என் மலர்
வேலூர்
- பட்டியல் சமுதாய நிதியை திருப்பி அனுப்பியதை கண்டித்து நடந்தது
- 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்த பா.ஜ.க.வினர்
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்திற்கான துணை திட்டம் நிதி இணை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும் தாங்கள் மனம் போன போக்கில் செலவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இன்றளவும் பட்டியல் சமுதாயம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் வீடு இல்லாமலும் கம்மா புறம்போக்குகளில் வாழும் அவல நிலை நீடித்து வருகிறது.
அதேபோல சுடுகாட்டிற்கு இன்றும் பாதை இல்லாமலும் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியாத தேக்க நிலை நீடித்து வருகிறது.
இத்தகைய சூழலில் மத்திய அரசு தமிழகத்திற்கு 2022 - 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கிய ரூ.16,442 கோடி நிதியில் ரூ.10,46 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையில்.சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கர் சிலையிடம் பாஜகவினர் முறையிட்டு மனு அளித்தோம் என்றனர்.
- அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேச்சு
- வேலூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
வேலூர்:
வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி மகளிர் 7 ஆயிரத்து 70 பேருக்கு சேலை, 70 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 570 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, 27 நபர்களுக்கு தையல் எந்திரம்- மற்றும் சலவை பெட்டி வழங்கும் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடந்தது.
மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர், நந்தகுமார் எம்.எல்.ஏ., அவை தலைவர் முகமது சகி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் கதிர்ஆனந்த் எம்.பி., குடியாத்தம் எம்எல்ஏ அமலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவர் பேசியதாவது:
திராவிட இயக்கத்தின் பங்கு என்று பார்க்கும்போது, தி.மு.க 1949-ம் ஆண்டு தொடங்கி இருந்தாலும் கூட, முதன் முதலாக 1957-ம் ஆண்டு தேர்தலில் நின்றது. அப்போது தமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் தான் தி.மு.க வென்றது.
அதில் காவேரிக்கு அந்த பகுதியில் ஒரே எம்.எல்.ஏ வெற்றி பெற்றார். குளித்தலையில் கருணாநிதி வெற்றி பெற்றார். காவேரிக்கு இந்த பகுதியான வட மாவட்டங்கள் என்று சொல்லபட்ட இங்கு மட்டும் 4 எம்.எல்.ஏ.க்கள் உருவாக்கிய பெருமை உண்டு.
தி.மு.க இயக்கத்தை இன்னும் 50 ஆண்டு காலத்துக்கு அழைத்து செல்ல இளைஞர் பட்டாளம் தேவை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னால் இளைஞர்கள் கூட்டம் திரள வேண்டும். தமிழகத்தை காப்பற்ற வேண்டிய பொறுப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் ஜெயலலிதாவும், பழனிசாமியும் திராவிடம் என்ற வார்த்தையை உச்சரித்ததில்லை. திராவிடம் என்று சொன்னால் நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.
திராவிடம் என்றால் தமிழனின் அடையாளம் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்களுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால் தான் தமிழ்நாட்டின் முதல்வர் முதன் முதலில் உரையாற்றும்போது 'திராவிட மாடல் ஆட்சி' என்று சொன்னார்.
வேலுார் மையப்பகுதியில் பழமையான பென்ட்லேண்ட் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவனை புனரமைப்பு செய்யப்பட்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்தார்கள். கடந்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் சொன்னபோது, அந்த அரசு செவிடாக இருந்தது.
தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு வேலுார் தலைநகரில் ரூ.150 கோடியில் பென்ட்லேண்ட் மருத்துவனை புனரமைக்க முதல் - அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
திருமண உதவி திட்டம் தி.மு.க கொண்டு வந்த திட்டம். அதனுடன் தாலிக்கு தங்கம் என சேர்த்து ஒரு திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டு காலம் என்ன நிலைமை? அந்த திட்டத்துக்கு தங்கமும் தரவில்லை. தாலியும் தரவில்லை. 3 லட்சத்து 49 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தது.
ஏற்கனவே, தங்கத்தை வாங்கி கொடுத்தவர்கள் சரியாக வாங்கி கொடுக்கவில்லை. தகரத்தை வாங்கி கொடுத்ததாக 42 அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்கிறது. இதனால் ஸ்டாலின் இந்த திட்டத்தை மாற்றி யோசித்தார்.
