என் மலர்tooltip icon

    வேலூர்

    • மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்
    • 14-ந்தேதி முதல் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 135 விற்பனை யாளர்கள் மற்றும் 33 கட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற் கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி வரை பெறப்பட்டது.

    தகுதியானவர்களுக்கான நேர்முகத் தேர்வு அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலி டெக்னிக் கல்லூரியில் வருகிற 14-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    நேர்முகத்தேர்வுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித் துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உரிமை கோரலுக்கான ஆதாரமாக கொண்டு வந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

    இந்த தகவலை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

    • மர்மபொருள் வெடித்து நாய் சாவு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூரை அடுத்த ஊசூர் ராஜாபாளையத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 57). இவர் ஒரு நாய் வளர்த்து வந்தார்.

    இந்தநிலையில் அந்த நாய் அங்குள்ள விவசாய நிலத்துக்கு சென்றபோது அங்குள்ள ஏதோ ஒரு மர்மபொருளை கவ்வி உள்ளது. அந்த பொருள் திடீரென வெடித்தது. அதில் வாய் சிதறி நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் வெடித்த பொருள் நாட்டு வெடிகுண்டா என்பது குறித்தும் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டோவில் வந்து துணிகரம்
    • 3 பேர் கைது

    வேலூர்:

    வேலூரை அடுத்த இடையன் சாத்து பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 25). இவர் நேற்று சித்தேரியில் இருந்து இடையஞ்சாத்து செல்லும் சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் திடீ க ரென சத்தியமூர்த்தியை வழிமறித்து கத்தியை காட்டிமிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் சத்தியமூர்த்தியிடம் செல்போன் பறித்தது சேண் பாக்கத்தை சேர்ந்த தங்கராஜ் (24), தொரப்பாடியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), சின்ன சித்தேரியை சேர்ந்த கோபிநாத் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீ சார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் செல்போனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலை கிராமங்கள் துண்டிப்பு
    • 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது

    வேலூர்:

    மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே பாயும் நாகநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் காற்று காரணமாக காத்தாளம்பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரிகோவில் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.

    அமிர்தி நீர்வீழ்ச்சியில் தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அமிர்தி சிறு மிருககாட்சி சாலைக்கு அருகே உள்ள தரைப்பாலும் முழுவதுமாக மூழ்கியுள்ளது.

    தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட மலை குக் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.தற்போதைக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    • 40 வீடுகள் பாதிப்பு
    • உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து ஆய்வு

    வேலூர்:

    மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாநகராட்சி கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் தேங்கி மழை நீர் தேங்கியது.

    இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் நீரின் அளவு அதிகரித்ததால் குடியிருப்புக்குள் புகுந்து கழிவு நீருடன் சேர்ந்து மழை நீரும் தெரு முழுவதும் தேங்கியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தண்ணீரின் அளவு உயராத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கினர். ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தின் போதும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் சம்பத் நகர் பகுதியில் மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதேபோல் நிக்கல்சன் கால்வாய் பகுதியில் குப்பைகள் தேங்காத வாரும் அதனை தூர்வாரும் பணியினையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்

    வேலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் காற்றின் வேகம் குறைவாகவும் மழையின் அளவு குறைவாகவும் உள்ளது. மாலை வரை மழை தொடரும் என கூறி இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    மாவட்டம் முழுவதும் 35 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை தெருக்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகவில்லை. இருந்த போதும் முகாம்களை தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றனர்.

    • வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் எனீஜினீயரிங் கல்லூரி அருகில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது.
    • பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. யாரும் பார்க்காததால் மரம் வெட்டி அகற்றப்படவில்லை.

    வேலூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக அதிகாலை 3 மணியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் பலத்தத காற்று வீசியது. மேலும் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதிகாலை 4 மணிக்கு வேலூர் காட்பாடி குடியாத்தம் பொன்னை பகுதிகளில் கனமழை பெய்தது.

    பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடும் குளிரும் வாட்டி வதைத்தது‌ இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் க்ரீன் சர்க்கிள் திருப்பதி தேவஸ்தானம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. பாதாள சாக்கடை நடந்து வரும் பகுதிகளில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன.

    வேலூர் கோட்டை பின்புறம் உள்ள சம்பத் நகரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அகற்றினர்.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழையில் 22 வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளது. அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருவதால் மழை சேதம் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் எனீஜினீயரிங் கல்லூரி அருகில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. யாரும் பார்க்காததால் மரம் வெட்டி அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது. சாலையில் மரம் சாய்ந்து கிடந்ததை அறியாததால் வேகமாக வந்த பஸ் மரத்தின் மீது மோதியது. இதில் பஸ் ஜன்னல் ஓரம் இருந்த பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இது பற்றி தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மூலம் மரம் வெட்டி அகற்றப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

    ஜமுனாமுத்தூர், கலசப்பாக்கம் ஆரணி பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ததது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற அணைகளில் இருந்தும் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 7.26 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளன.

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வெம்பாக்கம் 2.38, செய்யார் 1.59, வந்தவாசி 82.7, கலசப்பாக்கம் 50, ஜமுனாமரத்தூர் 45.5, ஆரணி 34.2, கீழ்பென்னாத்தூர் 34, போளூர் 25, சேத்பட் 22.2, திருவண்ணாமலை 13.6, தண்டராம்பட்டு 12.4, செங்கம் 9.8 மழை பதிவாகியுள்ளன. வேலூர் 36.5, காட்பாடி 23, குடியாத்தம் 24, கே.வி.குப்பம் 20.8, பேர்ணாம்பட்டு 1, திருவலம் 36.26, பொன்னை 36.2.

    • வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிசை, மண் வீடுகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி செய்யாறு பகுதிகளில் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் மேகம் மந்தமாக காணப்படுகிறது. வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளுக்கு பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்தது. இதனால் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    வேலூரில் இருந்து தினந்தோறும் சென்னைக்கு 10 குளிர்சாதன அரசு பஸ் இயக்கப்படுகிறது. இன்று சுமார் 3 பஸ்கள் மட்டுமே சென்னைக்கு இயக்கப்பட்டன. மேலும் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே சென்றனர்.

    பயணிகள் வருகைக்கு ஏற்ப சென்னைக்கு பஸ் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிசை, மண் வீடுகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கண்காணிப்பு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி முழுவதும் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புயல் கடக்கும் வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியூர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்பு
    • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை, பனி மூட்டம் என சீதோஷ்ண நிலை மாறி, மாறி வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக காலை நேர பனி மூட்டம் பகல் 12 மணி வரை நீடித்து வருகிறது. இரவிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரம் இருக்கிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    ஏற்கெனவே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வரும் நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகள், பயன்படுத்தி வீசப்பட்ட பொருட்களில் எங்காவது கொசுப்புழு வளர்கிறதா? என்பதை கண்டறிந்து அவற்றில் வளர்ந்துள்ள கொசுப்புழுக்களை அழித்து வருகின்றனர்.

    மேலும், தண்ணீர் தேங்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை மருந்தும் அடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் சார்பில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை அளித்தாலும் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    அதன் பிறகு அடுத்தகட்ட முகாம்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    • ஏரி ஆக்கிரமிப்பில் 234 வீடுகளை இடிக்க எதிர்ப்பு
    • கமிஷனரிடம் மனு அளித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் பலவன்சாத்து ஏரி பகுதியில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர்.

    அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் அங்கு சென்று அளவீடு செய்தனர். அதில் சுமார் 234 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் தற்போது 234 வீடுகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பலவன் சாத்து பொதுமக்கள் இன்று காலை வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனவே இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமரிடம் மனு அளித்தனர்.

    அதில் பலவன் சாத்து ஏரி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம்.இதில் பள்ளி மாணவர்கள் குழந்தைகள் முதியவர்கள் உள்ளனர்.

    ஏரி தண்ணீர் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு எப்போதும் வருவது கிடையாது. எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. எனவே இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். மாறாக எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி கமிஷனர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • புயல் மழை எச்சரிக்கை காரணமாக நடவடிக்கை
    • தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

    வேலூர்:

    வேலூர், திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த மாவட்ட ங்களில் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளுவர் பல்கலைகழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் இன்று மற்றும் நாளை நடைபெறும் பருவ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

    • பாலாற்றிலும் நீராட வசதி
    • 400 போலீசார் பாதுகாப்பு

    வேலூர்:

    வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோவிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை கடை ஞாயிறு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதற்கு முந்தைய தினமான சனிக்கிழமை இரவு குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், திருமணம் நடைபெற வேண்டும் பெண்கள் கோவிலில் உள்ள சிம்மக்குளத்தில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் கோவில் வளாகத்தில் படுத்து உறங்குவா். அவா்களது கனவில் சாமி அருள்பாலிப்பாா் என்பது ஐதீகம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்கள்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் சிம்மக்குளம் திறக்கப்படுகிறது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக சிம்மக்குளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த ஆண்டு சிம்மக்குளம் நீராட அனுமதிப்பதால் குளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி தண்ணீா் நிரப்பபட்டுள்ளது.

    பாலாற்றில் இந்த ஆண்டு தண்ணீர் செல்வதால் அங்கும் பெண்கள் நீராட வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பெண்கள் சிம்மக் குளத்தில் நீராடியபிறகு கோவில் உள்புற வளாகத்தில் படுத்து உறங்க அந்த இடத்தில் வழக்கமாக துணி பந்தல் அமைக்கப்படும். தீ தடுப்பு முன்னெச்சரிக்கையாக அந்த இடத்தில் தகர ஷீட்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து.

    சுமார் 50,000 பேர் இந்த சிம்மக்குளம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி விரிஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாளை இரவு 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ப்படுகின்றனர்.

    கோவில் உள்புறம் மற்றும் வாகன நிறுத்துமிடம் விரிஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

    இந்த ஆண்டு பாலாற்றில் நீராட மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விரிஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு இருப்பதால் பஸ்கள் மட்டுமே செதுவாலையிலிருந்து விரிஞ்சிபுரம் உள்ளே அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக ஆட்டோக்கள் செதுவாலை மெயின் ரோட்டில் இருந்து விரிஞ்சிபுரம் பகுதிக்கு வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கடைஞாயிறு விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க படுகின்றன.

    • மாண்டஸ் புயலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும்.
    • புயலின் தாக்கத்தால் இன்று முதல் நாளை வரை மணிக்கு சுமார் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்.

    வேலூர்

    வங்கக் கடலில் உருவாகியுள்ள "மாண்டஸ்" புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாண்டஸ் புயலின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும்.

    புயலின் தாக்கத்தால் இன்று முதல் நாளை வரை மணிக்கு சுமார் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த கனமழையின் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் உயர்மின்அழுத்த கோபுரங்கள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்கவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ மற்றும் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், பால்பொருட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் டார்ச் ஆகியவற்றினை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் புயல் கரையை கடந்த பின்பும், புயலின் தாக்கங்கள் குறையும் வரையிலும் மற்றும் அரசினால் அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியிடும் வரையிலும் பொதுமக்கள் தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×