என் மலர்
வேலூர்
- பள்ளிகொண்டா கோவிலில் ரதசப்தமியையொட்டி விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் திருக்கோயில் ஆண்டுதோறும் தை அமாவாசை முடிந்த 7-ஆம் நாள் ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். 5 விதமான வாகனங்களில் அரங்கநாதா் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளிப்பார். இதே போல் நேற்று காலை முதலே விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 1 மணிக்கு சேஷ வாகனத்திலும், பிற்பகல் 4 மணிக்கு கருட வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பவனி வந்தாா். அப்போது அா்ச்சகா்கள் பிரபந்த பாடல்களைப் பாடினா்.
உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நித்யா, கோயில் நிா்வாக அதிகாரி நரசிம்மமூர்த்தி, ஆய்வா் சுரேஷ்குமார் கோயில் ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
- போலீசாரின் சோதனையில் சிக்கினர்
- விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் மராட்டிபாளையம் கிராமத்தில் கொய்யா தோட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் கிராமத்தில் உள்ள கொய்யா தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற வேப்பங்குப்பம் போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு கொய்யா தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து 6 பேர்மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3-ந்தேதி நடக்கிறது
- காலை 10 மணிக்கு தொடங்குகிறது
வேலூர்:
விஐடியில் வேலைவாய்ப்பு துறையும் இயந்திரவியல் துறையும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வி.ஐ.டி. அண்ணா அரங்கத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வளாக நேர்முக தேர்வு நடத்துகிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் டிப்ளமோ, பட்டய படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த வளாக நேர்முகத் தேர்வுக்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான ஃபாஸ்ட் சோலார் ,டி.வி.எஸ் வேலியோ, பிரேக்ஸ் இந்தியா , இன்டோ கூல், டெக்னிப் எனர்ஜிஸ், மெக்டர் மார்ட் மேலும் பத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளவும்.டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடி, அறை எண் 717 ல் பிப்ரவரி மாதம் 1-ம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நேர்முகத் தேர்விற்கு வருவோர்கள் பயோடேட்டா கல்வி சான்றிதழ்கள், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும்.
இதில் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு விஐடி வேந்தர் டாக்டர் .கோ விசுவநாதன் கூறினார்.
- வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
- தேசிய, மாநில சாலை தடுப்பு சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
வேலூர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்துக்கு வருகிற 1, 2-ந்தேதிகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு 1-ந்தேதி வேலூருக்கு வருகிறார். அன்று மாலை 5 மணிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கலைஞர் பிளாக் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அங்கு வைத்து முதலமைச்சர் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் இரவு முதலமைச்சர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.
தொடர்ந்து 2-ந்தேதி காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலக 5-வது மாடியில் உள்ள அரங்கில் அரசுத்துறையின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மீது எடுக்கப்பட்ட தீர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், உதவி கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் அவர் ஓய்வெடுக்க உள்ள சுற்றுலா மாளிகை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுற்றுலா மாளிகை வளாகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்து காணப்பட்ட கட்டிடங்களை சீரமைத்து, வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று 5-வது மாடியில் உள்ள அரங்கமும் ஆய்வுக்கூட்டத்துக்காக புதுப்பொலிவுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் சாலை மார்க்கமாக பயணம் செய்வதால் வேலூர், காட்பாடி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். மேலும் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
தேசிய, மாநில சாலை தடுப்பு சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட அளவில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- 4 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
- 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இன்று நடந்தது.
மாவட்ட தலைவர்கள் வேலூர் அருணகிரிநாதன், திருவண்ணாமலை பாபு, ராணிப்பேட்டை பாஸ்கர், திருப்பத்தூர் விநாயகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர்கள் கோபி கண்ணன் சங்கரன் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மாரிமுத்து உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்யும் ஆணையை வழங்க வேண்டும் மத்திய அரசு அறிவித்த நாளில் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊர் புற நூலகங்கள் மற்றும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
- 2 ஆயிரத்து 9 தேர்வர்கள் பங்கேற்றனர்
- இன்றும், நாளையும் தேர்வு நடக்கிறது
வேலூர்:
டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் குரூப் 3 ஏ தேர்வு இன்றும், நாளையும் தேர்வு நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி அரசு பொறியியல் கல்லுாரி, கொண வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிர் கல்லுாரி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 27 மையங்களில் தேர்வு நடந்தது.
