என் மலர்
வேலூர்
- மேயர் சுஜாதா அதிரடி உத்தரவு
- ஆய்வுக்கூட்டம் நடந்தது
வேலூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸடாலின் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மேயர் சுஜாதா, மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை), நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிறார்.
இதையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மேயர் சுஜாதா தலைமை தாங்கி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலையோரம் மண், மணல், எம்-சாண்ட், தேங்காய் ஓடுகள் காணப்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டும். முதல்-அமைச்சர் வந்து செல்லும் சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் திடீரென மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலங்களில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக வைத்திருக்க வேண்டும்.
சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாடுகளை சாலையில் அவிழ்த்து விடக்கூடாது என்று அவற்றின் உரிமையாளர்களிடம் எழுதி வாங்க வேண்டும். அதையும் மீறி கால்நடைகளை அவித்து விட்டால் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், மாநகர் நலஅலுவலர் கணேஷ், உதவிகமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
- வேலூருக்கு நாளை வருகிறார்
வேலூர்:
வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரியார், அண்ணா, கருணாநிதி வழிநின்று சமத்துவ, சமதர்ம மக்களாட்சியை, தமிழ்நாட்டை வழிநடத்தி இந்திய முதல்வர்களில் முதன்மை முதல்வராக முத்திரை பதித்து அனைத்து தரப்பு மக்களிடையே நன்மதிப்பை பெற்று இந்திய முதல்வர்களில் எந்த ஒரு முதல்வரும் செய்யாத சாதனையாக ஒவ்வொருநாளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தீட்டி தமிழ் நாட்டை முன்மாதிரியான மாநில மாக இந்தியாவே போற்றும் வண்ணம் தன்னலமற்ற உழைப்பை நல்கி எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி காட்டிய தமிழ்நாடு முதல்-அமைச்சர், கழக தலைவர் நாளை (புதன்கிழமை) சென்னையிலிருந்து, ரெயில் மூலமாக காட்பாடி ரெயில் நிலையத்திற்கு பகல் 11 மணிக்கு, வருகை தருகிறார்.
அவருக்கு கழக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பை வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வழங்கப்படுகிறது.
இதில் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளைகழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், சிறப்பு அழைப் பாளர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பை வழங்கிட அனைவரும் வருக என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, அண்ணா நகர் 3வது வார்டுக்கு உட்பட்ட ஆற்று பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
அதனை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டது.
அதேபோல், 15 வார்டுகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், அரசின் இலவச வீடு வழங்குதல், மினி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
மேலும், குடிநீர் பைப்புகளில் அடிக்கடி ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகிற 5 ம் தேதி முனீஸ்வரன் கோவில் கும்பா பிஷேகம் நடைப்பெ றுவதால் அதற்கான சாலையை சீரமைத்து தரவேண்டும். பக்தர்கள் வாகனத்தில் வரும் போது போக்கு வரத்துக்கு ஏற்றவாறு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக சாலை அமைத்து தருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உறுதியளித்தார்.
- வைகுண்ட ஏகாதசியின்போதுதான் தேர் ஏழு வீதிகளில் உலா வருகின்றது.
- ரத சப்தமி உற்சவம் ‘அர்த்த பிரம்மோற்சவம்’ என்று அழைக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் உத்திர அரங்கநாதர் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ரத சப்தமியும் ஒன்றாகும். இந்த விழாவின்போது உற்சவர் பல்வேறு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்த நிலையில் நான்கு மாட வீதிகளில் மட்டும் திருவீதி உலா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதற்கு எதிப்பு தெரிவித்து பள்ளிகொண்டா மளிகை தெரு, மண்டபத் தெரு, கொத்தவள் தெரு, பஜனை கோவில் தெரு, பஜார் தெரு, உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் உத்திர அரங்கநாதர் கோவில் மாடத் தெருக்களாக, மாடத் தெரு, சன்னதி தெரு, கோட்டை தெரு, மளிகை தெரு, மண்டப தெரு, கொத்தவள் தெரு, பஜனை கோவில் தெரு என ஏழு தெருக்களிலும் தேர், சப்பரம் சுற்றி பெரிய பஜார் வழியே சென்று நிலை கொள்ளும். தற்போது பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசியின்போதுதான் தேர் ஏழு வீதிகளில் உலா வருகின்றது.
இந்த நிலையில் ரத சப்தமி உள்பட மற்ற உற்சவங்களின் போது நான்கு மாட வீதிகளில் மட்டுமே உலா வரும் புதிய உத்தரவை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து தெருக்களிலும் வீதி உலா வருவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தியிடம் கேட்டதற்கு பெருமாள் கோவிலில் நடைபெறும் ரத சப்தமி உற்சவம் 'அர்த்த பிரம்மோற்சவம்' என்று அழைக்கப்படும். அதாவது பிரம்மோற்சவத்தில் பாதி என்று பொருள். பிரம்மோற்சவம் 10 நாளும் பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் ரத சப்தமி அன்று ஒரே நாளில் தரிசிக்க பெரியோர்களால் இவ்விழா ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆகம விதிகளுக்கு மாறாக ஏற்பட்ட தவறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. ஆகம வல்லுனர்கள், பள்ளிகொண்டா ஸ்தலத்தர், தீர்த்தக்காரர், அருகிலுள்ள திவ்ய தேசமான சோளிங்கர், காஞ்சீபுரம் அத்திவரதர், திருக்கோவில்களில் ஆலோசனைகள் கேட்டு இந்த ஆண்டு முதல் இனிவரும் காலங்களில் பள்ளி கொண்டா கிராமத்தின் நலன், கோவில் நலன், மற்றும் ஆகம விதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி கொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி உற்சவத்தில் பெருமாள் புறப்பாடு நான்கு மாட வீதிகளில் மட்டும் நடைபெறும் என்று கூறினார்.
- வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கணக்கெடுப்பு
- அரசு கருவூலத்தில் பணத்தை அதிகாரிகள் செலுத்தினர்
வேலூர்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.
ஆனால் வடசென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னை யில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர்.
வடசென்னையில் 35 ஆயிரத்து 723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர் களும் ரூபாய் வாங்கவில்லை.
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8026 கார்டு தாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டு தாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டு தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.
வேலூர் மாவட்டத்தில் 7,171 ரேசன் கார்டு தாரர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,897 திருவண்ணாமலை மாவட்டத்தில் 13,385, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,723 ரேசன் அட்டைதாரர்கள் ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம் 25176 ரேசன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.
இந்த தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.
- திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
கிருஷ்ணகிரி, சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). இவர் தனது நண்பர்களான கிருஷ்ணன், ஹரிஷ், சிலம்பரசன் ஆகியோருடன் காரில் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் காரில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பெட்ரோல் பங்க் எதிரே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சர்வீஸ் சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி பின்புறம் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகொண்டா போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பாரதிய ஜனதாவின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெகநாதன், பாபு, மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகநாதன் கலந்து கொண்டு பேசினார்.
இதனையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கிராம மக்கள் பீதி
- வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
குடியாத்தம்:
குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது.அந்த நிலத்திற்கு 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது நிலத்தில் கட்டி வைப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7-30 மணி அளவில் தட்சிணாமூர்த்தியின் நாய் தொடர்ந்து குறைத்தபடி இருந்ததால் மாடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது பசுமாடு ஒன்றை சிறுத்தைகள் கடித்தபடி இருந்ததுள்ளன.
அருகில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது சிறுத்தைகள் அந்த மாட்டை கடித்து குதறி கொண்டு இருந்தது. லைட் வெளிச்சம் கண்டதும் சிறுத்தைகள் தப்பி ஓடி உள்ளன. பயந்துபோன விவசாயி தட்சிணாமூர்த்தி மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார்.
இது குறித்து அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தெரிவித்து அனைவரும் சென்று பார்த்த போது அந்த பசு மாடு இறந்து விட்டிருந்தது.
சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் கார்த்தி பசுமாட்டை பரிசோதனை செய்தார்.
உப்பிரப்பள்ளி கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளில் அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
- சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- மாணவியின் பெற்றோர் வாலிபர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று தாக்கியுள்ளனர்.
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் பணியாற்றும் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் வாலிபர் பேக்கரியில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சந்தோஷை தாக்கியுள்ளனர். பின்னர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
வேலை செய்யும் இடத்திற்கு வந்து தன்னை தாக்கியதாக ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரது சகோதரர் திருநாவுக்கரசு மற்றும் நண்பர்கள் மணி, தரணி ஆகியோருடன் சேர்ந்து மாணவியின் வீட்டிற்குள் புகுந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமுற்ற மாணவியின் குடும்பத்தினரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து பள்ளி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் தந்தை உட்பட 3 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரையும் வீடு புகுந்து தாக்கியவர்களையும் கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள் 3 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
- போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் கடைகளில் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சாவை தடுக்கும் விதமாக ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீசார் இன்று காலை காந்தி ரோடு, பாபு ராவ் தெரு, சைதாப்பேட்டை, மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர்.
- ஜெயிலில் அடைப்பு
- தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை சேர்ந்தவர் திருமலைவாசன் ( வயது 22) இவர் வேலூர் மாநகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை இரவு காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உணவு சப்ளை செய்வதற்காக பைக்கில் சென்றார். அப்போது பின்னால் வந்த 3 பேர் அவரது பைக் மீது மோதியுள்ளனர்.
இதனை திருமலைவாசன் தட்டி கேட்டார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த 2 பேரும் சேர்ந்து திருமலை வாசனை சரமாரியாக தாக்கினர்.
அந்த வழியாக வந்தவர்கள் திருமலை வாசனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து காட்பாடியை அடுத்த வெள்ளக்கல் மேடு பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- வெள்ளி விழாவையொட்டி கலாசார திருவிழாவாக கொண்டாடினர்
- கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1995 முதல் 98-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுக முதலி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மேகலா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் விஐபி பாதுகாப்பு போலீஸ் அதிகாரியமான தயாளன் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளி விழாவையொட்டி கலாசார திருவிழாவாக கொண்டாடப்பட்டது. 1970-ம் ஆண்டு முதல் பாலிடெக்னிக்கில் படித்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் கல்லூரிக்கு நிதியுதவி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.






