என் மலர்tooltip icon

    வேலூர்

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கோட்டை பின்புறம் அகழியில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக மிதந்தவர் யார் என்பது தெரியவில்லை. வெள்ளை நிற சட்டை நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். அவரது உடலில் எந்தவிதமான அடையாளங்களும் இல்லை.

    அவர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    வேலூரில் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் இன்று காலை கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை என எச்சரிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    வேலூர், ஜன.14-

    வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எவ்வித குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் உத்தரவு படி கடந்த 4 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.

    இதில் சரித்திர பதிவேடு கொண்ட 26 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 29 ரவுடிகள் மீது பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த வேண்டி உதவி கலெக்டர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.

    மேலும் 63 ரவுடிகள் மீது பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழைய பயனற்ற பொருட்களை எரித்தனர்
    • சாலைகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது

    வேலூர், ஜன.14-

    பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று போகி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    வேலூரில் இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எரித்தனர். ஏற்கனவே வேலூரில் கடும் பனி கொட்டிய நிலையில் அதனுடன் புகையும் சேர்ந்து கொண்டதால் மாநகர பகுதியில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

    ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் அதிகளவில் போகிப் பண்டிகை கொண்டாடினர். கடந்த சில நாட்களாக கடும் பனி கொட்டி வருகிறது.

    இன்று போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சாலைகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    • பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சிறப்பு தீர்மானம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் மற்றும் செயல் அலுவலர் எஸ். உமாராணி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார் அதில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கல்வெட்டுகள் அமைத்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் 18 வார்டு பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

    பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மின்விளக்கு, குடிநீர் வசதி, சுகாதார வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் செய்து முடிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் கமலநாதன் அரவிந்தன் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு
    • ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள தியேட்டர்களில் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான நடிகர்விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் ஓடும் திரையரங்குகளில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனார்.

    கலெக்டரின் உத்தரவைத் தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்ட திரையரங்கங்களில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர்.

    மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதா என ஆய்வு செய்தனர் தொடர்ந்து தியேட்டர்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா, சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென தியேட்டர்களில் ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நகர் மன்ற தலைவர் சவுந்தரராசன் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், என்.கோவிந்தராஜ், ஆட்டோமோகன்.கே.விஜயன், ஏ.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுகாதார அலுவலர் ஏ.ஆர்.முகைதீன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள் உள்பட மொத்தம் 84 பேருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சீருடைகள் வழங்கினார். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.

    • பண்ணாரஸ் பட்டு கட்டி, மல்லிப்பூ கொண்டை வச்சு..., வர்ரீயா... பாடல்கள் இசைக்கப்பட்டது
    • மாட்டுவண்டியில் பயணம் செய்தனர்

    வேலூர்:

    வேலூர் டி.கே.எம். மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லுாரியின் தாளாளர் மணிநாதன் தலைமையில் இன்று கோலாகலமாக நடந்தது.

    இந்த பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி சட்டையில் ஆண்கள் போலவும் சிலர் ஜீன்ஸ் உடையில் பங்கேற்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து மாணவிகள், பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர்.

    தொடர்ந்து, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பர விளையாட்டான பானை உடைத்தல், இசை நாற்காலி, கும்மியாட்டம், சிலம்பாட்டம், தமிழ் திரைப்படப் பாடலுக்கு ஏற்றவாறு நடனம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். அதன்பின், பல்வேறு விளையாட்டுகளில் மாணவிகள் பங்கேற்றனர்.

    பொங்கல் விழாவின் போது ரஞ்சிதமே, பண்ணாரஸ் பட்டு கட்டி மல்லிப்பூ கொண்டை வச்சு.

    வர்ரீயா. போன்ற குத்தாட்ட பாடல்கள் இசைக்கப்பட்டது.

    அப்போது கல்லுாரி மைதானத்தில் பல்வேறு குழுக்களாக மாணவிகள் குத்தாட்டம் போட்டதால் விழா களைகட்டியது.இதனிடையே சாந்து பொட்டு சந்தன பொட்டு பாடலுக்கு மாணவிகள் சிலம்பாட்டத்தில் தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.

    நமது பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி பயணம் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஆரவாரமான பயணம் செய்தனர்.

    • ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கலை அரங்கத்தின் திறப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எம். ஜோதீஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். உதவித் தலைமை ஆசிரியை சாந்தி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கு வருகை தந்து கலை அரங்க கல்வெட்டினை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் திறந்து வைத்தார்.

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கலை அரங்கத்தை காட்பாடி தொழில் அதிபர் பாலகிருஷ்ணன் நவீனமயப்படுத்தும் பொருப்பினை ஏற்றுக் கொண்டு, தமது சொந்த செலவில் செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.

    ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மேலாளர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மூத்த ஆசிரியர் ச. சச்சிதானந்தம், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹரிராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர்கள் சிவஞானம், ஜெய்சங்கர், பாபு, குணசேகர் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் பள்ளியின் என்.சி.சி. முதன்மை அலுவலர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    • பொங்கல் பண்டிகைக்கு செல்ல ஏற்பாடு
    • 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜெயிலுக்கு திரும்ப உத்தரவு

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் 500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பரோல் வழங்கப்படுகிறது. இதற்காக கைதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

    அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு, எந்த வில்லங்கமும் இல்லாத பட்சத்தில் கைதி செல்ல விரும்பும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழங்கப்படும் அறிக்கை அடிப்படையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள கைதிகள் தங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 35 கைதிகள் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் அவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வீடுகளுக்கு செல்கின்றனர். இந்த பரோல் 6 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஜெயிலுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    • குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் நடந்தது
    • மாணவிகளுக்கு பரிசு வழங்கினா்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலிகிறிஸ்டி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஆடிட்டர் மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாவித் அகமது, ரேணுகாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி தலைமை ஆசிரியர் சரளாதேவி வரவேற்றார்.

    இந்த பொங்கல் விழாவில் மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், அபிராமி மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

    முடிவில் உதவி தலைமை ஆசிரியை சரவணப்ரியா நன்றி கூறினார்.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூரை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 38) பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பென்னாத்தூரில் இருந்து பைக்கில் அரியூர் நோக்கி வந்தார்.

    அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் சாம்ராஜ் பலத்த காயம் அடைந்தார்.

    அரியூர் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு பகுதியில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பாஜகவினர் சார்பில் விவேகானந்தர் 160-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    இவ்விழாவில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டபிரபு தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் வாசுதேவன் மற்றும் மாவட்ட செயலாளர் தண்டபாணி எஸ். எஸ்.டி. பிரிவு தலைவர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.

    முதலில் பாக்கம் பகுதியில் இருந்து தென்புதுப்பட்டு வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தொடர்ந்து தென்புதுப்பட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் பென்சில் பேனா உள்ளிட்டவற்றை வழங்கினர்.

    ்நிகழ்ச்சியில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் தென்புதுபட்டு கிராம பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×