என் மலர்
நீங்கள் தேடியது "கோப்பை போட்டிகள்"
- 7-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் முதல்அமைச்சர் கோப்பைக்கான மாவட்டஅளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திற னாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.
ஆண் பெண் இருபாலரும் பங்கேற்றிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (Www.sdat.tn.gov.in) வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்திட கடைசி நாள் 07.01.2023 ஆகும். இப்போட்டிகளில் நேரிடையாக பங்கேற்க இயலாது.
ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் துவங்கி நடத்தப்படவுள்ள இப்போட்டிகளில் பதக்கம் பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பொதுப்பிரிவில் (15 முதல் 35 வயதுவரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுக்களிலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் பிரிவில் (12 முதல் 19 வயதுவரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுக்களிலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பிரிவில் (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுக்களிலும், பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளி களுக்கு 50 மீட்டர் ஓட்டம், இறகுப்பந்து (அணிக்கு 5 பேர் வீதம்), பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் அடாப்டட் வாலிபால் (அணிக்கு 7 பேர் வீதம்), மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் எறிபந்து (அணிக்கு 7 பேர் வீதம்), செவித்திறன் மாற்றுத்திற னாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் கபடி (அணிக்கு 7 பேர் வீதம்) ஆகிய விளையாட்டுக்க ளிலும் பங்கேற்கலாம்
அரசு ஊழியர் பிரிவில் (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து மற்றும் செஸ் ஆகிய விளையாட்டுக்களிலும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.
ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் பங்கேற்றிடலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன், தெரிவித்துள்ளார்.






