என் மலர்tooltip icon

    வேலூர்

    • 40 இடங்களில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு வேலூர் வனக்கோட்டத்தில் 40 இடங்களில் நடைபெற்றது.

    தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஈரநிலபரப்பில் வாழும் பறவைகள், நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில், ஈரநிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 28, 29-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, மாநில அளவில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது.

    வேலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 20 இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களில் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த தலா ஒரு பறவைகள் ஆர்வலர்கள், சுமார் 3 வனஊழியர்கள் என 40 இடங்களிலும் சேர்த்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர்.

    அப்போது, காப்புக்காடு, ஊர்புறங்களில் காணும் பறவைகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்தும், வீடியோவாக பதிவு செய்தும் கணக்கிட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கியது.

    இதன் முடிவை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் அரிய வகை பறவைகள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தென்பட்டன.

    திருப்பத்தூர் வனச்சரகம் சார்பில் ஆம்பூர் அருகே பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. காப்புக்காடு பகுதி, நிலப் பகுதியிலும் வனத்துறையினர் பறவையின ஆர்வலர்கள் கணக்கெடுப்பு நடத்தினர்.

    ஆம்பூர் வனச்சரகத்தில் பனங்காட்டேரி ஊட்டல் காப்பு காடு பகுதியில் 2 குழுவினரும் பெரியாங்குப்பம் பெத்லேகம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

    ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனவர்கள் சம்பத், முருகன், செல்வகுமார் உள்ளிட்ட பறவையின ஆர்வலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • குடியாத்தம் நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் வழங்கினார்
    • போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

    குடியாத்தம்:

    வேலூரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி வேலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் படிப்பதற்கு வசதியாக புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை பெட்டியில் புத்தகங்களை போடுமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் வேலூர் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு சென்று அங்கு புத்தக கண்காட்சியில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகிய தலைவர்களின் வரலாற்று புத்தகங்களையும், திராவிடத்தின் ஆட்சி என்னும் தலைப்புகளில் உள்ள புத்தகங்களையும் வழங்கினார்.

    • முப்பெரும் விழாவில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் நாளில் தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கம் சார்பில் முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவில் மாநில பொதுச் செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார்.

    முத்துச்செல்வி, பெருமாள், காயத்ரி, முத்துக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைமை நிலைய செயலாளர் மகேந்திர குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, தமிழ்நாடு நில அளவைத் துறையில் ஆன்லைன் பட்டா முறையில் தள்ளுபடி இனங்கள் மூலம் மறைமுகமாகவும் நேரடியாகவும் களப்பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு உரிய தீர்வு காணப்பட கூட்டு பட்டா முறையை நில அளவர்களுக்கு வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு நில அளவை துறையில் திட்டப்பணியில் நீண்ட காலமாக நில அளவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு நில அளவைத் துறையில் களப்பணியாளர்களின் கூடுதல் இயக்குனர் பதிவு உயர்வு முதல் உதவி இயக்குனர் பதிவு உயர்வு வழங்குவது பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

    இதனால் விதிகளை தளர்த்தி பதிவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். நில அளவைத் துறையில் களப்பணியாளர்கள் ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் போல தள்ளுபடி இடங்களை கிராம நிர்வாக அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என இயக்குனர் உத்தரவிட வேண்டும். சங்கத்தின் சார்பில் இதுவரையில் துறை தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கதிரேசன், வேலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசன்னா திருப்பத்தூர் சந்திரசேகர் ராணிப்பேட்டை ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜோஷி, சீனிவாசன், ஜெயகாந்தன், சத்திய குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சேகர், ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினர்.மாநில துணைத்தலைவர் இளங்கோ துவக்க உரையாற்றினார். சேகர், ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாடு வழங்க வேண்டும்.

    சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர் ஊர் புற நூலகர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, ஆசிரியர், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 42 மாதபணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

    • அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது
    • அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஓட்டேரி ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின்போது ஏரி முழுவதும் நிரம்பாமல் இருந்தது. ஏரியில் தேங்கிய சிறிதளவு தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை ஏரியின் கரை ஓரத்தில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையம் அருகே தேங்கியுள்ள தண்ணீரில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததா அல்லது தற்போது வேலூரில் கொளுத்தி வரும் வெயிலின் காரணமாக மீன்கள் இறந்தனவா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரியில் தண்ணீர் தேங்காத இடங்களில் ஏராளமான ஆடு மாடுகள் மேய்ந்து வருகிறது. விஷம் கலந்த தண்ணீரை குடித்து கால்நடைகள் இறப்பதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரசவ வார்டில் நுழைந்து அட்டகாசம்
    • மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குடியாத்தம் மட்டுமல்லாது சுற்றுப்புற பகுதியில் உள்ள கேவி குப்பம், பரதராமி, ஒடுகத்தூர் பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்திலேயே அதிக பிரசவம் நடைபெறும் மருத்துவமனையாக உள்ளது.இந்த குடியாத்தம் அரசு மருத்துவமனையை நம்பியே இப்பகுதியில் உள்ள ஏழை எளியோர், நடுத்தர வர்கத்தினர், தொழிலாளர்கள் உள்ளனர் அவர்களின் வீட்டு கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ளனர்.

    குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அந்த கூலி தொழிலாளியின் மனைவி பிரசவத்திற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். ஓரிரு தினங்களில் பிரசவம் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கூலி தொழிலாளியின் மனைவி பிரசவ வார்டில் இருந்துள்ளார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முகத்திற்கு மாஸ் அணிந்து கொண்டும் கையில் கிளவுஸ் அணிந்து கொண்டும் டாக்டர் எனக்கூறி பிரசவ வார்டுக்குள் நுழைந்து பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த அந்த கூலி தொழிலாளியின் மனைவியை பரிசோதனை செய்துள்ளார்.

    அப்போது குடிபோதை வாடை வீசவே ஆண் டாக்டர் தங்களை பரிசோதித்ததை கண்டு அதிர்ச்சடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

    இதனை அடுத்து பிரசவ வார்டுக்கு வெளியே இருந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த டாக்டர் எனக் கூறிக்கொண்டு உள்ளே இருந்த மர்ம நபர் வெளியே வந்துள்ளார்.

    அவரை பிடித்து விசாரித்த போது குடிபோதையில் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த டவுன் போலீசார் அந்த நபரை பிடித்து குடியாத்தம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது குடிபோதை யில் இருந்த அந்த நபர் தன்னுடைய பெயர் சுகுமார் என்றும் வயது 36 என்றும் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் முன்னுக்கு பின்னாக மாற்றிக் கூறிக் கொண்டு வந்துள்ளார்.

    பிரசவ வார்டில் பெண் மருத்துவர்கள் பெண் செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிகளை பரிசோதனை செய்வார்கள் பெண் டாக்டர்கள் கர்ப்பிணிகளை பரிசோதனை செய்யும்போது உடன் செவிலியர்கள் இருப்பார்கள் ஆனால் ஒரு ஆண் எப்படி பிரசவ வார்டுக்குள் டாக்டர் என்று கூறிய உள்ளே நுழைந்தார் என அதிர்ச்சியாக உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து அந்த தொழிலாளியின் உறவினர்கள் கூறியதாவது:-

    பெண்ணின் ஆண் உறவினர்கள் பிரசவ வார்டில் அனுமதிக்காத போது எப்படி டாக்டர் எனக் கூறிக்கொண்டு குடிபோதையில் ஒரு நபர் உள்ளே அனுமதிக்கப்பட்டார் அவர் எடக்கு மடக்காக பரிசோதனை என்ற பெயரில் கர்ப்பிணி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தாலும் அல்லது வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தாலும் யார் பொறுப்பு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பாதுகாவலர்கள் உள்ளனர் இவ்வளவு அலட்சியமாக இருப்பார்களா என தெரியவில்லை இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கட்டிட இடுபாடில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செய்து காட்டினர்
    • நிலநடுக்கத்தின் போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்

