என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா
- குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் நடந்தது
- மாணவிகளுக்கு பரிசு வழங்கினா்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலிகிறிஸ்டி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஆடிட்டர் மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாவித் அகமது, ரேணுகாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி தலைமை ஆசிரியர் சரளாதேவி வரவேற்றார்.
இந்த பொங்கல் விழாவில் மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், அபிராமி மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
முடிவில் உதவி தலைமை ஆசிரியை சரவணப்ரியா நன்றி கூறினார்.






