என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழாவில் மாணவிகள் குத்தாட்டம்
- பண்ணாரஸ் பட்டு கட்டி, மல்லிப்பூ கொண்டை வச்சு..., வர்ரீயா... பாடல்கள் இசைக்கப்பட்டது
- மாட்டுவண்டியில் பயணம் செய்தனர்
வேலூர்:
வேலூர் டி.கே.எம். மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லுாரியின் தாளாளர் மணிநாதன் தலைமையில் இன்று கோலாகலமாக நடந்தது.
இந்த பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி சட்டையில் ஆண்கள் போலவும் சிலர் ஜீன்ஸ் உடையில் பங்கேற்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து மாணவிகள், பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பர விளையாட்டான பானை உடைத்தல், இசை நாற்காலி, கும்மியாட்டம், சிலம்பாட்டம், தமிழ் திரைப்படப் பாடலுக்கு ஏற்றவாறு நடனம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். அதன்பின், பல்வேறு விளையாட்டுகளில் மாணவிகள் பங்கேற்றனர்.
பொங்கல் விழாவின் போது ரஞ்சிதமே, பண்ணாரஸ் பட்டு கட்டி மல்லிப்பூ கொண்டை வச்சு.
வர்ரீயா. போன்ற குத்தாட்ட பாடல்கள் இசைக்கப்பட்டது.
அப்போது கல்லுாரி மைதானத்தில் பல்வேறு குழுக்களாக மாணவிகள் குத்தாட்டம் போட்டதால் விழா களைகட்டியது.இதனிடையே சாந்து பொட்டு சந்தன பொட்டு பாடலுக்கு மாணவிகள் சிலம்பாட்டத்தில் தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.
நமது பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி பயணம் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஆரவாரமான பயணம் செய்தனர்.






