என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் ஷோரூமில் ரூ.70 லட்சத்திற்கு 40 வாகனங்கள் விற்று மோசடி
- ஊழியர்கள் 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
ராணிப்பேட்டை வக்கீல் தெருவை சேர்ந்தவர் வேதாராம்.இவர் வேலூர் சாய்நாதபுரம் மற்றும் காட்பாடியில் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.
காட்பாடியில் உள்ள இவருக்கு சொந்தமான பைக் ஷோரூமில் வேலூர் மாவட்டம் மோட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொற்செல்வன் (வயது 30) அல்லாபுரம் விக்னேஷ் (23) வடுகன் தாங்கல் பிரசாந்த் (29) தினேஷ்குமார் (33) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் நான்கு பேரும் கடந்த ஜனவரி மாத முதல் நவம்பர் மாதம் வரை உரிமையாளருக்கு தெரியாமல் 40 வாகனங்களை விற்பனை செய்தனர். அந்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் சேர்க்கவில்லை. இதனால் பைக் வாங்கியவர்கள் தங்களது வாகனங்களுக்கு பதிவு எண் பெற முடியவில்லை.
நீண்ட நாட்களாக பதிவு எண் பெற முடியாததால் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து வேதாராமிடம் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக காட்பாடி பைக் ஷோரூமில் அவர் கணக்குப்பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
அப்போது 4 பேரும் சேர்ந்து 40 வாகனங்களை சுமார் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வேதாராம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், பிரசாந்த், தினேஷ் ஆகியயோரை கைது செய்தனர். பொற்செல்வனை தேடி வருகின்றனர் .