என் மலர்
நீங்கள் தேடியது "Catalog Community Fund"
- பட்டியல் சமுதாய நிதியை திருப்பி அனுப்பியதை கண்டித்து நடந்தது
- 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்த பா.ஜ.க.வினர்
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்திற்கான துணை திட்டம் நிதி இணை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும் தாங்கள் மனம் போன போக்கில் செலவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இன்றளவும் பட்டியல் சமுதாயம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் வீடு இல்லாமலும் கம்மா புறம்போக்குகளில் வாழும் அவல நிலை நீடித்து வருகிறது.
அதேபோல சுடுகாட்டிற்கு இன்றும் பாதை இல்லாமலும் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியாத தேக்க நிலை நீடித்து வருகிறது.
இத்தகைய சூழலில் மத்திய அரசு தமிழகத்திற்கு 2022 - 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கிய ரூ.16,442 கோடி நிதியில் ரூ.10,46 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையில்.சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கர் சிலையிடம் பாஜகவினர் முறையிட்டு மனு அளித்தோம் என்றனர்.






