என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனீ கொட்டியவர்களுக்கு மொட்டை அடித்து சிகிச்சை
    X

    தேனீ கொட்டியவர்களுக்கு மொட்டை அடித்து சிகிச்சை

    • தேன் எடுக்க சென்ற போது விபரீதம்
    • மருத்துவமனை ஊழியர்கள் மூலம் மொட்டை அடிக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று மாலையில் எடுக்க தீப்பந்தத்துடன் சென்றனர்.

    தேனீக்கள் தேன் எடுக்கச் சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.

    அதில் சிலர் தப்பி ஓடி உள்ளனர் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட 3 பேரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியது உள்ளது.

    மோகன்பாபு (வயது 20), ராஜேஷ் (19) என்பவர்களை உடல் முழுவதும் தேனீக்கள் கொட்டியுள்ளது. தலை முழுவதும் தேனீக்கள் கொட்டியும் தேனீக்கள் கொடுக்குகள் இருந்தது. அவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் மூலம் மொட்டை அடித்து சிகிச்சை அளித்தனர். தேனீக்கள் கொட்டியதால் வீரியம் அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் வலியால் துடித்தனர்.

    டாக்டர்கள் எஸ்.மஞ்சுநாத், கே.மணிகண்டன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மோகன்பாபு மற்றும் ராஜேஷின் உடலில் இருந்த ஏராளமான தேனீக்களின் கொடுக்குகளை அகற்றினார்கள்.

    இவர்களுடன் சென்ற சசி (வயது 15) 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார் இவரையும் தேனீக்கள் விரட்டியதில் தவறி விழுந்து இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண் (13) அப்பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து தேன் கூட்டை சிறுவர்களுடன் சென்று கலைக்க முயன்றுள்ளார். அப்போது தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் சரண் காயம் அடைந்தார்.

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×