தொழிலாளி அடித்து கொலை

மருமகனிடம் விசாரணை நிலதகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா?
வீட்டின் அருகே செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்த காட்சி.
வீட்டின் அருகே செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்த காட்சி.
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி.

இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

ஜெயலட்சுமி தனது கணவருடன் லத்தேரி கலைஞர் நகரில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். செல்வத்திற்கு விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு மகள் வீட்டிற்கு வந்த செல்வம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் செல்வம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்பாடி டி.எஸ்.பி பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

செல்வம் தலையில் பலத்த காயங்கள் இருந்தது.

பின்னர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நிலதகராறு காரணமாக உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செல்வம் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அவரது மருமகனிடம் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com