என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு"

    • பறக்கும்படை தீவிர கண்காணிப்பு
    • தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

    வேலூர்:

    தமிழ்நாட்டில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த பொதுத்தேர்வுக்காக 81 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 8,247 மாணவர்கள் 8,723 மாணவிகள் என மொத்தம் 16970 பேர் தேர்வு எழுதினர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில் இன்று பொது தேர்வு நடந்தது.266 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15,481 மாணவிகள் 15,467 மாணவர்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 948 பேர் பொதுத்தேர்வு எழுதினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 மையங்களில் இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. 14,923 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். இந்த மாவட்டத்தில் 68 நிலையான மற்றும் கண்காணிப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக 56 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 12,294 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.தேர்வில் முறைகேடுகள் தடுக்க 130 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று காலையில் பொதுத்தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தேர்வு தொடங்கிய சில மணி நேரத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் அன்னியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

    இதேபோல் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகள் அதிகாலையில் பள்ளி வளாகத்தில் குவிந்திருந்தனர்.

    மாணவிகள் பலர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.

    வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயில் கைதிகள் 4 பேர் பிளஸ் 2 பொதுதேர்வு எழுதினர்.

    தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த கைதிகள் 2 பேர் உடல்நிலை காரணமாக தேர்வு எழுத செல்லவில்லை.

    ×