என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்களை தங்கவைப்பதற்கான முகாம்கள்"
- முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
- அதிகாரிகள் மக்களிடம் விழிப்புணர்வு
அணைக்கட்டு:
மிக்ஜம் புயல் காரணமாக பென்னாத்தூர் பேரூராட்சியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கான முகாம்கள் உணவு, குடிநீர், கழிவறை ஆகிய வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.
மழை நேரங்களில் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்களை கைகளால் தொடுவதோ, கால்நடைகளை அதில் கட்டிவைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில், மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் தலைமை யிலான பணியாளர்கள் பொது மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் காய்ந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மற்றும் ஆபத்தான நிலையில் மரங்களை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் மண் கொட்டி சமன் செய்தல், மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.






