என் மலர்tooltip icon

    வேலூர்

    • பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    வேலூர்:

    வேலூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இதில் மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்ட பகுதி கள், பழைய நகராட்சி எல்லைக்குள் விடுபட்ட பகு திகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த நிலையில் சாலைகள் குண் டும், குழியுமாக உள்ளன.

    இதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகி தப்பட்டறை, சாரதி நகர், எல்ஐசி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட் டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டத்தின் பிரதான குழாய் இணைப்பு ஆற்காடு சாலையில் வருவதால் ஆற்காடு சாலையிலும் பாதாள சாக்கடை திட் டப்பணியும், அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங் கும் பணியும் நடந்தது.

    இப்பணிகளால் சைதாப்பேட்டை முரு கன் கோவில் தொடங்கி சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் நெடுஞ்சாலை இணைப்பு வரை போக் குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது.

    இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முருகன் கோவில் அருகில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

    சாலையில் வரும் வாகனங்கள் எதிர் எதிரே வருவதால் காகிதப்பட்டறையில் ஆற்காடு சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனைத் தவிர்க்க இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வாலிபர் கைது
    • ரோந்து பணியில் சிக்கினார்

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது வீட் டில் இருந்த மின்மோட்டர் மற்றும் பாய்லரை கடந்த மாதம் 24-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்து கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை சில்க்மில்க் பகுதியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காந்திநகர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பதும், மின் மோட்டரை திருடியதும் தெரியவந்தது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்தது
    • பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று பக்தர்கள் 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடி வாரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்று, மலைக்குகை கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது.

    மலை அடிவாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்து. வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட் டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இரவு சுமார் 7 மணி அளவில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆறுமுகசாமிக்கு விபூதி காப்பு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர்.
    • 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

    வேலூர்:

    ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ரெயில் விபத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் செய்யப்பட்டனர். 15 குழுக்களை சேர்ந்த 500 பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஒடிசா மாநிலத்திற்கு செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

    ஒடிசா ரெயில் விபத்து சம்பந்தமாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தை செர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணித்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை அவர்களின் உறவினர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0416 2258016 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056214 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபர்
    • நேர்மையை பாராட்டி எஸ்.பி. வாழ்த்து தெரிவித்தார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மொர்ச பள்ளியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் நந்தகுமார்.

    இவர் நேற்று பேரணாம்பட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் அருகே ரூ. 10 ஆயிரம் கீழே கிடந்தது.

    இதனை கண்ட நந்தகுமார் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பணத்தை தவறவிட்டவர்கள் யார் என விசாரணை நடத்தினர். அப்போது பணத்தை தவறவிட்ட விஜய் என்பவர் ஏடிஎம் மையத்திற்கு வந்தார். விஜய் ஏடிஎம் மையத்தின் கீழே கிடந்த பணத்திற்கு உண்டான ஆவணங்களை காண்பித்ததால் அவரிடம் ரூ. 10 ஆயிரத்தை திருப்பி தரப்பட்டது. இது குறித்து அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நந்தகுமாரின் நேர்மையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், தொரப்பாடி, ஜீவா நகரை சேர்ந்தவர் வைரமுடி. இவரது மகன் பாபு. இவர் நேற்று இரவு கணியம்பாடி ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த ரெயில் பாபு மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட பாபு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஏடிஎம் மையம் இல்லை
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றங்கரையோரம் 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ 53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

    புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர், குடியாத்தம், ஆம்பூர், பேரணாம்பட்டு, ஓசூர் பல்வேறு ஊர்கள், மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது

    அதேபோல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டா கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

    ஆனால் ஏடிஎம் மையம் அமைக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஏடிஎம் மையம் இல்லாததால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிபடுகின்றனர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் நேஷனல் தியேட்டர் சர்க்கிள் அல்லது காட்பாடி சில்க் மில் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே புதிய பஸ் நிலையத்தில் ஏடிஎம் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காய்கறியின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது
    • பொதுமக்கள் அதிர்ச்சி

    வேலூர்:

    வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் நேற்று முதல் காய்கறியின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி கத்தரிக்காய் 1 கிலோ ரூ.90-க்கும், பீன்ஸ் ரூ.60, புடலை ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.80, பீன்ஸ் ரூ.85, கேரட் ரூ.65, பாகற்காய் ரூ.60, முருங்கை ரூ.80, பீட்ரூட் ரூ.55 வெண்டை ரூ.70, முள்ளங்கி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வரத்து குறைந்ததால் ரூ.10- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி, ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் இஞ்சியும் அதிகபட்சமாக ரூ.200 வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் காவலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.

    பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர், நீல நிற டீசர்ட் மற்றும் கருப்பு கலர் லோயர் அணிந்து உள்ளார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில், வேலூரில் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துறை முருகன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்.

    மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரி பிரச்சினை குறித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள்
    • 7 மாத பயிற்சி நடக்கும்

    வேலூர்:

    தமிழகத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான தேர்வு நடந்தது.

    இதில் வேலூர் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ராமநாதபுரம் சிவகங்கை திருவாரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 273, 2-ம் நிலை பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கு வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இன்று பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    பயிற்சி கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் துணை முதல்வர், துணை முதல்வர் முருகன் ஆகியோர் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தனர்.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண் போலீசாருக்கு நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் 6 மாதம் நடைபெற உள்ளது.

    இைதயடுத்து பயிற்சி முடித்த பெண் காவலர்கள் ஒரு மாத காலம் போலீஸ் நிலையங்களுக்கு சென்று பயிற்சி பெறுவார்கள்.

    7 மாத பயிற்சி முடித்த பெண் காவலர்கள் போலீஸ் நிலையத்தில் பணி அமர்த்தபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆற்றில் கொண்டு போய் விட்டனர்
    • வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மலையில் ராஜா கோட்டை, ராணி கோட்டை ஆகியவை உள்ளது. இந்த மலையில் பாம்பு உள்பட ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

    அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. மலைப்பகுதிக்கு கீழ் ஏராளமானோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சாரை பாம்பு ஒன்று வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    அப்போது ஒருவரின் வீட்டுக்குள் ஊர்ந்து சென்றது.

    பாம்பு வருவதை வீட்டுக்குள் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் அப்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பை ஆற்றில் கொண்டு போய் பத்திரமாக விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×