என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரி செலுத்தாத வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை அகற்றிய போது எடுத்த படம்.
பள்ளிகொண்டா பேரூராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
- வரி பாக்கி செலுத்தாததால் நடவடிக்கை
- நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா பேரூராட்சியில் சொத்து வரி, குழாய் குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை நீண்ட காலமாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. வீட்டு வரி, குழாய் குடிநீர் கட்டணம், சொத்து வரி, கடை உரிமம் புதுப்பித்தல், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி செலுத்தாமல் நீண்ட காலம் பாக்கி வைதிருப்பவர்களின் விவரங்கள் சேகரித்து அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது.
இதனை பொருட்ப டுத்தாமல் இருந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி அறிவுறுத்தலின் பேரில், கணக்காளர் அரவிந்தன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வரி செலுத்த கால அவகாசம் முடிந்த நபர்களின் வீடுகளில் குழாய் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.






