என் மலர்
நீங்கள் தேடியது "Uniforms for employees"
- நகர் மன்ற தலைவர் சவுந்தரராசன் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், என்.கோவிந்தராஜ், ஆட்டோமோகன்.கே.விஜயன், ஏ.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுகாதார அலுவலர் ஏ.ஆர்.முகைதீன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள் உள்பட மொத்தம் 84 பேருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சீருடைகள் வழங்கினார். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.






