என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1 லட்சம் மோசடி"

    • போலீஸ்காரர் மீது எஸ்.பி. ஆபீசில் புகார்
    • பணத்தை திரும்ப பெற்று தர வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.

    சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது அணைக்கட்டு அடுத்த கீழ் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த கோமதி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நானும் எனது கணவர் சதீஷ் குமாரும் சேர்ந்து என்னுடைய உறவினர் வெளிநாடு செல்ல ரூ.7 லட்சம் கடனாக வாங்கி தந்தோம்.

    வெளிநாடு சென்ற உறவினர் சிறிது நாட்கள் வட்டியை கட்டினார். பின்னர் பணத்தை திருப்பி தரவில்லை. கடன் கொடுத்தவர்கள் எனது மாமியார் வீட்டில் பணத்தைக் கேட்டு தகராறு செய்ததால் அவர்கள் என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விட்டனர்.

    கடனாக வாங்கிக் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் எனது உறவினர்கள் மிரட்டல் விடுக்கின்றனர்.

    பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    இதே போல் பழைய காட்பாடி சேர்ந்த விஜயா என்பவர் கொடுத்த மனுவில் என்னுடைய கணவர் என்னை விட்டுவிட்டு சென்று விட்டார்.

    எனது மகள் விஜயலட்சுமி எம் பி ஏ படித்து இருந்தார். எங்கள் வீட்டில் அருகே குடியிருந்த போலீஸ்காரர் ஒருவர் மின்வாரிய அலுவலகத்தில் எனது மகளுக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் வாங்கிக் கொண்டார்.

    இதுவரை பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    ×