என் மலர்tooltip icon

    வேலூர்

    • குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசல்
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்யமகாநதி ஆறு செல்கிறது.இப்பகுதியில் உள்ளவர்கள் அப்பகுதிக்குச் செல்ல காமராஜர் பாலம் உள்ளது. மற்றொருபுறம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் உள்ளது.

    இந்த இரண்டு வழித்தடங்களில் தான் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வெளியூரிலிருந்து வரும் வாகனங்களும் இந்த வழியை தான் பயன்படுத்தி வர வேண்டும் வேறு வழி இல்லை. அதேபோல் ஆற்றின் வழியே அங்கங்கே சிறு வழிகள் உள்ளது.

    மோர்தானா அணை கடந்த பல மாதங்களாக நிரம்பி வழிவதால் கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் மேல்வெள்ளம் சென்றால் அப்பகுதியில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

    நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுனன்முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார் சந்தப்பேட்டை பஜார் வரை பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது பல சாலைகளிலும் போக்கு வரத்து நெரிசலாகவே இருந்தது.

    போக்குவரத்து நெரிசல் கண்டதும் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி பெரியார் சிலை அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.

    சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் கனரக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    உடனடியாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் குடியாத்தத்தில் மழைக்கா லங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிக அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக அரசு உட னடியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை மேம்பாலம் ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே நாய் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
    • கிணற்றில் எதிர்பாராத விதமாக நாய்குட்டி தவறி விழுந்து விட்டது.

    வேலூர்:

    காட்பாடி ஜாப்ராபேட்டை ஜி.என்.நகர் மணவாளமோடு பகுதியை சேர்ந்தவர். குமரேசன் என்கிற வல்லரசு (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி என்ற மனைவி 3 மகன்கள் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே நாய் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்போது கிணற்றில் எதிர்பாராத விதமாக நாய்குட்டி தவறி விழுந்து விட்டது.

    அதனை பார்த்த குமரேசன் கயிறு மூலம் வாளியை கட்டி நாய் குட்டியை காப்பாற்ற முயற்சி செய்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கும், காட்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்து பலியான குமரேசன் உடலை மீட்கும் பணியில் நேற்று முன்தினம் முழுவதும் ஈடுபட்டனர். இருப்பினும் உடலை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையில் நேற்று பாதாளசங்கலியை கொண்டு வந்து குமரேசன் உடலை தேடினர். இருந்தும் கிடைக்காததால் கிணற்று நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி பிணத்தை மீட்டனர். பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அச்சம்
    • பணம், நகை இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிய கும்பல்

    வேலூர்:

    காட்பாடி தாராபட வீடு பாலாஜி நகர் பகுதியில் நேற்று மர்ம கும்பல் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.அங்குள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் கும்பல் ஏமாற்றுத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்ட உரிமையாளர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியே செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்

    அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பேச்சு
    • உழவர் களஞ்சியம், கண்காட்சி துவக்க விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உழவர் களஞ்சியம் மற்றும் கண்காட்சி துவக்க விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பதிவாளர் ஜெயபாரதி இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி .வி.செல்வம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம்,வேளாண்மை துறை கூடுதல இயக்குனர் ராஜேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உழவர் களஞ்சியம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவது மகிழ்ச்சி அடைகிறது.

    கடந்த ஒரு ஆண்டாக பாலாற்றில் தண்ணீர் வற்றாமல் சென்று கொண்டு உள்ளது. நான் வக்கீலாக, அமைச்சராக, வேந்தராக, எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் அடிப்படையில் நானும் ஒரு விவசாயி தான்.

    என்னுடைய தந்தை தேங்காயை விற்று என்னை படிக்க வைத்தார். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை உண்டு ஆனால் விவசாயிகளுக்கு விடுமுறையே கிடையாது எனவே விவசாயிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்க முடியுமா என நாம் சிந்திக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிலேயே வட ஆற்காடு தின்ன ஆற்காடு மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்களாக மாற்றி காட்ட வேண்டும் கல்வி பொருளாதாரத்தில் நம்முடைய மாவட்டங்கள் பின்தங்கி இருந்தது.

    தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிரப்பரப்பில் நாலு சதவீதமும் மக்கள் தொகையில் ஏழு சதவீதமும் நீர் ஆதாரம் 3 சதவீதம் உள்ளது இதை வைத்துக்கொண்டு விவசாயிகள் விவசாயத்தில் வெற்றிக்கான வேண்டும். சீனாவில் நம்மை விட குறைந்த அளவு நிலப்பரப்பு உள்ளது ஆனால் அவர்கள் நம்மை விட இரண்டு மடங்கு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    கடந்த 1995 முதல் 2014 வரை கடன் தொல்லையால் 2.91 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

    விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த 2021-ல் ஒரு நாளைக்கு 15 பேர் தற்கொலை கொண்டனர் மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    அடுத்தது கர்நாடகா, ஆந்திரா ,மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனாக விவசாயிகளின் நிலம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்யும்போது அவமானத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர் அரசுகள் இதனை கவனிக்க வேண்டும். ரூ 10 ,20 ஆயிரம் கோடி கடன் பெறுபவர்கள் பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

    தமிழகத்தில் ஆறு ஏரி கால்வாய்களை சரிவர குடிமராமத்து பணி செய்யவில்லை தமிழ்நாட்டில் மொத்தம் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தது தற்போது 39 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் ஏரிகள் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும். மழைக்காலங்களில் 500 முதல் 1000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலக்கிறது. மேட்டூர் வைகை அணைகளை தூர்வாராததால் 30 சதவீத அளவுக்கு நீர் இருப்பு குறைந்து விட்டது எனவே அணைகளில் இருந்து மண் மணலை தூர்வாரி அகற்ற வேண்டும் பாலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இரண்டு தடுப்பணைகள் மட்டும் தான் உள்ளது ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 17 தடுப்பணைகள் கட்டினார்.

    அந்த தடுப்பணைகளை தாண்டித்தான் பாலாற்றில் வெள்ளம் வருகிறது. விவசாயிகள் வேளாண் பொருள் உற்பத்தி திறனை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும் இவ்வாறு பேசினார் விதி எடுத்து வேளாண் பொருட்கள் கண்காட்சியை வேந்தர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    • மேளதாளம் முழங்க அடக்கம் செய்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூரை அடுத்த ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது50). பூதூர் ஊராட்சி மன்ற தலைவி கவிதாவின் கனவர்.

    இவர் அஞ்சா சிங்கம் என்ற பெயரில் காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். 17 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த இந்த காளை ஒவ்வொரு ஆண்டும், சுற்றுவட்டாரத்தில் நடக்கும் எருது விடும் விழாவில், பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.

    சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்த காளை மாட்டிற்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த காளை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

    அந்த காளைக்கு , மேள தாளம், கண்ணீர் அஞ்சலி பேனர், பட்டாடைகள் மற்றும் மலர் மாலைகள் கொண்டு இறுதி சடங்குகளை செய்தனர்.

    கிராம மக்கள், ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் காளை மாட்டிற்கு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து காளை மாடு அடக்கம் செய்யப்பட்டது.

    • அதிகாரிகள் நேரில் ஆய்வு
    • வெள்ள தடுப்புச் சுவர் கட்ட வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மேல் ஆலத்தூர் ஊராட்சி நத்தமேடு பகுதி மற்றும் ஆலாம்பட்டறை செல்லும் வழியில் உள்ள பாலம் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையாலும், கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெ ருக்காலும் அடித்துச் செல்லப்பட்டு பல நாட்கள் அந்த கிரா மங்கள் துண்டிக்கப்பட்டது.

    மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி குடியாத்தம் வந்தனர்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் கடந்தாண்டு போர்க்கால அடிப்படையில் நத்தமேடு பகுதியில் தற்காலிகமாக இரும்பு பாலமும், அதன் அருகிலேயே ராட்சத பைப்புகள் வைத்து பாலமும் அமைக்கப்பட்டது அதனை கலெக்டர் பார்வையிட்டார் கடந்த ஓராண்டாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த சில நாட்களாக கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனுடைய வெள்ளம் ஒரு பகுதி இந்திரா நகர் ெரயில்வே மேம்பாலம் கீழே பிரிந்து நத்தமேடு வழியாக செல்கிறது அப்போது அந்த தற்காலிக பாலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சேதம் ஏற்பட்ட தற்காலிக பாலங்களை குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், ஆர். திருமலை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது உடனடியா கும் இந்த பாலங்களைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து ஆலாம்பட்டறை பகுதியில் பழுதடைந்த பாலத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தப் பாலத்தையும் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொது மக்களிடம் தெரிவித்தனர்.

    அப்போது பொதுமக்கள் இந்திரா நகர் ெரயில்வே மேம்பாலம் கீழிருந்து ஆலாம்பட்டறை செல்லும் வழியில் இந்த கவுண்டன்ய மகாநதி ஆற்று வெள்ளத்தால் சாலைகள் அரித்து செல்லப்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை எனவும் இப்பகுதியில் உள்ள 2 ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்களைக் கொண்டு வர கனரக வாகனங்கள் வர வழியில்லை எனவும் தொடர்ந்து இப்பகுதியில் கவுண்டன்யா மகாநதி பிரிந்து செல்லும் ஆற்றில் இரு பக்கமும் வெள்ள தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நத்தம் பிரதீஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.சுஜாதா ராஜ்குமார், செல்விசுஜானி ஒன்றிய குழு உறுப்பினர் செல்விபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மனைவி போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே வேலைக்கு செல்வதாக கூறிசென்ற இளைஞர் ஒரு மாதமாக காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

    ஒடுகத்தூர் அருகே உள்ள கீழ்கொத்தூர், தண்டையான்கோட்டை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியானவர் விஜய் (வயது 24). இவருக்கு திருமணமாகி தேவையானி (22) என்ற மனைவி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். சென்ற அடுத்த நாள் முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டள்ளது.

