என் மலர்
நீங்கள் தேடியது "ஏரியில் கலெக்டர் ஆய்வு"
- ஓரளவு மட்டுமே தண்ணீர் உள்ளது
- ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
வேலூர்:
வேலூர் மாநகர மக்களின் குடிநீர் தாகம் தணிக்கும் காரணிகளில் பிரதானமாக இருந்தது ஓட்டேரி. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து இங்கிருந்து தான் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் விநியோகம் நடந்தது.
ஓட்டேரி ஏரிக்கு அருகில் உள்ள குளவிமேடு, கணவாய்மேடு, மாந் தோப்பு கால்வாய், ஓட் டேரி மலைப்பகுதி, நாய்க்கநேரி பகுதியில் பெய்யும் மழை நீர் மட்டுமே முக்கிய நீராதாரமாக இருந்தது.
சுமார் 106 ஏக்கர் பரப் பளவு கொண்ட ஓட்டேரி யில் 140 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். இதனால், வேலூர் நகர மக்களின் குடிநீர் தாகத்தை தணிக்க ஓட்டேரிக்கு பெரும் பங்களிப்பு இருந்தது.
ஆனால், நாளடைவில் ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களில் ஏற்பட்ட ஆக்கிரமப்புகள் காரணமாக ஏரிக்கு தண்ணீர் வரத்து நின்று போனது. வேலூர் மற்றும் ஏரி யின் நீர்பிடிப்பு பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு நீர் வரத்து காணப் பட்டது. வேலூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிந்தாலும் ஓட்டேரியில் பெயரளவில் மட்டுமே நீர் தேங்கியது.
இந்நிலைமை கடந்த ஆண்டு மாறியது. வேலூரில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக ஓட்டேரி பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கோடி போனது. இது வேலூர் நகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தாண்டும் ஓட்டேரி நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாத காரணத்தால் ஓட்டேரியில் ஓரளவு மட்டுமே தண்ணீர் நிரம்பியிருக்கிறது.
இந்நிலையில் பருவ மழை தொடங்கியதால் வெள்ள பாதிப்புகளை தடுக்கு நீர் நிலைகளின் நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஓட்டேரி நிலவரம் குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு நடத்தினார். மாநகராட்சி அப்போது கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வின்போது ஓட் டேரிக்கு தண்ணீர் வழங் கும் நாய்க்கநேரி கால்வாய் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருப்பதாக மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நீர்வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.






