என் மலர்
உள்ளூர் செய்திகள்

லட்சுமணாபுரம் கிராமத்தில் ரேசன் கடை
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் கிராமத்தில் குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரேசன் கடை செயல்பட்டு வந்தது இந்த ரேசன் கடையில் 2 ஆயிரத்து 120 ரேசன் அட்டைகள் உள்ளன.
இந்த ரேசன் கடையில் சித்தூர் கேட் முனாபாடிப்போ, லட்சுமணாபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி சென்று வந்தனர் அதிகமான ரேசன் அட்டைகள் உள்ளதால் ரேஷனில் பொருட்கள் போடும்போது இங்கு திருவிழா போல் இருந்தது அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
கள்ளூர் ரேசன் கடை பெரிதாக உள்ளதால் அதனை பிரித்து அந்தந்த பகுதியில் ரேசன் கடையில் அமைத்துதருமாறு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் லட்சுமணாபுரம் கிராமத்தில் தனியாக ரேசன் கடை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இதைத்தொடர்ந்து லட்சுமணாபுரத்தில் புதிதாக ரேசன் கடை அமைக்கப்பட்டது இந்த ரேசன் கடையில் 640 குடும்ப அட்டைகள் உள்ளன.
புதிய ரேசன் கடை திறப்பு விழாவிற்கு குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.சிவா தலைமை தாங்கினார்.குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ஜி. பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் வி.ரவி நன்றி கூறினார்.