இன்று காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. இதில் மொத்தம் 7 ஆயி ரத்து 689 தேர்வர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த புள்ளி யியல் துணை சர்வீசஸ் தேர்வு நாளை (29ம் தேதி) நடக்கிறது. இதில், உதவி புள்ளியியல் ஆய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடக்கிறது. காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் 2ம் தாள் தேர்வு நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி அரசு பொறி யியல் கல்லுாரி, அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, சத்து வாச்சாரி சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 9 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
- நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளித்தது
- வியாபாரிகள் அதிர்ச்சி
வேலூர்:
வேலூர், மாநகராட் சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் குத்தகை இனங்க ளில் வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூல் செய்யும் பணியில் மாநக ராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் கோட்டை எதிரே உள்ள லாரி ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்த மான கடைகள் உள்ளது. இதில் சிலர் வாடகைக்கு இருப்பதாக தெரிகிறது.
இந்த பகுதியில் உள்ள 3 கடைகள் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதால், வாடகையை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் நோட் டீஸ் வழங்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கடைகளின் அலுவலக வேலை நேரத் தில் தான் சீல் வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். ஆனால் நேற்று நள் ளிரவு லாரி ஸ்டாண்டுக்கு வந்த அதிகாரிகள் பூட்டி யிருந்த 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும் வாடகை பாக்கி உள்ளதால் கடைக ளுக்கு சீல் வைத்து உள்ள தாக நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கடைகளின் உரிமை யாளர்கள் நள்ளிரவில் கடைகள் பூட்டி சீல் வைத்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது மாநகராட்சி யின் இந்த செயல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எங்க ளின் அன்றாட தேவைக் கான பொருட்களை கடை யின் உள்ளே வைத்து உள்ளோம்.
இதனால் எங்களின் தொழிலும் பாதிக் கப்படுகிறது. நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
- மொபட் சேதம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயன்.
நேற்று காலையில் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பலமநேர் ரோட்டில் உள்ள இறைச்சி கடைக்கு மொபட்டில் சென்றுள்ளார்.
மொபட்டை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு இறைச்சி வாங்க உள்ளே சென்றார்.
அப்போது மொபட்டுக்கு அருகிலேயே சரக்கு வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது இறைச்சி வாங்கிக்கொண்டு விஜயன் மொபட்டை எடுக்க வரும்போது தெலுங்கானா மாநிலம் சூரிபேட்டை பகுதியிலிருந்து தவிடு முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சென்ற லாரி அதிலிருந்து மூட்டைகள் சரிந்து விஜயன் நிறுத்தி இருந்த மொபட் பக்கத்தில் இருந்த சரக்கு வாகனம் மீது சரிந்தது.
அப்போது அந்த சரக்கு வாகனம் மொபட் மேல் ஏறி இறங்கி நசுக்கியது. இதனால் மொபட்டை எடுக்க சென்ற விஜயன் அதிர்ச்சியில் உறைந்தார் மயிரிழையில் காயங்கள் இன்றி தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த நகர மன்ற தலைவர் சவுந்தர்ராசன் நகர மன்ற உறுப்பினர்கள் விரைந்து வந்து விஜயனிடம் நலம் விசாரித்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உபகரணங்கள் இலவசமாக கொடுப்பதாக துறை அதிகாரிகள் தகவல்
- பணியை நாளை முதல் ஒப்பந்ததாரர்கள் தொடங்கலாம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அலுவலக மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு, ஆகிய மலைப்பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளி கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டனர்.
மேலும் உண்டு உறைவிட பள்ளி கட்டினால் மலைப்பகுதியில் உள்ள 75 மாணவர்கள் அங்கு தங்கி படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அங்கு கட்டிடங்கள் கட்ட வேண்டும் என வட்டார பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.
மேலும் கீழ்கொத்தூரில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் அணைக்கட்டுக்கு வரும் அரசு பஸ்களில் மாணவர்கள் தொங்கியப்படியே வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூடுதலாக பஸ் இயக்க வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்பு வேளாண்மை துறையில் தற்போது மரக்கன்றுகள் வருகை தந்துள்ளது இதனை குறிப்பிட்ட 12 ஊராட்சிகளை சார்ந்த அனைத்து விவசாயிகளும் இலவசமாக பெற்று பயனடையலாம்.
