என் மலர்
நீங்கள் தேடியது "முத்தமிழ் பேனா"
- வேலூர் வந்தது
- பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்
வேலூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அவர் எழுதிய புத்தகங்கள், மற்றும் அவரது சிலையுடன் பேனா வடிவிலான முத்தமிழ் ஊர்தி வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே வந்தடைந்தது.
கலெக்டர் குமார வேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த முத்தமிழ் ஊர்திக்கு பட்டாசு வெடித்து மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பேனா சின்னதுடன் வந்த வாகனத்தை பார்வையிட பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலையுடன்செல்பி எடுத்துக் கொண்டனர்.மேலும் கருணாநிதி சிலைக்கு தி.மு.க.வினர் மற்றும் அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்,
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஏராளமான அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






