என் மலர்
வேலூர்
- உடல் பாகங்கள், இறைச்சி பறிமுதல்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் மகாதே வமலை அடிவாரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வன பாதுகாவலர் மணி வண்ணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனத்துறையினர் நேற்று காலையில் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியில் ஒரு வீட்டின் அருகே திடீர் சோதனையை நடத்தினர்.
அப்போது அங்கு காட்டுப்பன்றியின் உடல் பாகங்கள் மற்றும் இறைச்சி இருந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த சக்திபாலன் (வயது 32) என்பவர் நாட்டு துப்பாக்கியால் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்று வந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் சக்தி பாலனிடமிருந்து நாட்டு துப்பாக்கி, வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள், காட்டுப் பன்றியின் உடல் பாகங்கள் மற்றும் இறைச்சியை கைப்பற்றி குடியாத்தம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் கட்டிட மேஸ்திரியான சக்திபாலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் பாகங்கள், இறைச்சி பறிமுதல்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் மகாதே வமலை அடிவாரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார், உதவி வன பாதுகாவலர் மணி வண்ணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனத்துறையினர் நேற்று காலையில் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியில் ஒரு வீட்டின் அருகே திடீர் சோதனையை நடத்தினர்.
அப்போது அங்கு காட்டுப்பன்றியின் உடல் பாகங்கள் மற்றும் இறைச்சி இருந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த சக்திபாலன் (வயது 32) என்பவர் நாட்டு துப்பாக்கியால் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்று வந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் சக்தி பாலனிடமிருந்து நாட்டு துப்பாக்கி, வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள், காட்டுப் பன்றியின் உடல் பாகங்கள் மற்றும் இறைச்சியை கைப்பற்றி குடியாத்தம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் கட்டிட மேஸ்திரியான சக்திபாலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் முதல்அமைச்சர் கோப்பைக்கான மாவட்டஅளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திற னாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.
ஆண் பெண் இருபாலரும் பங்கேற்றிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (Www.sdat.tn.gov.in) வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்திட கடைசி நாள் 07.01.2023 ஆகும். இப்போட்டிகளில் நேரிடையாக பங்கேற்க இயலாது.
ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் துவங்கி நடத்தப்படவுள்ள இப்போட்டிகளில் பதக்கம் பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பொதுப்பிரிவில் (15 முதல் 35 வயதுவரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுக்களிலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் பிரிவில் (12 முதல் 19 வயதுவரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுக்களிலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பிரிவில் (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுக்களிலும், பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளி களுக்கு 50 மீட்டர் ஓட்டம், இறகுப்பந்து (அணிக்கு 5 பேர் வீதம்), பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் அடாப்டட் வாலிபால் (அணிக்கு 7 பேர் வீதம்), மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் எறிபந்து (அணிக்கு 7 பேர் வீதம்), செவித்திறன் மாற்றுத்திற னாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் கபடி (அணிக்கு 7 பேர் வீதம்) ஆகிய விளையாட்டுக்க ளிலும் பங்கேற்கலாம்
அரசு ஊழியர் பிரிவில் (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து மற்றும் செஸ் ஆகிய விளையாட்டுக்களிலும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.
ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் பங்கேற்றிடலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன், தெரிவித்துள்ளார்.
- மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது
- பொதுமக்கள் ஒத்து ழைப்பு அளிக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சா லையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை சாவடி வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது.
இந்த பணியை நெடுஞ்சாலை, மின் சாரத்துறையினர் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள உள்ள னர். இப்பணிகள் முடியும் காலமான சுமார் 15 நாட்க ளுக்கு இந்த சாலையில்போக் குவரத்து மாற்றம் செய்யப்ப டுகிறது.
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக வேலூர் செல்லும் வாகனங் கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வடுகன் தாங்கல், காட்பாடி வழியாக செல்ல வேண்டும்.
வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 48-ஐ பயன்படுத்தி செதுவாலை, விரிஞ்சி புரம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 75-ஐ அடைந்து வடுகன்தாங்கல் வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்லும் வாகனங்கள் குடியாத்தத்தில் இருந்து மேல்பட்டி சாலையில் உள்ளி கூட் ரோடு சந்திப்பை அடைந்து ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மார்க்கத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங் கள் மாதனூர் - உள்ளி கூட்ரோடு மும்முனை சந்திப்பு வழியாக மேல்பட்டி சாலை வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படும். மற்றநேரங்களில் தற் போது உள்ளபடி அதே சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். கனரக வாகனங்கள் பள்ளிகொண்டாவிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உள்ள தாலும், மழைநீர் வடிகால் வாய்கள் நீண்ட காலத்துக்கு பயன்படுத்த பணிகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதால் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தவிர்க்க முடியாது. போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
- மது போதையில் அட்டூழியம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த முத்துகுமரன் மலை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது23). விவசாயம் செய்து வருகிறார்.
