என் மலர்tooltip icon

    வேலூர்

    • தேன் எடுக்க சென்ற போது விபரீதம்
    • மருத்துவமனை ஊழியர்கள் மூலம் மொட்டை அடிக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று மாலையில் எடுக்க தீப்பந்தத்துடன் சென்றனர்.

    தேனீக்கள் தேன் எடுக்கச் சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.

    அதில் சிலர் தப்பி ஓடி உள்ளனர் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட 3 பேரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியது உள்ளது.

    மோகன்பாபு (வயது 20), ராஜேஷ் (19) என்பவர்களை உடல் முழுவதும் தேனீக்கள் கொட்டியுள்ளது. தலை முழுவதும் தேனீக்கள் கொட்டியும் தேனீக்கள் கொடுக்குகள் இருந்தது. அவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் மூலம் மொட்டை அடித்து சிகிச்சை அளித்தனர். தேனீக்கள் கொட்டியதால் வீரியம் அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் வலியால் துடித்தனர்.

    டாக்டர்கள் எஸ்.மஞ்சுநாத், கே.மணிகண்டன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மோகன்பாபு மற்றும் ராஜேஷின் உடலில் இருந்த ஏராளமான தேனீக்களின் கொடுக்குகளை அகற்றினார்கள்.

    இவர்களுடன் சென்ற சசி (வயது 15) 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார் இவரையும் தேனீக்கள் விரட்டியதில் தவறி விழுந்து இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண் (13) அப்பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து தேன் கூட்டை சிறுவர்களுடன் சென்று கலைக்க முயன்றுள்ளார். அப்போது தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் சரண் காயம் அடைந்தார்.

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    • உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று ஆக்கிரமிப்பு செய்த நபர் கிராம மக்களிடம் தகராறு
    • அளவிடு செய்து சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பூஞ்சோலை கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில், கிராமத்திற்கு சொந்தமாக சுமார் 40 சென்ட் இடம் சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது.

    ஆனால், காலப்போக்கில் சுடுகாட்டை அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தார். இதனால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில், பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ராமக்கா என்ற மூதாட்டி நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அவரது உடலை எரிப்பதற்காக அவரது உறவினர்கள் சுடுகாடு பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், இங்கு உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று ஆக்கிரமிப்பு செய்த நபர் கிராம மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்து பயிர் வைத்துள்ள இடத்தை உடனே அகற்றி சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் சிறப்பு தனிப்பிரிவு போலீசார் வருவாய்த் துறையினர், ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி ராமன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 40 செண்டு இடத்தை முறையாக அளவிடு செய்து சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை வித்யாபீடம் பாரதிமுரளிதர சுவாமி, மகாதேவமலை மகானந்த சித்தர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, ரோட்டரி கவர்னர் ஜே.கே.என்.பழனி, அரசு மருத்துவமனை ஆலோசனைகுழு உறுப்பினர் கள்ளூர்ரவி, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சீவூர்துரைசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்., அரசு, ம.மனோஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.யுவராஜ்.கெங்கைம்மன் கோவில் நாட்டாண்மை சம்பத், தர்மகர்த்தா பிச்சாண்டி, ஆர்.ரவிசங்கர், எம். முத்து உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ஆட்டோமோகன் மற்றும் உறுப்பினர்கள், விழாக்குழுவினர், புவனேஸ்வரிபேட்டை பொதுமக்கள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    • உடல் நலக்குறைவால் விபரீதம்
    • போலீசார் விசாரனை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 26) கோவில் அர்ச்சகர்.

    அந்த பகுதியில் இருக்கும் 4 கோவில்களுக்கும் தின ந்தோறும் பூஜை செய்து வருவது வழக்கமாக கொண்டு இருந்தார்.

    அருள்ராஜிக்கு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை அடிக்கடி இருந்து வந்தது. இதற்காக மருத்துவ மனையில்சிகிச்சை பெற்றும் வந்தார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதனால் மன உலைச்சலுக்கு ஆளானார். பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செயது கொண்டார். இதனை கண்ட அவரது தாயார் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலூம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ்காரர் மீது எஸ்.பி. ஆபீசில் புகார்
    • பணத்தை திரும்ப பெற்று தர வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.

    சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது அணைக்கட்டு அடுத்த கீழ் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த கோமதி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நானும் எனது கணவர் சதீஷ் குமாரும் சேர்ந்து என்னுடைய உறவினர் வெளிநாடு செல்ல ரூ.7 லட்சம் கடனாக வாங்கி தந்தோம்.

    வெளிநாடு சென்ற உறவினர் சிறிது நாட்கள் வட்டியை கட்டினார். பின்னர் பணத்தை திருப்பி தரவில்லை. கடன் கொடுத்தவர்கள் எனது மாமியார் வீட்டில் பணத்தைக் கேட்டு தகராறு செய்ததால் அவர்கள் என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விட்டனர்.

    கடனாக வாங்கிக் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் எனது உறவினர்கள் மிரட்டல் விடுக்கின்றனர்.

    பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    இதே போல் பழைய காட்பாடி சேர்ந்த விஜயா என்பவர் கொடுத்த மனுவில் என்னுடைய கணவர் என்னை விட்டுவிட்டு சென்று விட்டார்.

    எனது மகள் விஜயலட்சுமி எம் பி ஏ படித்து இருந்தார். எங்கள் வீட்டில் அருகே குடியிருந்த போலீஸ்காரர் ஒருவர் மின்வாரிய அலுவலகத்தில் எனது மகளுக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் வாங்கிக் கொண்டார்.

    இதுவரை பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    • வீட்டில் இருந்த நகையை அடகு வைத்து ஏமாந்த அவலம்
    • பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் வந்தது.

