என் மலர்
நீங்கள் தேடியது "Breathtaking waterfalls"
- ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி இருந்தது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிறப்பாக கட்ட மைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வந்தது.
106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஏரிக்கு நாயக்கநேரி கால்வாய், குளவிமேடு கால்வாய், மாந்தோப்பு கால்வாய், கணவாய்மேடு கால் வாய், பாலமதி மலை, ஓட்டேரி மலையில் இருந்து வரும் மழை நீர்தான் முக்கிய நீர்வரத்தாக உள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக ஓட்டேரி ஏரி நீர்வரத்து பகுதியில் மலைகளில் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகள் இயற்கை எழில் கொஞ்சம் மலையில் கண்களுக்கு விருந்தாக காட்சி அளிக்கிறது.
மலைகளிலிருந்து ஓட்டேரி ஏரிக்கு அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏரியில் 40 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது நீர்வரத்து ஏற்பட்டேள்ளதால் ஏரி மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளது. அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டேரி ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதை முறையாக பராமரித்தால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏரிக்கு நீர்வரத்து இருக்கும்.
சுற்று வட்டார நிலத்தடி நீராதாரமும் பாதுகாக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.