இவரது நண்பர்கள் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அபிமன்யு (23), கோகுல்(21) இவர்கள் அரசு கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் சிலம்பரசன் தனது மனைவியை பைக்கில் அழைத்து கொண்டு ஒடுகத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அண்ணா சிலை அருகே வரும்போது மது போதையில் இருந்த அபிமன்யு, கோகுல் இருவரும் சிலம்பரசனை வழிமடக்கினர். நண்பர்கள் தானே என்று எண்ணிய அவர் பைக்கை நிறுத்தினார்.
அப்போது, சிலம்பரசனுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிய இருவரும் பின்னால் அமர்ந்திருந்த சத்தியாவை மது போதையில் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் தடுக்க முயன்ற போது அவரை கீழே தள்ளினர்.
பின்னர், சிலம்பரசன் கூச்சல் போடவே அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து, சிலம்பரசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அபிமன்யு, கோகுல் இருவரையும் கைது செய்தனர்.
- அரசு உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்
- அதிகாரிகள் பேச்சு வார்த்தை
வேலூர்:
ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் நளாயினி (வயது 28) இவர் இன்று காலை அவரது 4 வயது மகன் மற்றும் ஒரு கை குழந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது என்னுடைய கணவர் அவர் கூறுகையில்:-
சுகதீஷ். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என்னுடைய கணவர் வேலூரில் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் மின்னூரில் உள்ள முகாமில் இருந்து வேலைக்கு சென்று வர பஸ் செலவு அதிகமாகின்றது.
இதனால் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் இலங்கைத் தமிழர் முகாமுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாறுதலாகி வந்து குடியேறினோம்.
அதற்குப் பிறகு அரசு சார்பில் எங்களுக்கு வழங்க க்கூடிய நிவாரண உதவித்தொகை மற்றும் அரிசி பருப்பு ஆகியவை வழங்கப்படவில்லை.
இது குறித்து கோரிக்கை விடுத்தும் உதவித்தொகை மற்றும் பொருட்கள் வழங்காமல் உள்ளனர். உடனடியாக அரசு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அவரிடம் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அத்துமீறி ஆஸ்பத்திரியில் நுழைந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பிஷப் டேவிட் நகரை சேர்ந்தவர் அன்பரசு (வயதுச 53) சிஎம்சி ஆஸ்பத்திரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று சிஎம்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் பணியில் இருந்தார்.
அப்போது தோட்டப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திலீப் குமார் (27) என்பவர் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் ஆட்டோ ஓட்டிச் சென்றார். பலமுறை செக்யூரிட்டிகள் கூறிய பிறகும் திலீப்குமார் அத்துமீறி ஆஸ்பத்திரியில் வந்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அன்பரசு ஆட்டோ டிரைவர் திலீப் குமாரை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த திலிப் குமார் அன்பரசை கையால் தாக்கினார். அங்கிருந்த வர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இது குறித்து அன்பரசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் திலீப்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புத்தாண்டு தினத்தில் அதிக மது குடித்த நிலையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை அவல்காரர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38). இவரது மனைவி மோனிகா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடி பழக்கத்திற்கு ஆளான அருண்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மோனிகா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
கடந்த புத்தாண்டு தினத்தன்று இரவு அருண்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.
வீட்டின் அருகே நடந்து சென்ற அவர் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மோனிகா அவரை தேடிச் சென்றார்.அப்போது கால்வாயில் அருண்குமார் விழுந்து கிடந்தை கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக அவரை மீட்டு வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுசூதனரெட்டியின் நடவடிக்கையில் ஆர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- மதுசூதனரெட்டி ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்ததும், இதனை மறைத்து 3-வதாக டாக்டர் ஆர்த்தியை திருமணம் செய்ததும் தெரிய வந்தது.
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 36). அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள உதயமாணிக்கம் கிராமம் மாட்டிலவாடி பள்ளி பகுதியைச் சேர்ந்த கல்யாண புரோக்கர் விஸ்வநாதன் என்பவர் ஒரு வரன் இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் மூலம் அணுகிய போது அதே பகுதியைச் சேர்ந்த மதுசூதன ரெட்டி திருமணத்திற்கு பெண் தேடியது தெரிய வந்தது. அவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர்.
கர்நாடக மாநிலம் கேஜிஎப் அருகே உள்ள ஒரு ஐயப்பன் கோவிலில் ஆர்த்தி, மதுசூதன ரெட்டிக்கு திருமணம் நடந்தது. வேலூரில் அவர்கள் குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் ஆர்த்தி கர்ப்பிணியானார்.
மதுசூதனரெட்டியின் நடவடிக்கையில் ஆர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது மதுசூதனரெட்டி ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்ததும், இதனை மறைத்து 3-வதாக டாக்டர் ஆர்த்தியை திருமணம் செய்ததும் தெரிய வந்தது.
