என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் புதிதாக கலை அரங்கம்
    X

    காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் புதிதாக கலை அரங்கம்

    • ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கலை அரங்கத்தின் திறப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எம். ஜோதீஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். உதவித் தலைமை ஆசிரியை சாந்தி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கு வருகை தந்து கலை அரங்க கல்வெட்டினை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் திறந்து வைத்தார்.

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கலை அரங்கத்தை காட்பாடி தொழில் அதிபர் பாலகிருஷ்ணன் நவீனமயப்படுத்தும் பொருப்பினை ஏற்றுக் கொண்டு, தமது சொந்த செலவில் செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.

    ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மேலாளர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மூத்த ஆசிரியர் ச. சச்சிதானந்தம், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹரிராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர்கள் சிவஞானம், ஜெய்சங்கர், பாபு, குணசேகர் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் பள்ளியின் என்.சி.சி. முதன்மை அலுவலர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×