தோட்டக்கலை சார்பில் நாட்டு காய்கறி விதைகள், உரம், பயிர் செழிப்பாக வளர்ச்சியடைய அதற்க்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக கொடுப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் பேசுகையில் தற்போது அரசு ஒதுக்கிய நிதிகளில் ஊராட்சியில் செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 82 வகுப்பறைகள் கட்டிடங்களை கொண்ட 16 புதிய பள்ளி கட்டிடங்களை கட்ட ரூ. 4 கோடியே 56 லட்சம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை நாளை முதல் ஒப்பந்ததாரர்கள் தொடங்கலாம் என தெரிவித்தார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
- 4-ந் தேதி முதல் மீண்டும் மாடு விடும் விழா நடக்கும்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டி கையொட்டி மாடு விடும் திருவிழா கடந்த 16-ந் தேதி முதல் பல்வேறு ஊர்க ளில் நடந்து வருகிறது.
இந்த திருவிழாக்களில் 100-க்கும் மேற்பட்ட மாடு களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
வரும் மார்ச் 31ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. இதற்காக ஒவ் வொரு ஊருக்கும் விழா நடத்த ஒரு தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் வருகிற 1-ந்் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். வி.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச் சியில் 1-ந் தேதி கலந்து கொள்ள உள்ளார்.
2-ந் தேதி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்தும் கலெக் டர்கள் எஸ்பிக்களுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்துக்கிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். இதற்கான ஏற் பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி வரை மாடு விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ரத்து செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து வரு வாய்த்துறை அதிகா ரிகள் கூறுகையில், 'வேலூர் மாவட் டத்திற்கு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி வர உள்ளார்.
2 நாட்கள் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளில் அனைத்துதுறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாடு விடும் விழா நிகழ்ச்சிக்கு அதிகாரி கள் குழுவினர் மற்றும் போலீசாரும் செல்ல முடி யாத சூழ்நிலை உள்ளது.
இதனால் வருகிற 31-ந் தேதி முதல் வரும் 3-ந் தேதி வரை மாடு விடும் விழாவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ஊர் களுக்கு வேறு ஒரு நாளில் மாடு விடும் விழா நடத்த தேதி ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். 4-ந்் தேதி முதல் மீண்டும் மாடு விடும் விழா நடக்கும்' என்றனர்.
- சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. அவர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொலை செய்து வீசப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த குணப்பிரியா என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து குணப்பிரியாவின் உடலை அடையாளம் காட்டினர்.
வேலூரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் கார்த்தி (வயது22) என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கார்த்தி குணப்பிரியாவை அடித்துக் கொன்று மலையில் இருந்து தள்ளியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.
சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் இன்ஸ்ட்ரா கிராமில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். எனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை காதல் திருமணம் செய்தேன். எனது வீட்டில் எங்களை சேர்க்கவில்லை. இதனால் வேலூர் ஜீவா நகர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம்.
மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தேன்.
குணப்பிரியா 7 மாத கர்ப்பிணியானார். நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த மாதம் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 25-ந்தேதி வேலூர் வந்தார். அவரை பாலமதி மலைக்கு அழைத்து சென்றேன்.
வேலூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து நாம் குடியேறலாம் என குணப்பிரியா தெரிவித்தார். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் அடித்தேன். இதில் குணப்பிரியா இறந்து விட்டார். பின்னர் மலையில் இருந்து தள்ளி விட்டு வந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை சேர்ந்தவர் திருமலைவாசன் (வயது 22) இவர் வேலூர் மாநகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 10 மணிக்கு காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உணவு சப்ளை செய்வதற்காக பைக்கில் சென்றார்.
அப்போது பின்னால் வந்த 3 பேர் அவரது பைக் மீது மோதியுள்ளனர்.இதனை திருமலைவாசன் தட்டி கேட்டார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த 2 பேரும் சேர்ந்து திருமலை வாசனை சரமாரியாக தாக்கினர்.
ஒரு கட்டத்தில் அவர் சுய நினைவை இழந்து தரையில் விழுந்தார். அப்போதும் விடாமல் அவர்கள் அவரை தாக்கியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் சாலையில் வந்தவர்கள் திருமலை வாசனை மீட்டனர்.
இது குறித்து உடனடியாக காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையில் இருந்த திருமலை வாசனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலைவாசன் சுய நினைவு இல்லாமல் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பாக காணப்படும் தனியார் பல்கலைக்கழக பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






