என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drainage of stagnant rain water"

    • சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்ற உத்தரவு
    • அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி ஆகும். 400 ஏக்கர் பரப்பளவு, 100 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது தற்போது இந்த நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.

    புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நிரம்பும் நிலையில் உள்ள குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியை நேற்று மாலையில் அதிகாரி களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    குடியாத்தம்-பேர்ணாம்பட்டு சாலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே திருமண மண்டபங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ள பகுதியில் மழைக்காலங்கள் மற்றும் பல நாட்களாக மழைநீர் நெடுஞ்சாலையில் தேங்கி போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக இருந்து வந்தது.

    நேற்று நெல்லூர் பேட்டை பெரிய ஏரியை பார்வையிட வந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் நேற்று இரவு குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் டி.வசுமதி, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி உட்பட வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், நெடுஞ்சாலை துறையினர் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    ×