search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய, விடிய புயல் மழை
    X

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய, விடிய புயல் மழை

    • வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் எனீஜினீயரிங் கல்லூரி அருகில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது.
    • பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. யாரும் பார்க்காததால் மரம் வெட்டி அகற்றப்படவில்லை.

    வேலூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக அதிகாலை 3 மணியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் பலத்தத காற்று வீசியது. மேலும் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதிகாலை 4 மணிக்கு வேலூர் காட்பாடி குடியாத்தம் பொன்னை பகுதிகளில் கனமழை பெய்தது.

    பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடும் குளிரும் வாட்டி வதைத்தது‌ இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் க்ரீன் சர்க்கிள் திருப்பதி தேவஸ்தானம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. பாதாள சாக்கடை நடந்து வரும் பகுதிகளில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன.

    வேலூர் கோட்டை பின்புறம் உள்ள சம்பத் நகரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அகற்றினர்.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழையில் 22 வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளது. அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருவதால் மழை சேதம் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் எனீஜினீயரிங் கல்லூரி அருகில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. யாரும் பார்க்காததால் மரம் வெட்டி அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது. சாலையில் மரம் சாய்ந்து கிடந்ததை அறியாததால் வேகமாக வந்த பஸ் மரத்தின் மீது மோதியது. இதில் பஸ் ஜன்னல் ஓரம் இருந்த பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இது பற்றி தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மூலம் மரம் வெட்டி அகற்றப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

    ஜமுனாமுத்தூர், கலசப்பாக்கம் ஆரணி பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ததது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற அணைகளில் இருந்தும் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 7.26 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளன.

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வெம்பாக்கம் 2.38, செய்யார் 1.59, வந்தவாசி 82.7, கலசப்பாக்கம் 50, ஜமுனாமரத்தூர் 45.5, ஆரணி 34.2, கீழ்பென்னாத்தூர் 34, போளூர் 25, சேத்பட் 22.2, திருவண்ணாமலை 13.6, தண்டராம்பட்டு 12.4, செங்கம் 9.8 மழை பதிவாகியுள்ளன. வேலூர் 36.5, காட்பாடி 23, குடியாத்தம் 24, கே.வி.குப்பம் 20.8, பேர்ணாம்பட்டு 1, திருவலம் 36.26, பொன்னை 36.2.

    Next Story
    ×