    மேலும் இவரை பற்றி அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டுமென வேப்பங்குப்பம் போலீசாரிடம் தேவையானி நேற்று புகார் கொடுத்தார்.

    இதன் சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து கானாமல் போன அவரை தேடி வருகின்றனர்.

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • 8 கி.மீ. தொலைவுக்கு நடைப் பயணம் சென்றனர்

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உழவர் களஞ்சியம் மற்றும் கண்காட்சி துவக்க விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பதிவாளர் ஜெயபாரதி இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி .வி.செல்வம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குமாரசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம்,வேளாண்மை துறை கூடுதல இயக்குனர் ராஜேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உழவர் களஞ்சியம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவது மகிழ்ச்சி அடைகிறது.

    கடந்த ஒரு ஆண்டாக பாலாற்றில் தண்ணீர் வற்றாமல் சென்று கொண்டு உள்ளது. நான் வக்கீலாக, அமைச்சராக, வேந்தராக, எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் அடிப்படையில் நானும் ஒரு விவசாயி தான். என்னுடைய தந்தை தேங்காயை விற்று என்னை படிக்க வைத்தார்.

    அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை உண்டு ஆனால் விவசாயிகளுக்கு விடுமுறையே கிடையாது எனவே விவசாயிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்க முடியுமா என நாம் சிந்திக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிலேயே வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்களாக மாற்றி காட்ட வேண்டும் கல்வி பொருளாதாரத்தில் நம்முடைய மாவட்டங்கள் பின்தங்கி இருந்தது.

    தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிரப்பரப்பில் நாலு சதவீதமும் மக்கள் தொகையில் ஏழு சதவீதமும் நீர் ஆதாரம் 3 சதவீதம் உள்ளது இதை வைத்துக்கொண்டு விவசாயிகள் விவசாயத்தில் வெற்றிக்கான வேண்டும்.

    சீனாவில் நம்மை விட குறைந்த அளவு நிலப்பரப்பு உள்ளது ஆனால் அவர்கள் நம்மை விட 2 மடங்கு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    கடந்த 1995 முதல் 2014 வரை கடன் தொல்லையால் 2.91 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

    விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2021-ல் ஒரு நாளைக்கு 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர் மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    அடுத்தது கர்நாடகா, ஆந்திரா ,மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. விவசாயிகள் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் நிலம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்யும்போது அவமானத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர் அரசுகள் இதனை கவனிக்க வேண்டும். ரூ 10 ,20 ஆயிரம் கோடி கடன் பெறுபவர்கள் பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

    நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

    தமிழகத்தில் ஆறு ஏரி கால்வாய்களை சரிவர குடிமராமத்து பணி செய்யவில்லை தமிழ்நாட்டில் மொத்தம் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தது தற்போது 39 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

    நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் ஏரிகள் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும். மழைக்காலங்களில் 500 முதல் 1000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலக்கிறது.

    மேட்டூர் வைகை அணைகளை தூர்வாராததால் 30 சதவீத அளவுக்கு நீர் இருப்பு குறைந்து விட்டது அணைகளில் இருந்து தூர்வாரி அகற்ற வேண்டும் பாலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இரண்டு தடுப்பணைகள் மட்டும் தான் உள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 17 தடுப்பணைகள் கட்டினார்.அந்த தடுப்பணைகளை தாண்டித்தான் பாலாற்றில் வெள்ளம் வருகிறது. விவசாயிகள் வேளாண் பொருள் உற்பத்தி திறனை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து வேளாண் பொருட்கள் கண்காட்சியை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    • வெங்கடேசனை கொலை செய்த அவரது நண்பர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
    • மது, கஞ்சா விற்பனை தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு வெங்கடேசன் (வயது 22), மணிகண்டன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் வெங்கடேசன் பாலிடெக்னிக் படித்து முடித்துள்ளார்.

    கடந்த 9-ந் தேதி மாலை 3.30 மணிக்கு வெங்கடேசன் தன்னுடைய தாயார் பாரதியிடம் வேலை தேடி செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெங்கடேசன் தம்பி மணிகண்டனின் வாட்ஸ் அப்புக்கு ஒரு படம் வந்துள்ளது. அதில் வெங்கடேசன் வெட்டப்பட்டு ரத்தகாயத்துடன் இருப்பது போல் இருந்தது.

