கண்ணகி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் எம்.மாறன்பாபு, ஆர்.ஹேமலதா, செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வி.என்.அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஐகோர்ட்டில் சி.எம்.சி. தகவல்
- 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வேலூர்:
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராக்கி செய்த வீடியோ வெளியானது.
இது தொடர்பாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் ராக்கிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிஎம்சி தரப்பில் வக்கீல் ஆஜராகி கல்லூரியில் ராக்கிங் குறித்து புகார் வந்ததும் கல்லூரி முதல்வர் விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் ராக்கிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக போலீசும் வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபண மானால் சட்டப்படி கல்லூ ரியில் இருந்து நீக்கப்படு வார்கள்.
கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும் ராக்கிங்கை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ராக்கிங் தடுப்பு சட்டங்களை கல்லூரி பின்பற்றி வருகிறது என தெரிவித்தனர்.
இதை கேட்ட நீதிபதிகள் பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் இது போன்ற நடக்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் முக்கியம்.
ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கமே பெற்றாலும் பயன் இல்லை. இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
- பொதுமக்கள் பாராட்டு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் வினோத்குமார் (வயது 30) இவருக்ககும் லேகாஸ்ரீ என்பவருக்கும் நேற்று காலையில் பள்ளிகொண்டாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிகுந்த இளைஞரான புது மாப்பிள்ளை வினோத்குமார் தனது திருமணத்தின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார். அதன்படி தான் வசிக்கும் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
நேற்று திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் வினோத்குமார்-லேகா ஸ்ரீ ஆகியோர் அவர்கள் வசிக்கும் விநாயகபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றியகுழு துணை தலைவர் அருண்முரளி, கே. வி.குப்பம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.சீதாராமன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார், கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
மரக்கன்றுகளை நட்ட புதுமண தம்பதிகளை அப்பகுதி பொதுமக்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் வெகுவாக பாராட்டினர்.
- மாறுவேட போட்டிகள் நடந்தது
- குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
குடியாத்தம்:
குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இன்னர்வீல் சங்கம் இணைந்து குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி கள்ளூர் குறிஞ்சி நகர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஷாயிதாஅல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் இன்னர்வீல் சங்கத் தலைவர் கீதாலட்சுமி, செயலாளர் பிரியா, முன்னாள் தலைவர் வசந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.
தொடர்ந்து மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
முடிவில் குடியாத்தம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.
- வேலூர், குடியாத்தம் போலீஸ் நிலையங்களில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
- ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது.
வேலூர்:
காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் அக்னிவீர் ஆண் அக்னிவீர் பெண் (ராணுவ காவல் பணி) சிப்பாய் தொழில்நுட்பம், உதவி நர்சு, உதவி நர்சு (கால்நடை) போன்ற பணியிடங்களுக்கு ராணுவ ஆட்கள் தேர்வு நடக்கிறது.
நேரடி சேர்க்கையின்போது www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அனைத்து ஆவணங்களையும் உரிய படிவத்தில் நேரில் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் எந்தவிதமான தனி நபர் அல்லது முகவர்களை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் நேரில் சென்று சுயமான போலீஸ் சான்று பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் கடைசி நாளான நேற்று போலீஸ் நிலையங்களில் சான்றிதழ் கேட்டு குவிந்தனர்.
இதனால் வேலூர், குடியாத்தம் போலீஸ் நிலையங்களில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
அவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் போலீஸ் சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆன்லைனில் இளைஞர்கள் சுய உறுதிமொழி கொடுத்து புகைப்படம் மற்றும் ஆதார் அட்டைகளை இணைத்து விண்ணப்பிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இளைஞர்களுக்கு சான்று அளிக்க 24 மணி நேரமும் பணியாற்ற போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி சுயசான்று உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டது.
மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து ராணுவ வீரர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு ராணுவ வீரர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர்.
இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று இரவு முதல் மைதானத்திற்கு வர தொடங்கினர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ஆட்டோ மூலம் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு இரவில் சென்றனர்.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன.
- கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும் ராகிங்கை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கமே பெற்றாலும் பயன் இல்லை.
வேலூர்:
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த வீடியோ வெளியானது.
இதுதொடர்பாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிஎம்சி தரப்பில் வக்கீல் ஆஜராகி கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும் கல்லூரி முதல்வர் விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக போலீசும் வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபணமானால் சட்டப்படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும் ராகிங்கை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராகிங் தடுப்பு சட்டங்களை கல்லூரி பின்பற்றி வருகிறது என தெரிவித்தனர்.
இதை கேட்ட நீதிபதிகள் பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் இது போன்று நடக்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் முக்கியம்.
ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கமே பெற்றாலும் பயன் இல்லை. இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதி
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சி செந்தில் நகரில் இரவு முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
மேலும் அப்ப குதியை மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். மழைநீரை வெளியேற்ற வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா ததால் 50-க்கும் மேற்பட்ட அரக்கோணம் திருத்தணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஷவரி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து மறியலை கைவிட செய்தனர்.
கைனூர் செந்தில் நகரிலிருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் முலம் வடமாம்பாக்கம் ஏரிக்கு செல்ல வேண்டும். ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து பலரும் வீடுகள் கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆக்கிர மிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- ஓரளவு மட்டுமே தண்ணீர் உள்ளது
- ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
வேலூர்:
வேலூர் மாநகர மக்களின் குடிநீர் தாகம் தணிக்கும் காரணிகளில் பிரதானமாக இருந்தது ஓட்டேரி. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து இங்கிருந்து தான் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் விநியோகம் நடந்தது.
ஓட்டேரி ஏரிக்கு அருகில் உள்ள குளவிமேடு, கணவாய்மேடு, மாந் தோப்பு கால்வாய், ஓட் டேரி மலைப்பகுதி, நாய்க்கநேரி பகுதியில் பெய்யும் மழை நீர் மட்டுமே முக்கிய நீராதாரமாக இருந்தது.
சுமார் 106 ஏக்கர் பரப் பளவு கொண்ட ஓட்டேரி யில் 140 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். இதனால், வேலூர் நகர மக்களின் குடிநீர் தாகத்தை தணிக்க ஓட்டேரிக்கு பெரும் பங்களிப்பு இருந்தது.
ஆனால், நாளடைவில் ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களில் ஏற்பட்ட ஆக்கிரமப்புகள் காரணமாக ஏரிக்கு தண்ணீர் வரத்து நின்று போனது. வேலூர் மற்றும் ஏரி யின் நீர்பிடிப்பு பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு நீர் வரத்து காணப் பட்டது. வேலூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிந்தாலும் ஓட்டேரியில் பெயரளவில் மட்டுமே நீர் தேங்கியது.
இந்நிலைமை கடந்த ஆண்டு மாறியது. வேலூரில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக ஓட்டேரி பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கோடி போனது. இது வேலூர் நகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தாண்டும் ஓட்டேரி நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாத காரணத்தால் ஓட்டேரியில் ஓரளவு மட்டுமே தண்ணீர் நிரம்பியிருக்கிறது.
இந்நிலையில் பருவ மழை தொடங்கியதால் வெள்ள பாதிப்புகளை தடுக்கு நீர் நிலைகளின் நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஓட்டேரி நிலவரம் குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு நடத்தினார். மாநகராட்சி அப்போது கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வின்போது ஓட் டேரிக்கு தண்ணீர் வழங் கும் நாய்க்கநேரி கால்வாய் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருப்பதாக மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நீர்வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.






