என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Jio organizers went on a fast"

    • 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜோஷி, சீனிவாசன், ஜெயகாந்தன், சத்திய குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சேகர், ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினர்.மாநில துணைத்தலைவர் இளங்கோ துவக்க உரையாற்றினார். சேகர், ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாடு வழங்க வேண்டும்.

    சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர் ஊர் புற நூலகர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, ஆசிரியர், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 42 மாதபணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

    ×