என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "This is the 5th time this year that Uttara Cauvery river has been flooded."

    • பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என அதிகாரி எச்சரிக்கை
    • பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு மழைப்பகுதியில் தொடர் மழையால் இந்தாண்டு 5வது முறையாக உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 2 தரை பாலத்தின் மீதும் தண்ணீர் மூழ்கி செல்வதால் ஆற்றை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளர்.

    புயல் மழை

    மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. அதேபோல், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு தீர்த்தம் பகுதிகளில் உருவாகும் உத்திர காவிரி ஆற்றில் தொடர் மழையால் திடீர் காட்டாற்று வெள்ளம் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால், மேலரசம்பட்டு கிராமத்தில் இருந்து தீர்த்தம் கிராமத்திற்கு இடையே செல்லும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரை பாலம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. இதனால் மேலசம்பட்டு பகுதியில் இருந்து தீர்த்தம் செல்லும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் ஒடுகத்தூரில் இருந்து நேமந்தபுரம் செல்லும் சாலையின் குருக்கே அமைந்துள்ள தரைப்பாலமும் மூழ்கி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போனதால், அவ்வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். இதனால் இயல்பு வாழ்க்கை பெரியதாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஆற்றில் வரக்கூடிய வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் தரை பாலத்தை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை அவ்வழியக்க அழைத்து செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×