search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் போகி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
    X

    போகி பண்டிகையையொட்டி வேலூர் சைதாப்பேட்டையில் வீட்டிலிருந்த பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்திய பொதுமக்கள்.

    வேலூரில் போகி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

    • பழைய பயனற்ற பொருட்களை எரித்தனர்
    • சாலைகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது

    வேலூர், ஜன.14-

    பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று போகி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    வேலூரில் இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எரித்தனர். ஏற்கனவே வேலூரில் கடும் பனி கொட்டிய நிலையில் அதனுடன் புகையும் சேர்ந்து கொண்டதால் மாநகர பகுதியில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

    ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் அதிகளவில் போகிப் பண்டிகை கொண்டாடினர். கடந்த சில நாட்களாக கடும் பனி கொட்டி வருகிறது.

    இன்று போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சாலைகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×