search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
    X

    வேலூர் மாநகராட்சியில் நடந்த கூட்டத்தில் மேயர் சுஜாதா பேசிய காட்சி. அருகில் துணை மேயர் சுனில் குமார்,கமிஷனர் அசோக்குமார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

    • மேயர் சுஜாதா அதிரடி உத்தரவு
    • ஆய்வுக்கூட்டம் நடந்தது

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸடாலின் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மேயர் சுஜாதா, மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை), நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிறார்.

    இதையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மேயர் சுஜாதா தலைமை தாங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலையோரம் மண், மணல், எம்-சாண்ட், தேங்காய் ஓடுகள் காணப்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டும். முதல்-அமைச்சர் வந்து செல்லும் சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் திடீரென மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலங்களில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக வைத்திருக்க வேண்டும்.

    சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாடுகளை சாலையில் அவிழ்த்து விடக்கூடாது என்று அவற்றின் உரிமையாளர்களிடம் எழுதி வாங்க வேண்டும். அதையும் மீறி கால்நடைகளை அவித்து விட்டால் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில், மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், மாநகர் நலஅலுவலர் கணேஷ், உதவிகமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×