என் மலர்
வேலூர்
- முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேச்சு
- வி.ஐ.டி.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
வேலூர்:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் குடியரசு தினத்தையொட்டி விஐடி வேந்தர் டாக்டர் கோவிசுவநாதன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே பேசினார்.
அதைத்தொடர்ந்து விஐடியில் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இப்ராஹிம் கலிபுல்லா பேசுகையில், ஊழலற்ற நேர்மையான நன்னடத்தை கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
கல்வி ஒன்று மட்டுமே மனித இனத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் கருவியாக செயல்படுகிறது. கல்வியால் மட்டுமே மனிதனை அறியாமையில் இருந்து விடுவிக்க முடியும் என்றார்.
விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் பேசுகையில்:- உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய புதிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் உயர்கல்வியில் சேரும் சதவிகிதம் தற்போது 27 ஆக உள்ளது, இதை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
இதில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் ஏற்கனவே 27 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றார்.
விழாவில் கவுரவ விருந்தினராக எம்பசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மனித வளம்) சதீஷ் ராஜரத்தினம், வி ஐ டி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், துணைவேந்தர் டாக்டர். ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் டாக்டர். பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர். ஜெயபாரதி, விஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கலை நிகழ்ச்சியின் போது நடனமாடுவதில் தகராறு
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கல்லாபாறை கிராமத்தில் ஆண்டுகள் தோறும் தை மாதம் பெத்தபலி கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைப்பெறுவது வழக்கம்.
இதே போல் நேற்று முந்தினம் திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது அதே ஊரை சேர்ந்த விக்னேஷ் (வயது 31), மற்றும் ஆனந்தன் (26) உட்பட சிலர் நடனமாடி கொண்டு இருந்தனர்.
திடீரென் விக்னேஷ் மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கும் இடையே நடனமாடுவது குறித்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதனையடுத்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் தான் மறைத்து வைத்திருந்து கத்தியை கொண்டு விக்னேஷின் தலையில் வெட்டினார். இதில் படுகா யமடைந்த விக்னேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷ் கொடுத்த புகாரிப் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் ஆலோசனை
- சாலை பராமரிப்பு பணிகள் தீவிரம்
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரின் கலைஞர் ப்ளாக் என்ற புதிய கட்டிடம் கட்டப்ப ட்டுள்ளது. அதன் திறப்பு விழா மற்றும் வேலூர் கலெக்டர் அலுவ லகத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 1-ந் தேதி வேலூர் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடப்பதால் கலெக்டர் அலுவலக வளாகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டி வருகின்றனர்.
1-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். இதற்காக அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை வளாகம் தூய்மை ப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
முத ல்அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட அளவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாநகர பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளது. வேலூர் காட்பாடி பகுதியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வி.ஐ.டி. பல்க லைக்கழகம் முதல் கலெக்டர் அலுவலகம் அரசு சுற்றுலா மாளிகை வரை சாலை பராமரிப்பு நடந்து வருகிறது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
- வாகன ஓட்டிகள் அவதி
- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், கோட்டையை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. காட்பாடி காந்திநகர், சங்கரன் பாளையம், தொரப்பாடி சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்ற வருகிறது.
இதனால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். காலையில் வீட்டிலிருந்து காரில் வருபவர்கள் மீண்டும் மாலை வீட்டுக்கு செல்லும்போது பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் வாகனங்களை எங்கே நிறுத்தி விட்டு செல்வது என அவதி அடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் குமார வேல் பாண்டியன் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டும் அவர்கள் அலட்சியமாகவே செயல்பட்டு வருகின்றனர்.
இதேபோல் வேலூர் ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. மெத்தனப் போக்கில் பணிகள் நடைபெற்று வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும் போது அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது.
வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி கிளம்புவதால் வீடு, கடைகளில் புழுதி படிந்து விடுகிறது. எனவே ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும் வரை போலீசார் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.
- தி.மு.க. சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திமுக மாணவர் அணி சார்பில் பிச்சனூர் தேரடி பகுதியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர மாணவர் அணி அமைப்பாளர் நகரமன்ற உறுப்பினர் நவீன்சங்கர் தலைமை தாங்கினார்.
நகர அவைத் தலைவர் நெடுஞ்செழியன், துணைசெயலாளர்கள் ஜம்புலிங்கம், மனோஜ், வசந்தா, மாவட்ட பிரதிநிதி தண்டபாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவரும் நகர செயலாளருமான எஸ்.சவுந்தரராசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., திமுக செய்தி மக்கள் தொடர்பு பிரிவு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி, திமுக மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் அமலுவிஜயன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மாவட்ட துணை செயலாளர்கள் ஜி.எஸ்.அரசு, எஸ். பாண்டியன், குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம்பிரதீஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர மன்ற உறுப்பினர் என்கோவிந்தராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக பல்வேறு, அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.எம். மோனீஷ் நன்றி கூறினார்.
- பிணமாக கிடந்த பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி உள்ளது.
இதன் மூலம் அவர் திருமணம் ஆனவர் என்பது உறுதியாகி உள்ளது.அவர் யார் என்று தெரியவில்லை. அவரை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார்களா? அல்லது அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலமதி மலை அடிவாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இறந்த பெண்ணின் முகம் கல்லில் அடிபட்டு சிதைந்து வீங்கி உள்ளது. யாராவது தாக்கியதில் முகத்தில் காயம் ஏற்பட்டதா அல்லது பாறையில் விழும்போது காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற முழுவிவரம் தெரிய வரும் என்றனர்.
- திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பெருமாள் வயது 43 தொழிலாளி. இவருடைய நண்பர் சத்யராஜ் என்பவருடன் வேலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு நேற்று வந்தனர். அப்போது பெருமாள் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 பேரை கடித்தது
- மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலுக்கு கடந்த 23- ந் தேதி ஏராளமானவர்கள் வந்திருந்தனர். மேலும் அங்கு பஸ் நிறுத்ததிலும் பொதுமக்கள் பலர் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த வெள்ளை நிற தெருநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை கடிக்க தொடங்கியது.
ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச் சென்று அந்த நாய் கடித்தது. இதைப்பார்த்ததும் பயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அலறடித்து ஓடினர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல், மாடுகள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் பதம் பார்த்தது.
பொதுமக்கள் திரண்டு விரட்டியதும் அந்த நாய் அங்கிருந்து சர்வீஸ் சாலை வழியாக ஓடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாய் சுமார் 30 பேரை கடித்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதியில் மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது.
சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வளாகம் பெரிய தெரு பள்ளிக்கூட தெரு கானார் தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலைகள் மற்றும் சுருக்கு கம்பிகளைக் கொண்டு பிடித்தனர். ஆனாலும் பொது மக்களை கடித்த வெறிநாய் பிடிபடவில்லை.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் கானாறு தெருவில், வீட்டின் பின்புறம் உள்ள புதரில் பதுங்கி இருந்த வெறி நாய் திடீரென தானாகவே இறந்த நிலையில் கிடந்தது. அதனை அப்புறப்படுத்தினர்.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- ஆன்லைனில் பான்கார்டை புதுப்பிக்கும்படி கூறி மோசடி
- வேலூர் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
வேலூர்:
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
பெண் டாக்டர்
அதில் வங்கி நெட் பேங்கிங் முடக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்கு உடனடியாக பான்கார்டை புதுப்பிக்க வேண்டும். அதனை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என்று இணைப்பு (லிங்க்) ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
ரூ.1.35 லட்சம் பறிப்பு
இதனை உண்மை என்று நம்பிய டாக்டர் அந்த இணைப்பில் சென்று அவருடைய வங்கி தொடர்பான விவரங்களை பதிவிட்டுள்ளார்.
சிறிதுநேரத்தில் அந்த வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1,35,087 எடுக்கப்பட்டது. அப்போதுதான் மர்மநபர்கள் போலியான இணைப்பு செல்போனுக்கு அனுப்பி பணத்தை அபேஸ் செய்தது டாக்டருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிந்து டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்கை முதற்கட்டமாக முடக்கினார்.
பின்னர் தொடர் நடவடிக்கையாக அந்த கணக்கில் இருந்து ரூ.1,35,087-ஐ போலீசார் மீட்டனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் நேற்று டாக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில்:-
வங்கி விடுமுறை நாட்களை பயன்படுத்தி மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் பொதுமக்களை அதிகளவு ஏமாற்றக்கூடும்.
எனவே சைபர் குற்றங்களால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
- கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
- 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்
வேலூர்:
குடியரசு தின விழாவையொட்டி வேலூர் கோட்டை காந்தி சிலைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நேதாஜி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.34 லட்சத்து 94,805 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய 271 அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- அடிபம்பை நடுவில் வைத்து கால்வாய் அமைத்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கியதால் அவலம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பகீர் குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 20 -வது வார்டு டபுள் ரோடு பிஎப் அலுவலக பகுதிகளில் தற்போது கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது.
டபுள்ரோட்டில் சிமெண்ட் சாலை தரமாக அமைக்கப்படவில்லை.மேலும் கால்வாய்கள் மின்கம்பத்தை நடுவில் வைத்தபடி கட்டப்பட்டுள்ளது என அந்த பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் இன்று காலை பி எப் அலுவலகம் பின்புறம் பூங்கா அருகே கால்வாய் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் தரமாக அமைக்கவில்லை.அதற்குள் அடுத்த வேலைக்கு சென்று விட்டார்கள். ஏற்கனவே உள்ள சாலைகளை தரமாக அமைத்துவிட்டு அதற்கு பிறகு அடுத்த கட்ட வேலைக்கு செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கூறுகையில்:-
சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியில் அடி பம்பை நடுவில் வைத்து சாலை அமைத்த காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுத்து அவரது காண்டிராக்ட் ரத்து செய்ததாக கூறினார்கள்.
ஆனால் அதே நபருக்கு இந்த பகுதியில் பணிகள் செய்ய காண்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. அவர் பணிகளை தரமாக அமைக்கவில்லை. ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட கான்ட்டிராக்டருக்கு மீண்டும் பணிகள் எப்படி ஒதுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
இந்த பகுதியில் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
- குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு
வேலூர்:
குடியரசு தினத்தையொட்டி வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் கோட்டை கொத்தளம் மற்றும் நேதாஜி விளையாட்டு அரங்கில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.
இதனையொட்டி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உட்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 6 இடங்களில் மாநில எல்லை சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 58 இடங்களில் வாகன தணிக்கையும், அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தணிக்கை மேற்கொள்ள போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை, மத வழிப்பாட்டு தலங்கள், காட்பாடி ரெயில் நிலைய சநத்திப்பு, குடியாத்தம் ரெயில் நிலையம், வேலூர் புதிய பஸ் நிலையம், வேலூர் பழைய பஸ் நிலையம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம், குடியாத்தம் பழைய பஸ் நிலையம்






