search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரும் ஜுன் மாதம் 25-ம் தேதி கும்பாபிஷேகம்
    X

    வரும் ஜுன் மாதம் 25-ம் தேதி கும்பாபிஷேகம்

    • வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கொடி மரங்களில் தங்கமுலாம்
    • பக்தர்கள் உதவி செய்ய வேண்டுகோள்

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோவில் சுமார் 400 ஆண்டுகள் வழிபாட்டில் இல்லாமல் இருந்தது.

    வேலூர் சத்துவாச்சாரியில் இருந்த ஜலகண்டேஸ்வரர் சிலையை கோவிலில் வைத்து வழிபட முடிவா னது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவிலில் சிலை வைக்கும் பணிக்காக ஜலகண் டேஸ்வரர் கோவில் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது.

    இந்த குழுவின் திட்டப்படி அப் போதைய கலெக்டர் கங்கப்பா வழி காட்டுதலின்படி கடந்த 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வேலூர் கோட்டையில் இருந்த கோவில் கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதன்பிறகு தொல்லியல் துறையால் சிலையை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. கோவிலின் முதல் கும்பாபிஷேக விழா கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-10 தேதியும், 2-வது கும்பாபிஷேகம் விழா 1997- ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும், மூன்றாவது

    கும்பாபிஷேக விழா 2011-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடத்தப்பட்டது.

    இந்நிலையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலின் நான் காவது கும்பாபிஷேகம் விழா நடத்தப்படவுள்ளது. இது வளாகத்தில் விழாக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. சண்முகம் கூறும்போது, "வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நான்காவது கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    யாகசாலை பூஜை வரும் ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். வரும் ஜூன் 25-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவை யொட்டி பொதுமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கலாம்.

    கும்பாபிஷேக விழா வின் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் இருக்கும் அனைத்து கலசங்கள் மற்றும் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×