என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாநகராட்சி முன்பு கொட்டும் மழையில் போராட்டம்
    X

    வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே கொட்டும் மழையில் போராட்டத்திற்கு திரண்டவர்களை படத்தில் காணலாம்.

    வேலூர் மாநகராட்சி முன்பு கொட்டும் மழையில் போராட்டம்

    • ஏரி ஆக்கிரமிப்பில் 234 வீடுகளை இடிக்க எதிர்ப்பு
    • கமிஷனரிடம் மனு அளித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் பலவன்சாத்து ஏரி பகுதியில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர்.

    அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் அங்கு சென்று அளவீடு செய்தனர். அதில் சுமார் 234 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் தற்போது 234 வீடுகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பலவன் சாத்து பொதுமக்கள் இன்று காலை வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனவே இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமரிடம் மனு அளித்தனர்.

    அதில் பலவன் சாத்து ஏரி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம்.இதில் பள்ளி மாணவர்கள் குழந்தைகள் முதியவர்கள் உள்ளனர்.

    ஏரி தண்ணீர் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு எப்போதும் வருவது கிடையாது. எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. எனவே இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். மாறாக எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி கமிஷனர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×