என் மலர்
வேலூர்
- நள்ளிரவில் கோ பூஜை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
கத்தாழம்பட்டு அடுத்த லட்சுமியுரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் 1008 சகஸ்ர தீபம் ஏற்றி 108 சங்காபிஷேகம் செய்து கார்த்திகை கடைசி சோமவார விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவில் 16 கோபூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், கத்தாழம்பட்டு அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நேற்று இரவு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுவாமிக்கு முதலில் ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் 1008 சகஸ்ர தீபங்கள் ஏற்றியும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.
கால்நடைகள் நோய் வராமல் இருக்கவும் அப்பகுதி இருக்கும் அணைத்து பசுக்களையும் ஆலயத்திற்க்கு அழைத்து வந்து நள்ளிரவில் கோபூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சுற்றுப்பகுதியில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கார்த்திகை கடைசி சோமவார விழாவிலும் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கைலா சநாதரை வழிபட்டனர்.
இதனைய டுத்து அனை வருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்ப ட்டது.
- திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 48) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகில் இருக்கும் குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.
பிரகாஷ் சக நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு பிரகாஷ் நீரில் மூழ்க்கி உள்ளே சென்றுள்ளார்.
இதனைப்பார்த்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு பார்த்த போது அவர் இறந்து தெரியவந்தது. இதனையடுத்து அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டனர்.
தகவலறிந்து விறைந்து வந்த போலீசார் பிரகாஷ் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அடுக்கம்பரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- மலர்கள் தூவி, இனிப்பு கொடுத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை அதிக அளவில் கால்வாய் மூலம் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தண்ணீராலும் தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பி வழிந்தது.
இதேபோல் செட்டிகுப்பம் ஓட்டேரியும் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிகிறது. ஏரி நிரம்பி வழியும் பகுதியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மலர்கள் தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ். சாந்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நத்தம்பிரதீஷ், செட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி. மலர்வேணி, செல்விபாபு உட்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஏரி பாசன சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்
- நாராயணி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
வேலூர்:
ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் சக்தி அம்மா ஆசி யோடு, மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் தலையில் இருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
பிளாஸ்டிக் அறுவைசி கிச்சை நிபுணர் ஸ்ரீனிவாஸ், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் திவ்யா, வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். அவர்களை, மருத்துவமனை இயக்குனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் என்.பாலாஜி பாராட் டினார்.
- பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் நனைந்தபடி சென்றனர்
- மாலை 3 மணிக்கு விடுமுறை அறிவிப்பு
வேலூர்:
மாண்டஸ் புயலை தொடர்ந்து ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு ஆகிய வட்டா ரங்களில் கனமழை பெய்தது. இதனால் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.இது குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் நனைந்தபடி சென்றனர். வேலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 3 மணிக்கு பள்ளிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுமுறை அறிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து மேலும் அதிக ரித்துள்ளது. பாலாற்றில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகள் உள்ளன. இதில் நேற்று வரை 194 ஏரிகள் நிரம்பியது. ஒரே நாளில் மேலும் 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மாவட்டத்தில் 204 ஏரிகள் நிரம்பி கோடிப் போகிறது. 56 ஏரிகள் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்ற ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் கிராமத்தில் குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரேசன் கடை செயல்பட்டு வந்தது இந்த ரேசன் கடையில் 2 ஆயிரத்து 120 ரேசன் அட்டைகள் உள்ளன.
இந்த ரேசன் கடையில் சித்தூர் கேட் முனாபாடிப்போ, லட்சுமணாபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி சென்று வந்தனர் அதிகமான ரேசன் அட்டைகள் உள்ளதால் ரேஷனில் பொருட்கள் போடும்போது இங்கு திருவிழா போல் இருந்தது அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
கள்ளூர் ரேசன் கடை பெரிதாக உள்ளதால் அதனை பிரித்து அந்தந்த பகுதியில் ரேசன் கடையில் அமைத்துதருமாறு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் லட்சுமணாபுரம் கிராமத்தில் தனியாக ரேசன் கடை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இதைத்தொடர்ந்து லட்சுமணாபுரத்தில் புதிதாக ரேசன் கடை அமைக்கப்பட்டது இந்த ரேசன் கடையில் 640 குடும்ப அட்டைகள் உள்ளன.
புதிய ரேசன் கடை திறப்பு விழாவிற்கு குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.சிவா தலைமை தாங்கினார்.குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ஜி. பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் வி.ரவி நன்றி கூறினார்.
- குடியாத்தத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
- பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு
குடியாத்தம்:
தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பாலும், நேற்று இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், மோர்தானா அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆதாரமான ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள பெரிய ஏரியான மாடிஏரி நிரம்பி வழிவதால் மோர்தானா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. அணை 8 சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து அணையின் நீர்மட்டம் 11.58 மீட்டராக உயர்ந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மோர்தானா அணையிலிருந்து வினாடிக்கு 708 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.
அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து மோர்தானா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்யா மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
குடியாத்தம் தாலுகா போலீசார் மோர்தானா அணை வெள்ளநீர் வழிந்தோடும் கவுண்டன்யா மகாநதி ஆறு செல்லும் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.
வேலூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் குடியாத்தம் உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மோர்தானா அணை வெள்ளநீர் செல்லும் பாதைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் மேலும் குடியாத்தம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் வலதுபுற, இடதுபுறம் மோர்தானா அணை கால்வாய்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி இருந்தது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிறப்பாக கட்ட மைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வந்தது.
106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஏரிக்கு நாயக்கநேரி கால்வாய், குளவிமேடு கால்வாய், மாந்தோப்பு கால்வாய், கணவாய்மேடு கால் வாய், பாலமதி மலை, ஓட்டேரி மலையில் இருந்து வரும் மழை நீர்தான் முக்கிய நீர்வரத்தாக உள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக ஓட்டேரி ஏரி நீர்வரத்து பகுதியில் மலைகளில் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகள் இயற்கை எழில் கொஞ்சம் மலையில் கண்களுக்கு விருந்தாக காட்சி அளிக்கிறது.
மலைகளிலிருந்து ஓட்டேரி ஏரிக்கு அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏரியில் 40 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது நீர்வரத்து ஏற்பட்டேள்ளதால் ஏரி மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளது. அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டேரி ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதை முறையாக பராமரித்தால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏரிக்கு நீர்வரத்து இருக்கும்.
சுற்று வட்டார நிலத்தடி நீராதாரமும் பாதுகாக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தண்ணீர் புகாமல் இருக்க நடவடிக்கை
- மழை நிற்கும் வரை இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்தாண்டு நவம்பர் மாதம் மழையால் தண்ணீர் புகுந்தது. இதனால் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது.
இதனிடையே கோவிலில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தண்ணீர் வெளியேறவில்லை.
பின்னர் நாளடைவில் தண்ணீர்வற்றியது.
தற்போது வேலூரில் மழை பெய்து வருவதால் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. அகழிநீர் வெளியேற வாய்ப்பில்லாததால் கோவிலுக்குள் வரும் சூழல் நிலவுகிறது.
இதனை கருத்தில் கொண்டு வேலூர் மாநகரட்சி நிர்வாகம் சார்பில் கோட்டைக்கு பின்புறம் அகழியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கான 10 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார் வாங்கப்பட்டு அங்கு பொருத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த குழாய் மூலம் ஒரு நிமிடத்துக்கு 2 ஆயிரம் லிட்டர் அகழிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நிற்கும் வரை இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்ற உத்தரவு
- அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி ஆகும். 400 ஏக்கர் பரப்பளவு, 100 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது தற்போது இந்த நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நிரம்பும் நிலையில் உள்ள குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியை நேற்று மாலையில் அதிகாரி களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குடியாத்தம்-பேர்ணாம்பட்டு சாலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே திருமண மண்டபங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ள பகுதியில் மழைக்காலங்கள் மற்றும் பல நாட்களாக மழைநீர் நெடுஞ்சாலையில் தேங்கி போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக இருந்து வந்தது.
நேற்று நெல்லூர் பேட்டை பெரிய ஏரியை பார்வையிட வந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் நேற்று இரவு குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் டி.வசுமதி, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி உட்பட வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், நெடுஞ்சாலை துறையினர் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
- கடை ஞாயிறு விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
'திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல்வழக்கு. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திரு முடியை கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராணமாகும்.
பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.
முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலுக்கு அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம். அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.
இவ்வாறு பழம் பெருமை வாய்ந்த மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு விழாவானது நேற்று நள்ளிரவு 11.55 மணியளவில் சிம்மகுளம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12.00 திறக்கப்பட்டது.
இதில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தார். சிம்ம குளம் சிறப்பு பூஜையில் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு மற்றம் பலர் கலந்து கொண்டனர்.
சிம்ம குளம் திறந்த பின்னர் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெண்கள் சிம்ம குளத்தில் நீராட அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிம்ம குளத்தில் நீராடி கோபுர வாசலில் படுத்து இறைவனை நோக்கி குழந்தை வரம் வேண்டினர். மேலும் கார்த்திகை கடை ஞாயிறு விழாவில் தமிழக மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவில் கூட்டம் கூட்டமாக வருகை தந்திருந்தனர்.
- பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என அதிகாரி எச்சரிக்கை
- பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு மழைப்பகுதியில் தொடர் மழையால் இந்தாண்டு 5வது முறையாக உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 2 தரை பாலத்தின் மீதும் தண்ணீர் மூழ்கி செல்வதால் ஆற்றை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளர்.
புயல் மழை
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. அதேபோல், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு தீர்த்தம் பகுதிகளில் உருவாகும் உத்திர காவிரி ஆற்றில் தொடர் மழையால் திடீர் காட்டாற்று வெள்ளம் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மேலரசம்பட்டு கிராமத்தில் இருந்து தீர்த்தம் கிராமத்திற்கு இடையே செல்லும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரை பாலம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. இதனால் மேலசம்பட்டு பகுதியில் இருந்து தீர்த்தம் செல்லும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் ஒடுகத்தூரில் இருந்து நேமந்தபுரம் செல்லும் சாலையின் குருக்கே அமைந்துள்ள தரைப்பாலமும் மூழ்கி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போனதால், அவ்வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். இதனால் இயல்பு வாழ்க்கை பெரியதாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆற்றில் வரக்கூடிய வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் தரை பாலத்தை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை அவ்வழியக்க அழைத்து செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