இதனை அறிந்த டாக்டர் ஆர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மதுசூதன ரெட்டியிடம் கேட்டபோது அவர் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் மதுசூதனரெட்டியை அறிமுகப்படுத்திய புரோக்கர் விஸ்வநாதன் அவரது உறவினர் என்பது தெரியவந்தது.
இதுபற்றி கேட்டபோது, மதுசூதன ரெட்டி அவரது தாயார் எர்ரம்மா சகோதரர் மகேஷ் ரெட்டி அவரது மனைவி ரச்சிதா மற்றும் புரோக்கர் விஸ்வநாதன் ஆகியோர் சேர்ந்து ஆர்த்திக்கு மிரட்டல் விடுத்தனர்.
மேலும் திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் அவர்கள் ஆர்த்தியின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று விட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் ஆர்த்தி இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 58 இடங்களில் வாகன சோதனை நடந்தது
- விதி மீறியவர்கள் மீது வழக்கு பதிவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டத்தில் விதிகளை மீற வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாடத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரே நாளில் 58 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது. இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டியது விதிகளை மீறியது 3 பேர் சேர்ந்து வாகனங்களில் சென்றது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- கோவில் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் ஒன்றாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று, சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.
மேலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதன் இரு அரக்கர்களுக்கு மோட்சமளிக்க மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும்
அப்போது பெருமாளிடத்தல் அசுரர்கள் இந்நாளன்று இந்த வாசல் வழியே பெருமாள் வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தங்களுக்கு கிடைத்தது போலா மோட்சம் கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.
இப்பெரும் புராணம் வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு பெருவிழா இன்று பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடைபெற்றது. மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள இக் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
பள்ளிகொண்டாவில் உள்ள உத்திர அரங்கநாதர் கோவிலில் ஒரு இரவு தங்கினாலே போதும் மோட்சம் கிடைக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக ஆன்மிக பெரியவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கோவிலில் கருவறையில் அரங்கநாதர் ஆதிசேஷன் மீது சங்கு சக்கரதாரியாக பெரிய அழகு திருமேனியுடன் ஆகிருதியாக நிமிர்ந்து படுத்து தெற்கில் சிரசும் வடக்கே திருப்பாதங்களும் வைத்து யோக சயனமூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார்.
சொர்க்க வாசல் திறப்பு
இதனை முன்னிட்டு இன்று காலை 4 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு உற்சவர் புஷ்ப அலங்காரமும், ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்களுடன் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் சேவை நடைபெற்றது. இதனையடுத்து கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
2 ஆண்டுகள் கழித்து எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பக்தர்களின் வசதிக்காக வேலூர், குடியாத்தம், ஆம்பூரில் இருந்து பள்ளிகொண்டாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் நித்தியா, ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் ஒடுகத்தூர் அருகே உள்ள குருவராஜா பாளையம் கிராமத்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான மலையப்பசுவாமி எனும் ஸ்ரீ தர்மகொண்ட ராஜா கோயிலிலும் சொர்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்த்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு
- வேலூர் கலெக்டர் ஆபீசில் குறைதீர்வு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கூட்டம் நடந்தது.
ஊசூர் அருகே உள்ள மூதாட்டி புலி மேடு கிராமத்தைச் சேர்ந்த சின்ன கண்ணு என்பவருடைய மனைவி பூங்காவனம்மாள் வயது (80). இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார்.
அப்போது பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்திருந்தார். இதனை கண்ட போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இது பற்றி மகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மூதாட்டியிடம் வந்து விசாரித்தார்.
அப்போது அவர் எனக்கு3 மகன் ஒரு மகள் உள்ளனர். எனக்கு சொந்தமான நிலத்தை மூத்த மகன் எனக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்து கொண்டுள்ளார்.
இதனால் மற்ற பிள்ளைகளுக்கு இடத்தை பிரித்துக் கொடுக்க முடியவில்லை. எனவே அவரிடமிருந்து நிலத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
பூங்காவனம்மாளின் மூத்த மகன் செய்துள்ள நில பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
பொதுமக்கள் மனு கொடுக்க வரும்போது இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் வகையில் பெட்ரோல் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. லதா மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாநகராட்சி 21 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டப்படுவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கழிவு நீர் தேங்கி நோய் பரப்பும் வகையில் அமைந்துள்ளது.
பன்றிகளின் குடியிருப்பாக மாறி உள்ளது. அந்த பகுதி மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுக்கம்பாறை அருகே உள்ள அ.கட்டுப்படி மற்றும் துத்திப்பட்டு பகுதிகளில் வாழ்ந்து வரும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.






