என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயம்
    X

    திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயம்

    • உறவினர் வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி மீனூர் மலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    தம்பதியினர் எர்த்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த 6-ந் தேதி புதுப்பெண் பரதராமி பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவரை அழைத்து வர சென்றபோது அங்கு அவர் இல்லை.

    பிரியாவின் செல்போன் சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது . இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×