பெண்கள் படிக்க வேண்டும். அதற்காகத்தான் கல்லுாரிகளில் படிக்கும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் உதவித்தொகை என்ற புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி காலை உணவு திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.விஜய், முன்னாள் எம்.எல்.ஏ.நீலகண்டன், மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பறக்கும்படை தீவிர கண்காணிப்பு
- தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
வேலூர்:
தமிழ்நாட்டில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் இந்த பொதுத்தேர்வுக்காக 81 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 8,247 மாணவர்கள் 8,723 மாணவிகள் என மொத்தம் 16970 பேர் தேர்வு எழுதினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில் இன்று பொது தேர்வு நடந்தது.266 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15,481 மாணவிகள் 15,467 மாணவர்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 948 பேர் பொதுத்தேர்வு எழுதினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 மையங்களில் இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. 14,923 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். இந்த மாவட்டத்தில் 68 நிலையான மற்றும் கண்காணிப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக 56 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 12,294 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.தேர்வில் முறைகேடுகள் தடுக்க 130 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் பொதுத்தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தேர்வு தொடங்கிய சில மணி நேரத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் அன்னியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகள் அதிகாலையில் பள்ளி வளாகத்தில் குவிந்திருந்தனர்.
மாணவிகள் பலர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.
வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயில் கைதிகள் 4 பேர் பிளஸ் 2 பொதுதேர்வு எழுதினர்.
தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த கைதிகள் 2 பேர் உடல்நிலை காரணமாக தேர்வு எழுத செல்லவில்லை.
- விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- பணி தொடர்பான முன்அறிவிப்பு பலகை இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது
அணைக்கட்டு:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடையஞ்சாத்து பகுதி ஜெயராம் நகரில் பாலகிருஷ்ணன் தெரு, கண்ணன் தெரு, துரைசாமி தெரு மற்றும் கன்னியம்மாள் தெரு உள்ளிட்டவைகள் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 250 குடியிருப்புகள் உள்ளனர். இந்த பகுதியில் சாலையின் நடுவே மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. மழைநீர் கால்வாயை கடந்து பொதுமக்கள் செல்ல தரைப்பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக கடந்த 1 மாதத்திற்கு முன்பு சாலையின் நடுவே தரைப்பாலம் அமைக்க பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆனால் இதுநாள் வரை பணி தொடங்கப்படாமலும், அங்கு எந்த அறிவிப்பு பலகை வைக்கப்படாமலும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து, எழுந்து செல்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆபத்தான நிலையில் உள்ள இந்த பள்ளத்தை தினமும் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அசமப்பாவித சம்பவம் ஏற்படும் முன்பாக பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும் பணி தொடர்பான முன்அறிவிப்பு பலகை இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் இது தொடர்பானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் வள்ளி தெய்வானை சமேத முருகர், தட்சிணாமூர்த்தி ,மகாவிஷ்ணு, பிரம்மா, ராகு,துர்க்கை மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கலசங்களை வைத்து பூஜைகள் நடந்து வந்தது. இன்று காலை கணபதி ஹோமம் ,கோ பூஜை பூர்ணா ஹூதி நடந்தது.
இதையடுத்து யாகசாலை யில் வைக்கப்பட்டிருந்த புனித கலசம் மேளதாளம் முழுங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
- பறக்கும் படை தீவிர கண்காணிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,970 மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் 6 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8,247 மாணவர்கள், 8,723 மாணவிகள் என்று மொத்தம் 16,970 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்.
அவர்கள் தேர்வு எழுதுவதற்காக 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள உள்ளன. தேர்வவு மையங்களை கண்காணிக்க 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வில் காப்பியடிப்பவர்களை பிடிக்கவும், ஆள்மாறாட்டத்தை கண்டறியவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 89 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர கலெக்டர், வருவாய் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
வினாத்தாள்கள் 19 வழித்தடங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.தேர்வு தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.
முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடைபெறும்.
தேர்வு மையங்களில் இருந்து முன்கூட்டியே மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- வேலூர் கிரீன் சர்க்கிளில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுசா, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்து கொண்டு பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பார்வையாளர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் மனோகரன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுகன்யா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராறில் விரக்தி
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த அன்பூண்டி கிராமத்தை சேர்ந்த வினோத் (32) இவர் லாரி பாடிபில்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் இருந்துள்ளார். கனவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதனால் மனமுடைந்த வினோத் தனது படுக்கறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது அங்கு வினோத் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கொடி மரங்களில் தங்கமுலாம்
- பக்தர்கள் உதவி செய்ய வேண்டுகோள்
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோவில் சுமார் 400 ஆண்டுகள் வழிபாட்டில் இல்லாமல் இருந்தது.
வேலூர் சத்துவாச்சாரியில் இருந்த ஜலகண்டேஸ்வரர் சிலையை கோவிலில் வைத்து வழிபட முடிவா னது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவிலில் சிலை வைக்கும் பணிக்காக ஜலகண் டேஸ்வரர் கோவில் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது.
இந்த குழுவின் திட்டப்படி அப் போதைய கலெக்டர் கங்கப்பா வழி காட்டுதலின்படி கடந்த 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வேலூர் கோட்டையில் இருந்த கோவில் கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன்பிறகு தொல்லியல் துறையால் சிலையை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. கோவிலின் முதல் கும்பாபிஷேக விழா கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-10 தேதியும், 2-வது கும்பாபிஷேகம் விழா 1997- ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும், மூன்றாவது
கும்பாபிஷேக விழா 2011-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடத்தப்பட்டது.
இந்நிலையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலின் நான் காவது கும்பாபிஷேகம் விழா நடத்தப்படவுள்ளது. இது வளாகத்தில் விழாக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. சண்முகம் கூறும்போது, "வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நான்காவது கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
யாகசாலை பூஜை வரும் ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். வரும் ஜூன் 25-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவை யொட்டி பொதுமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கலாம்.
கும்பாபிஷேக விழா வின் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் இருக்கும் அனைத்து கலசங்கள் மற்றும் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரூ32 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது
- பக்தர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ32 லட்சம் மதிப்பீட்டில் உற்சவர் மண்டபம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் பிரகாசம், மில்பழனி, கைத்தறி சங்கத் தலைவர் மொழிமாறன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன், ஜோதி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் ஆய்வாளர் பாரி அனைவரையும் வரவேற்றார்.
உற்சவர் மண்டபம் கட்டும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, அரசு வக்கீல் விஜயகுமார் நகர மன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், ஏகாம்பரம் உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது
- 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வலியுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.சி. பிரேம்குமார், மகேஷ்பாபு, கல்பனாசந்தர், தங்கவேலு, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமசிவம், ஜெயராமன், ஜீவானந்தம், கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் நிதியை குறைத்து சீர்குலைத்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.
100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்தியும் கூலியாக 600 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும்.
இந்த திட்டத்திற்காக 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடக்கோரியும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தகவல்
- தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணி கிடைத்துள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாய நிலத்துக்கான வரைபடம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக துணை நில அளவையர் விஜய கிருஷ்ணன் (47), உதவியாளர் கலைவாணன் (27) ஆகியோர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில் விஜய கிருஷ்ணனிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.33 ஆயிரத்து 500, கலைவாணனிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் லஞ்சமாக வரப்பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''விஜய கிருஷ்ணனின் தந்தை நில அளவையராக இருந்தவர். பணியில் இருக்கும்போதே இறந்ததால் அவரது பணி கருணை அடிப்படையில் விஜய கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
விஜய கிருஷ்ணனின் தந்தை யாரிடமும் பணம் வாங்காதவர் என்று பெயர் எடுத்தவர். ஆனால் அவருக்கு நேர்மறையாக பணம் வாங்கிக் கொண்டுதான் வேலை செய்வாராம்.
குடியாத்தம் வட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பணியிட மாறுதல் பெற்று வந்தவரிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இருப்பதில்லை. எல்லா கோப்பைகளையும் உடனுக்குடன் பார்ப்பதற்காகவே 3 பேரை முறைகேடாக வேலைக்கு நியமித்துள்ளார்.
அவர்களுக்கு கணினியில் வரும் கோப்புகளை கையாள்வது, வரைபடம் வரைவது, பணம் வாங்குவது என எல்லா வேலைகளும் செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்களுக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் வரையிலான சம்பளத்தை லஞ்சப் பணத்தில் இருந்தே விஜய கிருஷ்ணன் கொடுத்துள்ளார். அதில்லாமல் தினசரி வரும் லஞ்சத்திலும் பங்கு கொடுத்துள்ளார்.
விஜய கிருஷ்ணன் செய்கின்ற வேலைகளை பெரும்பாலும் அந்த 3 பேரும்தான் செய்வார்கள். அதிக பணம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் விஜய கிருஷ்ணன் நேரில் சென்று நில அளவை செய்யும் வேலை செய்துள்ளார்.
ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் இல்லாமல் வீட்டுக்கு செல்ல மாட்டாராம். லஞ்ச பணத்தை உல்லாசமாக இருக்கவே செலவு செய்துள்ளார். அரசு விதிகளை மீறி முறைகேடாக பணி நியமனம் செய்தது குறித்து விசாரித்தபோது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில அளவையர் அலுவலகங்களிலும் இதுபோன்று முறைகேடாக நியமிக்கப்பட்ட பலர் பணியாற்றி வருவதாக விஜய கிருஷ்ணன் கூறியுள்ளார்'' என்றனர்.






