என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரைபாலம் மூழ்கியதால் காமராஜர் பாலத்தில் வாகனங்கள் இயக்கம்
    X

    தரைபாலம் மூழ்கியதால் காமராஜர் பாலத்தில் வாகனங்கள் இயக்கம்

    • குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசல்
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்யமகாநதி ஆறு செல்கிறது.இப்பகுதியில் உள்ளவர்கள் அப்பகுதிக்குச் செல்ல காமராஜர் பாலம் உள்ளது. மற்றொருபுறம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் உள்ளது.

    இந்த இரண்டு வழித்தடங்களில் தான் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வெளியூரிலிருந்து வரும் வாகனங்களும் இந்த வழியை தான் பயன்படுத்தி வர வேண்டும் வேறு வழி இல்லை. அதேபோல் ஆற்றின் வழியே அங்கங்கே சிறு வழிகள் உள்ளது.

    மோர்தானா அணை கடந்த பல மாதங்களாக நிரம்பி வழிவதால் கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் மேல்வெள்ளம் சென்றால் அப்பகுதியில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

    நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுனன்முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார் சந்தப்பேட்டை பஜார் வரை பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது பல சாலைகளிலும் போக்கு வரத்து நெரிசலாகவே இருந்தது.

    போக்குவரத்து நெரிசல் கண்டதும் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி பெரியார் சிலை அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.

    சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் கனரக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    உடனடியாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் குடியாத்தத்தில் மழைக்கா லங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிக அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக அரசு உட னடியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை மேம்பாலம் ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×