என் மலர்
நீங்கள் தேடியது "Survey work intensity"
- 40 இடங்களில் நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
வேலூர்:
நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு வேலூர் வனக்கோட்டத்தில் 40 இடங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஈரநிலபரப்பில் வாழும் பறவைகள், நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், ஈரநிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 28, 29-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாநில அளவில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
வேலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 20 இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களில் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த தலா ஒரு பறவைகள் ஆர்வலர்கள், சுமார் 3 வனஊழியர்கள் என 40 இடங்களிலும் சேர்த்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர்.
அப்போது, காப்புக்காடு, ஊர்புறங்களில் காணும் பறவைகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்தும், வீடியோவாக பதிவு செய்தும் கணக்கிட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கியது.
இதன் முடிவை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் அரிய வகை பறவைகள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தென்பட்டன.
திருப்பத்தூர் வனச்சரகம் சார்பில் ஆம்பூர் அருகே பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. காப்புக்காடு பகுதி, நிலப் பகுதியிலும் வனத்துறையினர் பறவையின ஆர்வலர்கள் கணக்கெடுப்பு நடத்தினர்.
ஆம்பூர் வனச்சரகத்தில் பனங்காட்டேரி ஊட்டல் காப்பு காடு பகுதியில் 2 குழுவினரும் பெரியாங்குப்பம் பெத்லேகம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனவர்கள் சம்பத், முருகன், செல்வகுமார் உள்ளிட்ட பறவையின ஆர்வலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






