என் மலர்tooltip icon

    வேலூர்

    • பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நடவடிக்கை
    • 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைமுறை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நெடுஞ்சாலை உள் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகொண்டா பலமநேர் சாலையில் சிறுபா லம் கட்டும் பணி நடைபெ றுவதால் வருகிற 9, 10 ஆகிய 2 நாள்கள் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்.

    அதன்படி, குடியாத் தத்தில் இருந்து பள்ளி கொண்டா வழியாக வேலூர் செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை 75-ல் வடுகந்தாங்கல் மற்றும் காட்பாடி வழியாகச் செல்லலாம்.

    வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை 48–-ல் செதுவாலை - விரிஞ் சிபுரம் -வடுகந்தாங்கல் வழியாகச் செல்லலாம்.

    குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்பவர்கள் குடியாத்தம் மேல்பட்டி சாலையில் சென்று உள்ளி கூட்டுச் சாலை மும்முனை சந்திப்பு மாதனூர்வழியாகச்சென்று ஒடுகத்தூர், அணைக்கட்டு அதைச் சுற்றியுள்ள ஊர்க ளுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • வனச்சரக அலுவலர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது வீட்டின் அருகே உள்ள கழிவறையில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.

    பாம்பைப் பார்த்த சின்ன கண்ணன் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

    பின்னர் அங்கு விரைந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வீரர்கள் 4 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பை பிடித்து பருவமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ரகளையில் ஈடுப்பட்டு வருவதாக புகார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது.

    இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர்.

    இதனையடுத்து நேற்று மதுவிலக்கு துறை அதிகாரியான முருகன், திடீரென ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது அங்கு உள்ள குடியிருப்பு வாசிகளிடம் நேரடியாக கள ஆய்வு செய்தனர்.

    அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள், "நாங்கள் இங்கு வசிக்கவே கடினமாக உள்ளது. வீட்டின் முன்பாக குடித்து விட்டு ரகளையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    எங்களால் இங்கு குடியிருக்க முடியவில்லை, பள்ளிகுழந்தைகள் வீட்டிற்கு வரும் போது பயந்து அங்கேயே நின்று விடுகின்றனர். இதனால் மது கடையை மாற்றகோரி வலியுறத்தினர்.

    அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி உட்பட பொதுமக்கள் இருந்தனர்.

    • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து துணிகரம்
    • வாலிபர் கைது

    வேலூர்:

    குடியாத்தம் - வேலூர் ரோட் டில் உள்ள நகராட்சி மேல் நிலைப்பள்ளி பின்புறம் குடியாத்தம் டவுன் போலீ சார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த குடி யாத்தம் ஆர்எஸ் நகரை சேர்ந்த குமார் (வயது 27) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் குமார் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து இங்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூரில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடந்தது
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அண்ணா அரங்கில் மாநில அளவிலான செஸ் போட்டி இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இப்போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 456 மாணவர்கள், 456 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டிகள் 11 வயதிற்கு உட்பட்டோர், 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்களும், பரிசுத்தொகை முறையே ரூ.1000, ரூ.800, ரூ.650 என வழங்கப்படவுள்ளது.

    இதில் 14, 17, மற்றும் 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் டிசம்பர் மாதம் 26 முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    செஸ் விளையாட்டு போட்டியானது இங்கே நான்கு பிரிவுகளில் மாநில அளவில் நடைபெறுகிறது. விதிமுறைகளின் படி இந்த விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெற உள்ளது.

    பொதுவாக வெற்றி தோல்வி என்பது நம்முடைய வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இருக்கும். செஸ்ப் போட்டியை பொறுத்தவரை தோல்வியை நெருங்கும் நிலை வரும் பொழுது மாற்றுத் திட்டத்தை பயன்படுத்தி தோல்வி அடையாமல் மீண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.

    அதுபோல் நாம் நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நிலையிலும் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இத்தகைய மனநிலையை நமக்கெல்லாம் விளையாட்டு போட்டிகள் வழங்குகிறது. எனவே நாம் படிப்பில் ஆர்வம் செலுத்துவதை போல விளையாட்டுப் போட்டிகளிலும் நம்முடைய எண்ணங்களை செலுத்தி நல்ல ஒரு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இன்று நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 456 மாணவர்களும், 456 மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகிறது. நாளுக்கு நாள் மாடுகள் சுற்றித்திரியும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து மாடுகளை அதன் உரிமையாளர்கள் வெளியே அவிழ்த்து விடுகின்றனர்.

    இதற்கிடையில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுத்திரிந்து வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது.

    அதன் அடிப்படையில் இன்று காலை 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பழைய பஸ்நிலையத்தில் சுற்றி திரிந்த 5 மாடுகளை ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். பிடிபட்ட மாடுகளை கோட்டை பின்புறம் உள்ள கோசாலாவில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்பட உள்ளது என்றும் மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • தடுப்பு நடவடிக்கை தீவிரம்
    • காய்ச்சலால் அவதி-எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தற்போது பருவ மழை காரணமாக சளி, இருமல், காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தை களுக்கு அதிகளவில் சளி ,காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி குடியாத்தம், பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரி களில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.

    இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 227 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 92 பேர், குடியாத்தத்தில் 10 பேர் பேரணாம்பட்டில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் 123 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இன்று ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பை தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவலை தடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆர் ஆர் டி குழுவினர் ஆய்வு செய்து சுகாதார பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    இது தவிர சனிக்கிழமை தோறும் வேலூர் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மாணவர்கள் அவதி
    • சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர பயணிகள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த வரதலம் பட்டு பகுதியில் இருந்து அப்புக்கல், இளவம்பாடி வழியாக வேலூர் செல்லக்கூடிய அரசு டவுன் பஸ் இளவம்பாடி அடுத்த பொய்கை மோட்டூர் பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தது.

    இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பஸ் பழுதாகி பாதி வழியிலேயே நின்றது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.

    அந்த வழியாக வந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சிலர் சென்றனர். நடுவழியில் நின்ற பஸ்சை ஒரு மணி நேரம் பழுது பார்த்து எடுத்துச் சென்றனர்.

    இனி இதுபோல சம்பவங்கள் ஏற்படாமல் பஸ் சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • சீரமைக்க வலியுறுத்தல்
    • பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பழுதடைந்து பயன்படாத வகையில் உள்ளது.

    மேலும் அப்பகுதியில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் இதேபோல் பழு தடைந்து இருப்பதா கவும், இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    மேலும் குடிநீர் செல்லும் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்தும், உடைந்தும் குடிநீர் வீனாக வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

    எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி யை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது போலீசில் புகார் செய்தனர்.
    • டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை காதலித்து வந்தார்.

    வாலிபர் மாணவியை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வாலிபரை கண்டித்தனர்.

    இருப்பினும் வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது நேற்று மாலை வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாணவி தனது பெற்றோருடன் தெற்கு போலீஸ் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். மாணவியை சமாதானம் செய்தனர். பின்னர் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.
    • அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரெயில் நிலையம் அருகில் இன்று காலை 10.20 மணி முதல் மதியம் 1.50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரெயில், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து தானாபூர் செல்லும் எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அதே போன்று காட்பாடி மார்க்கமாக செல்லும் தானாபூர்-பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில், சென்னையிலிருந்து ஷீரடி செல்லும் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் ஆகியவை காலதாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் காலை 10.20 மணிக்கு சிக்னல் பராமரிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே திருவலத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பராமரிப்பு முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியானது. இது ஏன் என்றும் ரெயில் பயணிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    • டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.
    • குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.

    இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.

    மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    ×