என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரியில் சாலையை விட கால்வாய் உயரமாக அமைக்கப்பட்டதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.
வேலூர் டபுள்ரோட்டில் சாலை தரமாக இல்லை என குற்றச்சாட்டு
- அடிபம்பை நடுவில் வைத்து கால்வாய் அமைத்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கியதால் அவலம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பகீர் குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 20 -வது வார்டு டபுள் ரோடு பிஎப் அலுவலக பகுதிகளில் தற்போது கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது.
டபுள்ரோட்டில் சிமெண்ட் சாலை தரமாக அமைக்கப்படவில்லை.மேலும் கால்வாய்கள் மின்கம்பத்தை நடுவில் வைத்தபடி கட்டப்பட்டுள்ளது என அந்த பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் இன்று காலை பி எப் அலுவலகம் பின்புறம் பூங்கா அருகே கால்வாய் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் தரமாக அமைக்கவில்லை.அதற்குள் அடுத்த வேலைக்கு சென்று விட்டார்கள். ஏற்கனவே உள்ள சாலைகளை தரமாக அமைத்துவிட்டு அதற்கு பிறகு அடுத்த கட்ட வேலைக்கு செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கூறுகையில்:-
சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியில் அடி பம்பை நடுவில் வைத்து சாலை அமைத்த காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுத்து அவரது காண்டிராக்ட் ரத்து செய்ததாக கூறினார்கள்.
ஆனால் அதே நபருக்கு இந்த பகுதியில் பணிகள் செய்ய காண்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. அவர் பணிகளை தரமாக அமைக்கவில்லை. ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட கான்ட்டிராக்டருக்கு மீண்டும் பணிகள் எப்படி ஒதுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
இந்த பகுதியில் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.