என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த காட்சி.
வேலூரில் கள ஆய்வின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆலோசனையால் திட்டப்பணிகளில் 3 மடங்கு முன்னேற்றம்
- கலெக்டர் தகவல்
- மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய் துறை மூலம் வழங்கப்பட கூடிய பட்டா உள்ளிட்ட சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி சாலை மேம்பாடு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர்களின் திறன் மேம்பாடு பொதுகட்டமைப்பு வசதிகள் கல்வி மருத்துவம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.
தொடர்ந்து கலெக்டர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கள ஆய்வில் முதல்அமைச்சர் திட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக கள ஆய்வில் முதல்அமைச்சர் திட்டத்தின்கீழ் வாரம் ஒருமுறை நடத்தப்பட்ட துறைசார்ந்த ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அனைத்து துறைகளிலும் முதல் - அமைச்சர் ஆலோசனையின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பணிகளில் முந்தைய காலங்களைவிட 3 மடங்கு அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