    அதனை வாலிபர் பின் தொடர்ந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்போனுக்கு ஒரே லிங்க் அனுப்பினர்.

    அதில் அதிக பொருட்கள் மற்றும் ஓட்டல்களை காட்டி இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். முதலில் 100 ரூபாய் 150 ரூபாய் என வாலிபர் அந்த லிங்கில் முதலீடு செய்தார்.

    அதில் அவருக்கு இரண்டு முதல் 3 மடங்கு லாபம் கிடைத்ததாக கணக்கு காட்டியது.

    அதிக பணம் கிடைக்கும் என்று ஆசையில் தொடர்ந்து வாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஆன்லைனில் முதலீடு செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் தீர்ந்து போனது.

    இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணத்தை கொண்டு வந்து ஆன்லைனில் முதலீடு செய்தார். மேலும் வங்கியில் கடன் வாங்கியும் அவர் பணம் கட்டியுள்ளார். ரூ.32 லட்சம் வரை வாலிபர் பணத்தை கட்டிய பிறகு அதனை எடுக்க முயன்றார்.

    ஆனால் முடியவில்லை. ஆன்லைன் முதலீடுகளை முழுவதாக முடித்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என அதில் தெரிவித்தனர்.

    அப்போதுதான் வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன
    • ஏ.டி.எம். திறக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    அவற்றில் 7 கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில கடைகள், ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மீதமுள்ள 68 கடைகள் ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்தனர்.பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே 4 தடவைக்கு மேல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் நாளை வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கடைகள் ஏலம் தொடர்பான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    இதனை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். மாநகராட்சி விதியில் கூறியுள்ளபடி வைப்புத் தொகை மற்றும் முன்பணம் செலுத்த அறிவுறுத்தினர்.

    புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.சில வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.

    பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை.

    இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கடைகளை விரைந்து திறக்கவும், புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம்

    போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜூலி தலைமை தாங்கினார். தலைவர் மல்லிகா, மாநில செயற்குழு உறுப்பினர் தேவி, பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    மாவட்டத் துணைச் செயலாளர் ரம்யா, துணைத் தலைவர் வேதவள்ளி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், மாநில குழு உறுரப்பினர் எம்.பி. ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

    கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுமுறை வழங்கிட வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 7 நாட்களுக்கு முன்பு தொடங்கியது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பகுதியில் அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற உத்திரரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 7 நாட்களுக்கு முன்பு துவாஜாரோஹனம் கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. இன்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி தலைவர் சுபபிரியா, திருக்கோயில் கணக்காளர் சரவணபாபு, மணியம் ஹரிஹரன் இன்ஸ்பெக்டர் கருணகரன் கலந்து கொண்டனர்.பள்ளி கொண்டா பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • மருமகனிடம் விசாரணை
    • நிலதகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா?

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி.

    இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    ஜெயலட்சுமி தனது கணவருடன் லத்தேரி கலைஞர் நகரில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். செல்வத்திற்கு விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு மகள் வீட்டிற்கு வந்த செல்வம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் செல்வம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்பாடி டி.எஸ்.பி பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

    செல்வம் தலையில் பலத்த காயங்கள் இருந்தது.

    பின்னர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிலதகராறு காரணமாக உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செல்வம் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவரது மருமகனிடம் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுகடைகள் மூட வலியுறுத்தல்
    • வல்லண்டராமம் கிராமத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரித் திருவிழா வருகிற 9, 10-ந் தேதிகளில் நடக்கிறது.

    அண்ணாச்சி பாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

    புஷ்பரத ஏரித்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலூர் ஆர்டிஓ கவிதா தலைமை தாங்கினார்.

    அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய ஊர் மேட்டுக்குடிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கொடி அம்மன் கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை வரவேற்று பேசினார்.

    வருகிற 9-ந் தேதி இரவு 12 மணிக்கு அம்மன் புஷ்ப ரதத்தில் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்ற உடன், வல்லண்டராமம் கிராமத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

    10-ந் தேதி காலை 5.30 மணி வரை நடத்திவிட்டு 6 மணிக்கு புஷ்பரதத்தை அண்ணாச்சி பாளையம் கிராமத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். ஆடுகள் மற்றும் கோழிகளை கோவில் முன்பு உள்ள தென்னந்தோப்பில் பலியிட வேண்டும். புஷ்பரதத்தின் முன்பு ஆடு, கோழிகளை பலியிட அனுமதி இல்லை.

    புஷ்ப ரதம் செல்லும் சாலைகளில் தாழ்வாக உள்ள மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும். சுகாதார வசதி, முதலுதவி சிகிச்சை முகாம், 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும், கோடை காலம் என்பதால் பக்தர்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடிநீர் அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார்களை பழுது பார்க்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மாவட்டத்தில் 2 வது பெரிய திருவிழா பொற்கொடியம்மன் தேர் திருவிழா ஆகும் இதனை அரசு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும், மேலும் சுற்றுப்பகுதியில் இருக்கும் அரசு மதுகடைகளை ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் கோவில் கணக்காளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகேந்திரன், சுகுமார், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அணைக்கட்டு பிடிஓ சுதாகரன், ஊர் மேட்டுக்குடிகள், அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
    • கோஷங்களை எழுப்பினர்

    அணைக்கட்டு:

    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் பிரகல்நாதன் தலைமையிலும், அணைக்கட்டு வட்ட தலைவர் சதீஷ், வட்ட செயலாளர் ஜோதி, அணைக்கட்டு வட்ட பொருளாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேலும் தூத்துக்குடியில் விஏஓவை அலுவலகத்தில் புகுந்து வெட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இதில் காவல் துறை மெத்தனம் காட்டுவதாக போலீசார் மற்றும் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

    ×