    இது குறித்து அவர் வெங்கடேசனின் நண்பர் நிர்மல் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது நிர்மல், வெங்கடேசனை யாரோ கூட்டி சென்று அடித்துப் போட்டு விட்டதாகவும், அதனை நான் கூறினால் என்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் என தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் வெங்கடேசனின் தாயார் பாரதி நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனின் நண்பர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் வெங்கடேசனை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து கசம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் சுவரை ஒட்டி பள்ளம் தோண்டி புதைத்தது தெரிய வந்தது.

    காட்பாடி டி.எஸ்.பி. பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் கசம் பகுதிக்கு சென்றனர். அங்கு வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

    பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    வெங்கடேசனை கொலை செய்த அவரது நண்பர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.அந்த படத்தை தம்பிக்கு அனுப்பியதால் மாட்டிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

    மது, கஞ்சா விற்பனை தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த கொலையில் வெங்கடேசனின் நண்பர்கள் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்த பிறகு முழுமையான விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஊழியர்கள் 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ராணிப்பேட்டை வக்கீல் தெருவை சேர்ந்தவர் வேதாராம்.இவர் வேலூர் சாய்நாதபுரம் மற்றும் காட்பாடியில் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.

    காட்பாடியில் உள்ள இவருக்கு சொந்தமான பைக் ஷோரூமில் வேலூர் மாவட்டம் மோட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொற்செல்வன் (வயது 30) அல்லாபுரம் விக்னேஷ் (23) வடுகன் தாங்கல் பிரசாந்த் (29) தினேஷ்குமார் (33) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் நான்கு பேரும் கடந்த ஜனவரி மாத முதல் நவம்பர் மாதம் வரை உரிமையாளருக்கு தெரியாமல் 40 வாகனங்களை விற்பனை செய்தனர். அந்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் சேர்க்கவில்லை. இதனால் பைக் வாங்கியவர்கள் தங்களது வாகனங்களுக்கு பதிவு எண் பெற முடியவில்லை.

    நீண்ட நாட்களாக பதிவு எண் பெற முடியாததால் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து வேதாராமிடம் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக காட்பாடி பைக் ஷோரூமில் அவர் கணக்குப்பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    அப்போது 4 பேரும் சேர்ந்து 40 வாகனங்களை சுமார் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வேதாராம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், பிரசாந்த், தினேஷ் ஆகியயோரை கைது செய்தனர். பொற்செல்வனை தேடி வருகின்றனர் ‌.

    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
    • வாட்ஸ்-அப்பில் வந்த தகவலை பார்த்து ஏமாந்தனர்

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள நாயக்கனேரியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33) இவர் அடுக்கம்பாறை அடுத்துள்ள கட்டுபடி கூட்ரோட்டில் கிரானைட் கற்கள் விற்பனை செய்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் மொத்த விலையில் கிரானைட் விற்பனை செய்வதாக பதிவு ஒன்று வந்தது. அதில் வந்த செல்போன் நம்பரை ராஜேஸ் தொடர்பு கொண்டார். அப்போது மர்மநபர்கள் குறைந்த விலைக்கு கிரானைட் கற்கள் விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனை நம்பிய ராஜேஷ் அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் கிரானைட் கற்கள் ரகங்கள் அடிப்படையில் குறைந்த விலைக்கு தருவதாக தெரிவித்தனர். மேலும் முன்பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை நம்பிய ராஜேஷ் காகித பட்டறையில் கிராணைட் விற்பனை செய்து வரும் அவரது நண்பர் ஒருவருக்கும் தகவல் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் மர்ம நபர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினர்.

    அதற்குப் பிறகு அவர்கள் கூறியபடி கிரானைட் கற்கள் வந்து சேரவில்லை. மேலும் அவர்களை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அப்போதுதான் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்தனர்.

    இது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசில் ராஜேஷ் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. எந்த காரணத்தைக் கொண்டும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த வேண்டாம். தங்களுடைய வங்கி விவரங்களை யாருக்கும் கூற வேண்டாம் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிறைவு விழாவிற்கு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.

    வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர், சுஜாதா ஆனந்தகுமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.திருநாவுக்கரசு ஆசிரியர் தமிழ்திருமால், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர்கள் எ.ஜெயதேவரெட்டி, சண்முகம், எஸ்.எஸ்.சிவவடிவு, கோ.பழனி, எம்.மகேந்திரன், எஸ்.சுரேஷ், கே.கார்த்திகேயன், எம்.சினேகலதா, பேபி, லதா சங்கர், சித்தார்த்தன், உதவித்தலைமையாசிரியர் குமரன், தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் க.ராஜா, பாரத சாரண சாரணீய மாவட்ட செயலாளர் எ.சிவக்குமார் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆ.மணிவாசகம், ஷைனி வட்டார மேற்பார்வையாளர்கள், தலைமையாரியர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×