என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Damage to bridges"

    • அதிகாரிகள் நேரில் ஆய்வு
    • வெள்ள தடுப்புச் சுவர் கட்ட வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மேல் ஆலத்தூர் ஊராட்சி நத்தமேடு பகுதி மற்றும் ஆலாம்பட்டறை செல்லும் வழியில் உள்ள பாலம் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையாலும், கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெ ருக்காலும் அடித்துச் செல்லப்பட்டு பல நாட்கள் அந்த கிரா மங்கள் துண்டிக்கப்பட்டது.

    மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி குடியாத்தம் வந்தனர்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் கடந்தாண்டு போர்க்கால அடிப்படையில் நத்தமேடு பகுதியில் தற்காலிகமாக இரும்பு பாலமும், அதன் அருகிலேயே ராட்சத பைப்புகள் வைத்து பாலமும் அமைக்கப்பட்டது அதனை கலெக்டர் பார்வையிட்டார் கடந்த ஓராண்டாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த சில நாட்களாக கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனுடைய வெள்ளம் ஒரு பகுதி இந்திரா நகர் ெரயில்வே மேம்பாலம் கீழே பிரிந்து நத்தமேடு வழியாக செல்கிறது அப்போது அந்த தற்காலிக பாலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சேதம் ஏற்பட்ட தற்காலிக பாலங்களை குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், ஆர். திருமலை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது உடனடியா கும் இந்த பாலங்களைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து ஆலாம்பட்டறை பகுதியில் பழுதடைந்த பாலத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தப் பாலத்தையும் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொது மக்களிடம் தெரிவித்தனர்.

    அப்போது பொதுமக்கள் இந்திரா நகர் ெரயில்வே மேம்பாலம் கீழிருந்து ஆலாம்பட்டறை செல்லும் வழியில் இந்த கவுண்டன்ய மகாநதி ஆற்று வெள்ளத்தால் சாலைகள் அரித்து செல்லப்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை எனவும் இப்பகுதியில் உள்ள 2 ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்களைக் கொண்டு வர கனரக வாகனங்கள் வர வழியில்லை எனவும் தொடர்ந்து இப்பகுதியில் கவுண்டன்யா மகாநதி பிரிந்து செல்லும் ஆற்றில் இரு பக்கமும் வெள்ள தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நத்தம் பிரதீஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.சுஜாதா ராஜ்குமார், செல்விசுஜானி ஒன்றிய குழு உறுப்பினர் செல்விபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×