என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நண்பன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட 2 மாணவர்கள் கைது
    X

    நண்பன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட 2 மாணவர்கள் கைது

    • 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
    • மது போதையில் அட்டூழியம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த முத்துகுமரன் மலை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது23). விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது நண்பர்கள் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அபிமன்யு (23), கோகுல்(21) இவர்கள் அரசு கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் சிலம்பரசன் தனது மனைவியை பைக்கில் அழைத்து கொண்டு ஒடுகத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அண்ணா சிலை அருகே வரும்போது மது போதையில் இருந்த அபிமன்யு, கோகுல் இருவரும் சிலம்பரசனை வழிமடக்கினர். நண்பர்கள் தானே என்று எண்ணிய அவர் பைக்கை நிறுத்தினார்.

    அப்போது, சிலம்பரசனுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிய இருவரும் பின்னால் அமர்ந்திருந்த சத்தியாவை மது போதையில் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் தடுக்க முயன்ற போது அவரை கீழே தள்ளினர்.

    பின்னர், சிலம்பரசன் கூச்சல் போடவே அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து, சிலம்பரசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அபிமன்யு, கோகுல் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×