என் மலர்
நீங்கள் தேடியது "Pooja of earth to build mandapam"
- ரூ32 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது
- பக்தர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ32 லட்சம் மதிப்பீட்டில் உற்சவர் மண்டபம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் பிரகாசம், மில்பழனி, கைத்தறி சங்கத் தலைவர் மொழிமாறன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன், ஜோதி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் ஆய்வாளர் பாரி அனைவரையும் வரவேற்றார்.
உற்சவர் மண்டபம் கட்டும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, அரசு வக்கீல் விஜயகுமார் நகர மன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், ஏகாம்பரம் உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.