    வேலூர்:

    தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி பல்கலைக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்ற போலி ஒத்திகை பயிற்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மீட்புக் குழு துணை கமாண்டர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிலநடுக்கத்தில் கட்டிட இடுபாடில் மாணவர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று பேரிடர் மீட்பு குழுவினர் போலி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மாணவர்களை காப்பாற்றினர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் போது பேரிடர் மீட்பு குழு, மருத்துவ குழு, தீயணைப்பு குழு, பொதுப்பணித்துறை, ஆம்புலன்ஸ் ஆகிய துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.

    அவ்வாறு இணைந்து செயல்பட்டால் தான் பேரிடரில் இருந்து மக்களை உயிருடன் காப்பாற்றலாம் என்றனர்.

    • வாடகை பாக்கி தராததால் நடவடிக்கை
    • பணிகள் பாதிப்பு

    வேலூர்:

    காட்பாடி வள்ளிமலை சாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகம் லிடியா சரோஜினி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகையில் இயங்கி வருகிறது.

    இந்த கட்டிடத்திற்கு மாதம் 2000 ரூபாய் வாடகை. கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் இதன் உரிமையாளர் இன்று அலுவலகத்தை பூட்டினார். மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யார்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் நாராயணி மருத்துவமனை எதிரே காலியாக உள்ள இடத்தில் மரத்தில் முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட பொது மக்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அரியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் பிணத்தை மீட்டனர்.

    தூக்கில் தொங்கிய முதியவர் நீல நிற சட்டையும், காவி வேட்டியும் அணிந்து தாடி வைத்து இருந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    அவரது சட்டை பாக்கெட்டில் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான மருந்து சீட்டுகள் இருந்தது. இதனால் இறந்து கிடந்தவர் ஆரணி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.2 ஆயிரம் அபேஸ்
    • ெஜயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் பொய்கை, கன்னிகாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38).

    இவர் நேற்று பொய்கை சந்தை மேடு எதிரே உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பழனிச்சாமியிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து பழனிசாமி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழனிசாமியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் சைதாப்பேட்டை சரிப் சுபேதார் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் அருண் (25) என தெரியவந்தது.

    போலீசார் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அருண் ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்டதாக ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலெக்டர் தகவல்
    • மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய் துறை மூலம் வழங்கப்பட கூடிய பட்டா உள்ளிட்ட சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி சாலை மேம்பாடு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர்களின் திறன் மேம்பாடு பொதுகட்டமைப்பு வசதிகள் கல்வி மருத்துவம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

    தொடர்ந்து கலெக்டர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கள ஆய்வில் முதல்அமைச்சர் திட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதன் தொடர்ச்சியாக கள ஆய்வில் முதல்அமைச்சர் திட்டத்தின்கீழ் வாரம் ஒருமுறை நடத்தப்பட்ட துறைசார்ந்த ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

    அனைத்து துறைகளிலும் முதல் - அமைச்சர் ஆலோசனையின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பணிகளில் முந்தைய காலங்களைவிட 3 மடங்கு அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரி பாக்கி செலுத்தாததால் நடவடிக்கை
    • நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் சொத்து வரி, குழாய் குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை நீண்ட காலமாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. வீட்டு வரி, குழாய் குடிநீர் கட்டணம், சொத்து வரி, கடை உரிமம் புதுப்பித்தல், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி செலுத்தாமல் நீண்ட காலம் பாக்கி வைதிருப்பவர்களின் விவரங்கள் சேகரித்து அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது.

    இதனை பொருட்ப டுத்தாமல் இருந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி அறிவுறுத்தலின் பேரில், கணக்காளர் அரவிந்தன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வரி செலுத்த கால அவகாசம் முடிந்த நபர்களின் வீடுகளில் குழாய் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ×